
கொடைரோடு அருகே பள்ளபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சந்தோசபுரத்தில், பழமை வாய்ந்த சன்னாசி முருகன் கோவில் அமைந்துள்ளது. முருகனுக்கு வலது புறம் சிவனும், இடதுபுறம் மீனாட்சி அம்மன், ஐயப்பன் வெளிப்புறத்தில் துர்க்கை அம்மன், நவக்கிரகங்கள் அரச மரத்தடியில் விநாயகர் கோவில்கள் அமைந்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு சோழவந்தான் அருகே விவேகானந்தர் பள்ளியில் உள்ள சுவாமிகள் சேர்ந்து மலையின் மேல் முருகன் உடைய வேல் உன்ற பட்டு பக்தர்கள் வணங்கி வந்தனர். ஒரு சில மாதங்களுக்கு முன்பு மலையின் மேல் சித்தேஸ்வரர் சிவன் கோவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கீழுள்ள சிவனுக்கும் ,மலை மேல் உள்ள சித்தேஸ்வரருக்கும் , நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் அபிஷேகங்கள் நடைபெற்றது. பிரதோஷ விழாவில் சுற்றியுள்ள கிராம மக்கள் ,பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.