திமுகவின் ஆட்சிக்கு இயற்கை என்ற இறைவன்  கொடுத்த தண்டனையா?

அரசியல் ஆன்மீகம் சமூகம் ட்ரெண்டிங் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

 

இயற்கையின் பேராபத்து குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் ,ஆட்சியாளர்களும் ,மக்களும் அதை கண்டு கொள்வதில்லை.

சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தினால் மக்களால் அதை தங்க முடியாது. அடுக்குமாடி குடியிருப்புகள், காடுகளை அழிப்பது ,ஏரிகளை ஆக்கிரமித்துக் கொள்வது, ஆற்று மணலை அடியோடு சுரண்டி விடுவது, மலைகளை வெட்டி எடுப்பது, ரசாயன கழிவுகளை நீரிலும், நிலத்திலும் கலப்பது ,காற்றை மாசுபடுத்துவது, இவை அனைத்திற்கும் இயற்கை தண்டனை கொடுத்து விட்டது.

இது ஒருபுறம் என்றால், மற்றொரு புறத்தில் கடவுளை ,மனசாட்சி இல்லாமல் பேசி வந்தது ,கோயில் பணத்தை கொள்ளையடிப்பது, சட்டத்தை, நீதியை நிர்வாகத்தை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்துவது, தவறுகளை சுட்டி காட்டினால் ,அதற்கு எப்படியும் பேசி விளக்கம் கொடுத்து, மக்களை முட்டாள் ஆக்கி  தங்களை அறிவுஜீவிகளாக காட்டிக் கொள்வது, அனைத்திற்கும் இனி  இயற்கையின் தண்டனை மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உண்டு. மேலும்,

மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகையில் தொடர்ந்து இது பற்றி ஆய்வு செய்து தான் இந்த செய்தியை அரசுக்கும் ,மக்களுக்கும் கொடுத்து வருகிறேன் .சில மாதங்களுக்கு முன்பு எழுதி இருந்தோம் .அதாவது மனிதன் இயற்கையை அழித்தால், மனிதனை இயற்கை அழித்துவிடும். இது கட்டுரையாகவே வெளியிட்டு இருந்தேன். இந்த ஆட்சியில் இயற்கைக்கு எதிரான மணல் கொள்ளை, மலை கொள்ளை இதற்கு பரிசாகத்தான் இறைவன் என்ற இயற்கை,  திடீரென்று வரலாறு காணாத மழை வெள்ளத்தை கொடுத்து விட்டார்.

சென்னையில் கொடுத்து முடிந்ததும் இப்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் மிகப்பெரிய கனமழையால்  வெள்ள அபாயம் ஏற்பட்டு, மக்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகள், காவல்துறை ,இந்த இயற்கையின் பேரிடரில் இருந்து மக்களை பாதுகாப்பாக காப்பாற்றுவது மிகப்பெரிய சவால்களாக இருந்து வருகிறது.

 அதாவது வெள்ளம் வருவதற்கு முன் தான் அணை போட முடியும் .வெள்ளம் வந்த பிறகு அதை தடுத்து நிறுத்த யாராலும், அணை போட முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இந்தப் பெருவெள்ளம் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பு . இந்த பாதிப்பால் ,பேரிழப்பு, பொருட்சதம், உணவு, உடை, தங்குமிடம், அனைத்திற்கும் மக்கள் படும் வேதனை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர்கள் எவ்வளவுக்கு, எவ்வளவு இந்த கார்ப்பரேட் மீடியாவில் திமிராக பேசி வருகிறார்களோ ,அவளுக்கு அவ்வளவு இறைவன் இயற்கையின் மூலம் இந்த ஆட்சிக்கு எதிரான தண்டனை கொடுத்து விட்டார்.

இதனால், மக்கள் செய்த தவறுக்கு இது தண்டனை .அதாவது ,இவர்கள் எப்படி சுயநலமாக இருக்கிறார்களோ, அந்த சுயநலத்திற்கு இறைவன் கொடுத்த தண்டனை. நல்ல விஷயங்களை அலட்சியப்படுத்துவது, நல்ல கருத்துக்களை, நல்லவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. ஆணவத்தில் மக்கள் போடுகின்ற ஆட்டம் ,அதாவது டிவி ,சீரியல், சினிமா இதற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள், குடி போதைக்கு அடிமையாகி கூத்தாடிக் கொண்டிருப்பது, பணம் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருப்பது, இவை அனைத்திற்கும் இப்படிப்பட்ட மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும், இறைவன் கொடுக்கின்ற தண்டனை . மேலும்,

 சட்டத்தை ஏமாற்றலாம், நீதியை விலைக்கு வாங்கலாம், மனசாட்சி இல்லாமல் எப்படியும், பேசலாம் ,ஆட்சி அதிகாரம் நம்மிடம் உள்ளது நாம் வைப்பது தான் சட்டம், அந்த சட்டம் இயற்கையிடம் வேகாது என்பதை நிரூபித்து விட்டது. இனியாவது இந்த மக்களும் ,ஆட்சியாளர்களும் தங்களை திருத்திக் கொள்வார்களா?

தவிர,முதல்வர் வெள்ள நிவாரணத்திற்காக தொழில் அதிபர்களிடமும், சினிமாக்காரர்களிடமும் ,வசூல் செய்த பணம் முறையாக மக்களுக்கு கொடுக்கிறார்களா? அல்லது அதிலும் கணக்கு காட்டுகிறார்களா ?மேலும் மத்திய அரசின் வெள்ள நிவாரண நிதி எத்தனை கோடி என்பது வெளியில் தெரிகிறது .ஆனால் ,மாநில அரசின் நிவாரண நிதி எவ்வளவு? என்பதை இனி மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் .

இது தவிர, வெள்ள நிவாரணத்திற்காக கொடுக்கப்படும் முதல்வர் நிவாரண நிதி வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் . மேலும், நீங்கள் கார்ப்பரேட் கம்பெனி மீடியாக்களை வைத்து  நல்லவர்கள் வேஷம் போட்டு  பேசி கொண்டிருந்தால், மக்கள் தொடர்ந்து ஏமாளிகளாக ஏமாந்து கொண்டிருப்பார்கள் என்று ஆட்சியாளர்களும், அரசியல் கட்சிகளும் தமிழ்நாட்டில் இனி கனவு காண முடியாது என்பதை புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *