திமுக அமைச்சர்களுக்கு ஊழல் வழக்குகளில் ஏற்படும் சட்ட நெருக்கடிகளை சமாளிக்க அட்வகேட் ஜெனரல் மாற்றமா ?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

திமுக அரசு தற்போது ஊழல் வழக்குகளில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை எப்படி காப்பாற்றுவது?  என்பது அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி. இதில் ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் அதிமுக, திமுக 2 ஆட்சிகளிலும் நடந்துள்ள ஊழல் வழக்குகளை சோமோட்டாவாக எடுத்து  விசாரணைக்கு கொண்டு வந்து விடுகிறார்.

 இது ஆட்சிக்கு அவ பெயரும், அரசியல் சட்ட நெருக்கடிகளும் ஏற்படுகிறது. அப்படி என்றால், இதுவரையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் தப்பித்து வந்தார்களா ? இதை சமாளிக்க திறமையான சட்ட வல்லுநர்களை அட்வகேட் ஜெனரலாக நியமிக்க திமுக அரசு முடிவு எடுத்து, இதுவரை சண்முகசுந்தரம் இருந்து வந்த அட்வகேட் ஜெனரல் பொறுப்புக்கு, கே. எஸ். ராமன் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது ஊழல் அமைச்சர்களை காப்பாற்றும் சட்ட போராட்டமா?  உண்மையிலேயே நீதிமன்றத்திற்கு கொடுக்கின்ற நெருக்கடியா?  இதில் அரசியல் நீதிமன்றத்திற்குள் வந்தால், நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கக்கூடும் .அதுமட்டுமல்ல ,சாமானிய மக்களுக்கு கிடைக்கக்கூடிய நீதி கேள்விக்குறியாகும். அதனால், நீதித்துறை மிக, மிக கவனத்துடன் செயல்பட வேண்டிய காலகட்டத்திற்கு வந்துள்ளது.

 தற்போது அரசியல் அதிகாரமா?  அல்லது நீதி துறையின் அதிகாரமா?  என்ற போட்டி உள்ளே வந்துள்ளது. சட்டத்தின் மாண்புதான் நீதிமன்றத்தில்  நீதிபதிகள் மாண்பு.எனவே, இது அரசுக்கும், நீதிமன்றத்திற்கும் உள்ள அரசியல் .இந்த அரசியலில் எந்த நீதிபதிகள் தங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்?  அப்படி இல்லாதவர்களை வேறு எங்கேயாவது மாற்றும் திட்டமா? 

மேலும், நீதிபதிகளின் சுதந்திரம் பறிக்கப்படுமா?  இத்தனை கேள்விக்கும் ,உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தில்  நடக்கின்ற முன்னாள், இந்நாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகள் விசாரணை குறித்து கண்காணிப்பது, நீதிபதிகளுக்கு தகுந்த பாதுகாப்பு, ஆலோசனைகள் ,சட்டப் பிரச்சனைகள், அனைத்தையும் கண்காணிக்க வேண்டிய அவசியத்திற்கு, நீதிமன்றத்திற்குள் அரசியல் வராமல் பார்த்துக் கொள்வது உச்ச நீதிமன்றத்தின் முக்கிய பொறுப்பு என்பதை சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *