திமுக அரசின்மீது பல அதிருப்திகள் பொதுமக்கள் மத்தியில் உள்ள நிலையில் அரசு அதிகாரிகள்! அதற்கு முட்டுக் கொடுக்கிறார்களா ?தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா?

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு மாவட்டம் ரிசன்ட் போஸ்ட்

மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில், மக்களின் பிரச்சினைகளை கோரிக்கையாகவும், அவர்களுடைய கருத்துக்களை பிரதிபலிக்கும் பத்திரிகையாகவும், உண்மையான செய்திகளை நடுநிலையோடு வெளியிட்டு வருகிறது.

இப்படிப்பட்ட பத்திரிகைகள் வெளியிட்டு வரும் உண்மை கருத்துக்கள், உண்மை செய்திகளுக்கு கூட அரசு அதிகாரிகள், அதற்கு உரிய தீர்வு காணாமல் சுய லாபங்களுக்காகவும், உள்ளாட்சி நிர்வாகிகளின் லாபங்களுக்காகவும், பணியாற்றுகிறார்கள் என்றால், இதைவிட ஒரு மோசமான நிர்வாகம் எதுவும் இருக்க முடியாது.மேலும்,

உண்மையை வெளிப்படையாகவே எடுத்துரைக்கின்ற எமது பத்திரிகை மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் பல கிராமங்களில் நடைபெற்ற ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது .ஆனால், எமது சொந்த கிராமத்திலே இப்படிப்பட்ட அவலங்கள் நடக்கும் போது, அதை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் இருப்பது ,நான் பத்திரிகை துறையில் இருப்பதற்கும், பத்திரிகை நடத்துவதற்கும் தகுதியற்ற ஒரு நிலையை அது உருவாக்கி விடும்.

 அதனால் தான், என்னுடைய பத்திரிகையின் லெட்டர் பேடில் விடையூர் கிராமத்தில் நடைபெற்ற வேலி காத்தான் மர காடுகள் 1.5 இலட்சத்துக்கு அரசு ஏலம் நடத்தி இருக்கிறார்கள். இந்த ஊரில் வசிக்கும் எங்களுக்கு தான் தெரியும் அந்த மரத்தினுடைய மதிப்பு எவ்வளவு என்பது? அதனால் தான், அது பற்றி புகார் அளித்துள்ளேன்.மேலும்,

கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் ஏழுமலை மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து 57 லட்சத்திற்கு விட்டதாக கிராமத்தில் பேசி வருகின்றனர். தவிர ,இதைப்பற்றி கிராமத்தில் சண்முகம் மற்றும் நான்கைந்து பேர் கேட்டபோது, அவர்கள் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு அழைத்து இருக்கிறார்கள்.

 அந்த விசாரணையின் போது ஊரில் யாரெல்லாம் பணம் வாங்கினார்களோ,அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து காவல் நிலையத்தில் சினிமாவில் வரும் காட்சி போல, இவர்கள் எல்லாம் நல்லதுக்கு பாடுபடக் கூடியவர்கள் போல பேசி இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில், அதிகாரிகள் அதிகாரிகளாக செயல்பட வேண்டும். அரசியல்வாதிகளாக மாறிவிடக்கூடாது. ஆட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் அதிகாரிகள் அதிகாரிகளாக தான் இருப்பார்கள்.

 அதனால் ,மாவட்ட ஆட்சியர், துறை செயலாளர், தலைமைச் செயலாளர், இவர்களுக்கு எல்லாம் கொடுக்கப்பட்ட புகார் மனு மீது, இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது தெரியவில்லை? மேலும், பொது சொத்து என்பது ஆளாளுக்கு அதை பங்கு போட்டுக் கொள்ள பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு எந்த உரிமையும் இல்லை.

மேலும், கூட்டத்தைப் பார்த்து அதிகாரிகள் எந்த முடிவும் எடுக்க கூடாது. உண்மை நிலையை பார்த்து தான் முடிவு எடுக்க வேண்டும். அதை நேரில் சென்று ஆய்வு செய்து முடிவெடுங்கள். தங்கள் சுய லாபங்களுக்காக குறைந்த மதிப்பீடு செய்த அதிகாரிகள் மீது, நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும். இந்த ஊரில் எதற்கு இதற்கு அதிகாரிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும் .

மேலும் இப்ப பிரச்சனை அரசியலாக்காமல் நியாயமான முறையில் இந்த ஏலத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் . மேலும் இவர்களெல்லாம் ஊரில் வதந்திகளை பரப்பிக் கொண்டு உண்மை நிலை என்ன என்பது எமது புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது அது பற்றிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கை.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *