தமிழ்நாட்டில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்தது தற்போது அதில் ஏகப்பட்ட கண்டிஷன்களை கொண்டு வந்துள்ளது இது எல்லோருக்கும் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது . மேலும், மாவட்ட ஆட்சியர்கள்,அரசு அதிகாரிகள், இதற்காக தமிழக முழுதும் தாலுகா அலுவலகம், உணவு பொருள் வழங்கல் துறை, நகராட்சி ,பேரூராட்சி அலுவலர்கள், கூட்டுறவு கடை சேல்ஸ் மேன்கள், பரபரப்பாக வேலை பார்க்கிறார்கள். இதைப் பற்றி பல ஊடகங்களும் மக்களிடம் பெருமையாக எடுத்துச் சொல்லி வருகிறது.
ஆனால்,இது பற்றி சாமானிய மக்கள் பேசும் போது ,இதை ஏன்? இந்த கண்டிஷன்களை எல்லாம் தேர்தல் நேரத்தில் சொல்லவில்லை? அப்போது எல்லோருக்கும் என்று சொல்லிவிட்டு ,இப்போது இவர்களுக்கு இவ்வளவு வருமானம் ,எவ்வளவு மின்சாரம், இப்படி ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டு இதை ஏன் அறிவித்தார்கள்? இதுதான் பாமர மக்களின் கேள்வி?
இது தவிர, இந்த ஆயிரம் ரூபாய் கொடுத்து என்ன ஆகப் போகிறது? தக்காளி விலை கிலோ 200 என்று இருக்கிறது அரிசி முதல் அனைத்து பொருட்களின் விலைவாசி, எல்லா பொருட்களின் மீதும் உயர்ந்துள்ளது. இது மிகுந்த மக்களின் வெறுப்புக்கு, இந்த நிர்வாகமும், திமுக அரசின் செயல்பாடும் உள்ளது. இப்போது மக்கள் யாரை நம்புவது? என்ற கேள்வியில் தான் தமிழ்நாட்டின் அரசியல் இருந்து வருகிறது.
யாருமே உழைக்காமல் ,மக்களுக்கு சேவை மனப்பான்மை இல்லாமல், அரசியல் செய்வது ஒருபுறம், மற்றொரு புறம் மீடியாவிலே எல்லாவற்றையும் செய்து கொண்டிருப்பது, இதை தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் செய்து கொண்டிருக்கிறது என்கிறார்கள். இது தவிர, ஒருவரைப் பற்றி ஒருவர் தரக் குறைவான விமர்சனங்கள் பேசியே, மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தால், மக்கள் இதைக் கேட்டு சலிப்படைந்து விட்டார்கள்.
என்னைப் பொறுத்தளவில் மக்களின் எதிர்பார்ப்பை விட ,அரசியல் கட்சிகட்சியினர் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஒரு பக்கம் மக்களிடம் உழைப்பு குறைந்து, வருமானமும் குறைந்து ,விலைவாசி உயர்வும் அதிகமானால், வாழ்க்கை என்பது போராட்டங்களால் நிரம்பி இருக்கிறது.
இதைப்பற்றி எந்த அரசியல் கட்சியும் பேசாமல், ஒருவருடைய ஊழல்கள், இன்னொரு அரசியல் கட்சிக்கு அது சாதகமானது என்று பேசிக் கொண்டிருப்பது, மக்களிடம் எந்த அளவிற்கு அது பயனளிக்கும் ?என்று தெரியவில்லை .
மக்கள் வாழ்க்கையின் போராட்டத்தில் இருக்கும்போது, அரசியல் கட்சிகளும், திமுக அரசும், மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல், வாயிலே பேசி கதையை ஓட்ட வேண்டும் என்றால், இனி எந்த அரசியல் கட்சியாலும், தமிழ்நாட்டில் அரசியல் நடத்தி வெற்றி காண முடியாது. என்னதான் மீடியாவில் இவர்கள் கூவிக் கொண்டிருந்தாலும் , மக்களின் வறுமை இதையெல்லாம் கேட்கும் அளவில் இருக்காது.
அதனால், இனி வரும் காலத்தில் அரசியல் என்பது கடும் போட்டியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மக்கள் கேள்வி கேட்கவும், சிந்திக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். அரசியல் கட்சிகள் சொல்வதை இனி எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? வாயிலே கதை பேசி விட்டு, மீடியாவில் அரசியல் நடத்திக் கொண்டு இருந்தால், அது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி இருந்தாலும், தமிழ்நாட்டில் மக்களின் வாக்கு யாருக்கு என்பதை உறுதி செய்ய முடியாத நிலைமை தான் இருக்கும் என்பது உறுதி.