திமுக அரசின் நில ஒருங்கிணைப்பு திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களில் சவுடு மண் கொள்ளை .

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி மற்றும் மூர்த்தி நாயக்கன்பட்டியில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடன் பொதுப்பணித்துறை ,வருவாய்த்துறை, காவல்துறை , என அனைத்தும் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு, விவசாயத்திற்கு என்று காரணம் காட்டி, குடியிருப்பு பகுதிகளுக்கு இந்த மண்ணை விற்பனை செய்து வருகிறார்கள் என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு. மேலும்,

மக்கள் அதிகாரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த சட்டத்தை கொண்டு வரும் போதே, இதற்கான விளக்கத்தை செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதுதான் இப்போது தமிழகத்தில், கிராமங்களில் திமுக அரசு நடத்த திட்டமிட்டு நடத்தி வரும் நில ஒருங்கிணைப்பு திட்டம். அதாவது இந்த பேருக்கும், இந்த திட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

https://youtu.be/0YesP6zoVqM

நில ஒருங்கிணைப்பு திட்டம் என்றால் என்ன? குளம், ஏரிகளில் உள்ள புறம்போக்கு நிலங்களில் ஒருங்கிணைத்து சவுடு மண் எடுப்பதுதான் நில ஒருங்கிணைப்பு திட்டமா? என்ற கேள்வியை விவசாயிகள் கேட்கிறார்கள். தவிர,அதாவது இவர்கள் எந்த திட்டம் தீட்டினாலும் ,அதில் விஞ்ஞான பூர்வமாக தீட்டுவார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும் அமைச்சர் துரைமுருகன் இந்த திட்டத்தை போட்டு, சட்டப்படி நாங்கள் கொள்ளையடிக்கிறோம் என்றால், அது முட்டாள்களிடம் தான் பேச வேண்டும். எத்தனை விவசாயிகள் மண் எடுக்கிறார்கள்? எந்தெந்த நிலத்திற்கு அந்த மண்ணை நிரப்ப போகிறார்கள்? அந்த நிலத்தில் எவ்வளவு பள்ளம் உள்ளது?

https://youtu.be/wUEg21XEnqo

இது எல்லாம் கேட்காமல் ஒரு விவசாயிக்கு எப்படி நீங்கள் மண் அள்ளுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு தருகிறார்? உங்களுடைய சட்டம் ஓட்டை சட்டம். இது நீதிமன்றத்தில் கொண்டு சென்றால், அத்தனை அதிகாரிகளும், இதலே மாட்டுவார்கள். மேலும், ஏரி மண் எடுத்து, இதுவரை எத்தனை விவசாயிகள் இந்த 50 ஆண்டு காலத்தில் எத்தனை பேர் பயன்படுத்திருக்கிறார்கள்? அதற்கான விளக்கத்தை துறைமுருகன் தர முடியுமா?

https://youtu.be/HZbU6tYY9HE

அதிகாரம் ,ஆட்சி இருக்கிறது என்று எதை வேண்டுமானாலும் ,அதை மக்களிடம் திணிக்க முடியாது. ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தாலோ அல்லது இந்த தமிழ்நாட்டின் சாபத்தாலோ ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள். இதில் சட்டம் தெரிந்தவர்கள், அரசியல் தெரிந்தவர்கள் போராட வேண்டி இருக்கிறது. மக்களின் பிரச்சினைகளை சரிசெய்ய நாதியில்லை. அவர்களுடைய கோரிக்கைகளை செய்வதற்கு நாதியில்லை. ஆனால், கொள்ளையடிப்பதற்கு மட்டும் முன்னாடி நிற்கிறார்கள். அதற்காக எத்தனை சட்ட வேண்டுமானாலும் அதை வளைத்து பார்க்கிறார்கள்.

https://youtu.be/li4SltmR3c4

நாட்டில் எழுத படிக்க தெரியாமல், அரசியல் தெரியாமல் பந்தா காமித்து அவர்களிடம் அரசியல் செய்வதுதான், தமிழ்நாட்டின் கேடுகெட்ட அரசியல். இதிலே சமூக அக்கறை காட்டுவது போல் நடித்து பேசி, டிராமா காண்பித்து ஆங்காங்கே அரசியல் செய்யும் அரசியல் கட்சியினர், தங்களுடைய சொந்த ஊரில் இது போன்ற இயற்கை வளங்களை அழிக்க நில ஒருங்கிணைப்பு திட்டத்தின் மூலம் திட்டத்தை தீட்டி இருக்கிறார்கள்.

இயற்கை வளங்களை அழிப்பதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. அதனால், இவையெல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் அதிகாரத்தில், பொதுமக்கள் சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் இதற்காக போராட ஆரம்பித்திருக்கிறார்கள்.

 ஆனால், மணல் கொள்ளை வியாபாரிகள், அதிகாரிகளின் ஆதரவோடு விவசாயத்திற்கு மண் எடுப்பதாக பொய்யான நாடகத்தை நடத்தி, கிராம மக்களை ஏமாற்றம் வேலைதான் ,இந்த ஏரி குளங்களில், மண்ணெடுக்கும் வேலை. இதில் மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக சென்று அங்கு எத்தனை அடி ஆழம் வரை மண் எடுக்கிறார்கள் ? எத்தனை பேர் விவசாயிகள்? அந்த மண்ணை விவசாய நிலத்தில் சமன்படுத்த எடுத்துக் கொண்டு போகிறார்களா? அல்லது விற்பனை செய்ய எடுத்துக் கொண்டு போகிறார்களா? என்பதை எத்தனை மாவட்ட ஆட்சியர்கள் இதுவரை ஆய்வு செய்திருக்கிறார்கள்? ஆக கூடி இந்த சட்டம் கிராம மக்களை ஏமாற்றி மண் எடுக்கும் திட்டம். இதுபோல் கிரவல் மண் சட்டத்திற்கு புறம்பாக சுமார் 25 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கடந்த காலத்தில் செய்த ஊழல் திமுக அமைச்சர் பொன்முடி, இப்போது சட்டத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார். இனிவரும் காலத்தில் அமைச்சர்களை மட்டுமல்ல, அதிகாரிகளும் சேர்த்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றால்தான், இதற்கு ஒரு தீர்வு காண முடியும். எனவே

இந்த சட்டத்தை எதிர்த்து போராடிவரும் விவசாயிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் இதை தடுத்து நிறுத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *