திமுக அரசு மறைந்த கருணாநிதிக்கு பேனா சின்னம் வைப்பது சர்ச்சையானது ஏன் ?

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு பேனா சின்னம் கடலில் வைப்பது தேவைதானா? என்பது குறித்து தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளான அதிமுக, நாம் தமிழர், பாமக, பிஜேபி போன்றவை ஒரு புறம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

 மற்றொரு பக்கம் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உண்மையிலேயே இது ஒரு தவறான முடிவு .கடல் சுற்றுச்சூழல் பாதிப்பு முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. அடுத்தது இதற்காக 100 கோடி செலவு செய்வது ,மக்களுடைய வரிப்பணத்தை வீணடிப்பது ,அடுத்தது இதனால் என்ன பயன் பெற போகிறது திமுக? இந்த மூன்றும் மிக முக்கியமானது.

 உண்மையிலேயே கலைஞர் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கதை ஆசிரியர் அதில் மாற்றுக் கருத்து இல்லை .அப்படிப்பட்ட ஒருவருக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் பேனாவை கொண்டு போய் கடலில் வைப்பது திமுகவின் பகுத்தறிவு கொள்கைக்கு எதிரான மூடநம்பிக்கையை ஏற்படுத்தும் செயல். மேலும்,கருணாநிதியின் நினைவுச் சின்னம் அமைப்பதில் சட்ட சிக்கல் ஏற்படுமா?

இந்த சூழ்நிலையில் அரசாங்கம் இது பற்றி ஒரு கருத்துக் கேட்டு ஆய்வுக்கூட்டம் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் திமுக கட்சியினர், அதிக அளவில் சேர்ந்து கொண்டு கூச்சலிடுவது, கத்துவது, மிரட்டுவது இதையெல்லாம் கைவந்த கலை. இதற்கு மக்களிடம் கருத்து கேட்க வேண்டியதில்லை. கூச்சல் போடும் (கட்சி) கருத்து கேட்பு கூட்டம் என்று அதிகாரிகள் ஏற்பாடு செய்திருக்கலாம்.

காவல்துறை அவர்களை குண்டுகட்டாக தூக்கி வெளியில் போடுவது அவர்கள் சட்டத்தை பாதுகாக்க வந்தவர்களா? அல்லது ஆட்சியாளர்களுடைய எடுபிடிகளா? இப்படி ஒரு கூட்டம் நடத்த தேவையே இல்லை. அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது.

அதனால் நீங்கள் பேனா சிலையை வைக்க மக்களுடைய வரிப்பணத்தில் செய்கிறீர்கள். இந்த பேனா சிலையை வைப்பதற்கு நூறு கோடி செலவு செய்யும் திமுக அரசு ,இந்த நூறு கோடி சிறிய பத்திரிகையாளர்களின் நலன்களுக்கு கொடுக்கக் கூடாதா? அவர் ஒரு பத்திரிகையாளர், சமூக போராளி, அக்காலத்தில் சமூக நீதிக்காக போராடியவர், அப்போது அவருடைய நிலைமை எங்களைப் போன்ற சிறிய பத்திரிகையாளர்கள் போல இருந்திருப்பார்.அதற்கு மதிப்பளிக்கும் வகையில் அவர் நினைவாக திமுக அரசு இதை ஏன் செய்யக்கூடாது?

மேலும் இந்த நூறு கோடி உங்களுடைய திமுக அறக்கட்டளையில் இருந்து செலவு செய்யக் கூடாதா? இந்த 100 கோடி உங்கள் கட்சிகளில் உள்ள கருப்பு பணம் வைத்திருப்பவர்களிடம் இருந்து அதை கட்டக்கூடாதா? மக்களுடைய வரிப்பணத்தில் தான் அதை காட்ட வேண்டுமா? என்பது பொதுமக்களுடைய கருத்தாக உள்ளது.

மேலும், இந்த பேனா சின்னம் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல், இதை அந்த இடத்தில் வைக்க முடியாது. ஒரு பக்கம் சட்ட சிக்கல் மற்றொரு பக்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இன்னொரு பக்கம் அந்தப் பகுதியில் வாழ்கின்ற மீனவ மக்களின் எதிர்ப்பு, இதையெல்லாம் மீறி திமுக அரசு இதை நிறைவேற்றினால் நிச்சயம் அதற்கான அரசியல் பின் விளைவு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *