திமுக ஆட்சி மக்களாட்சியா ?அல்லது மக்களை கொடுமைப்படுத்தும் ஆட்சியா?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பழைய கோயம்பேடு பஸ் நிலையத்தை இடிப்பதால் பொதுமக்களுக்கு என்ன பயன் ?அரசுக்கு என்ன பயன்? இங்கே பெரிய  கட்டிடம் கட்டுவதால் யாருக்கு பயன் ? ஜி ஸ்கொயர் லாபமடையும். மக்கள் வரிப்பணம் வீணாகப் போகும்.

இது தவிர, ஏற்கனவே இருக்கின்ற 8 லட்சம் கோடி, தமிழ்நாடு கடன் 10 லட்சம் கோடியாக அதிகரிக்கும். இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஏதோ வந்த வரைக்கும் லாபம் பார்க்கும் வேலையை திமுக அரசு செய்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு, தவிர ,

திமுக ஆட்சியில் மக்கள் படும் இன்னல்கள் பல இருந்தாலும், கோயம்பேடு பஸ் நிலையம் கிளம்பாக்கத்திற்கு மாற்றியது .இதனால் அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்படுகிறது .மற்றொரு பக்கம் மக்கள் போக்குவரத்துக்கு பெரும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் .

அடுத்தது, ஏழை, எளிய நடுத்தர மக்கள் வியாபாரம் செய்பவர்கள் ,ஆட்டோ ஓட்டுநர்கள், கூலி தொழிலாளர்கள் ,இப்படி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் திமுக ஆட்சியின் மீது வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதனுடைய எதிரொலி கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு விழாவில் கூட்டம் இல்லை . கூட்டம் என்பது அரசியல். இதற்கு கூட்டம் வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் அதற்குள் செல்லவில்லை. இதில் ஒரு மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் வந்து கூட கூட்டம் இல்லை என்கிறார்கள். அதுவும் கலைஞர் நூற்றாண்டு விழாவாக அது கொண்டாடப்பட்ட கிளம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு விழா,  இந்த நிலைமைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது.

தற்போதைய கோயம்பேடு பஸ் நிலையத்தின் நிலைமை என்ன?

மேலும், திமுக ஆட்சி குடும்ப ஆட்சியாக இருந்தாலும், மக்களுக்கு இது கொடுங்கோல் ஆட்சியாக இருந்து வருகிறது .கோயம்பேடு பஸ் நிலையம்  போக்குவரத்துக்கு, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வந்து செல்லும் மக்களுக்கு வசதியாக இருந்தது. தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து மக்கள் திருச்சி, மதுரை, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களுக்கு செல்லும்போது ,எவ்வளவு நேரம் இதற்காக பயணம் செய்ய வேண்டி இருக்கிறது? அடுத்தது டவுன் பஸ்ஸில் சென்றால் எவ்வளவு நேரம் ஆகும்? அதுவே வெளியூர் பேருந்துகளில் சென்றால் எவ்வளவு நேரம் ஆகும்? துக்ளக் ஆட்சி நடத்துகிறாரா? ஸ்டாலின் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 பழைய கோயம்பேடு பஸ் நிலையம் எவ்வளவு மக்கள் நெருக்கம் .

கோயம்பேடு பஸ் நிலையத்தை மாற்றியது திமுகவிற்கு மிகப்பெரிய அரசியல் அடி ஏற்படுத்தப் போகிறது .ஒரு பக்கம் பெருவள்ள மழையால் சென்னை சுற்றுவட்டார மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு பக்கம் ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை சரியில்லை என்கிறார்கள். எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை ,கஞ்சா விற்பனை, 24 மணி நேரமும் மது விற்பனை என்று சொல்கிறார்கள் .அதாவது இந்த மது விற்பனை டாஸ்மாக் கடை 12 மணியிலிருந்து பத்து மணி வரை .

ஆனால் ,இது எப்படி என்று கேட்கலாம் ?மக்கள் சொல்வது அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய திமுக கட்சிக்காரர்கள் இந்த மதுவை பிளாக்கில் விற்கிறார்களாம். அதாவது இரவு 10 மணி முதல் காலை 12 மணி வரை பிளாக்கில் மதுபான கடைகள் இருந்து வருகிறது. இதில் காவல்துறைக்கும் கமிஷன் உண்டு என்கிறார்கள். ஆக கூடி தமிழ்நாட்டை குட்டி சுவராக்கும் ஆட்சி ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார்.

இதைவிட ஒரு கொடுமை, பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட ,மது போதையில் சுற்றித் தெரிகிறார்களாம் .நாடு விளங்குமா ? திமுக ஆட்சி நிர்வாகம், மக்களுக்கு எந்த அளவிற்கு கொடுங்காலாட்சி நடத்திக் கொண்டிருக்கிறது? உங்கள் கட்சிக்காரர்களை வாழ வைப்பதற்காக நாட்டு மக்கள் சாக வேண்டுமா? இல்லை அவர்கள் இப்படிப்பட்ட கொடுமைகளை அனுபவிக்க வேண்டுமா? கட்சிக்காரனுடைய ஓட்டு மட்டும் வாங்கி வெற்றி பெறுங்கள். ஏன்? வீடு வீடாக போய் கையெடுத்து கும்பிட்டு காலில் விழுகிறீர்கள்? பணம் கொடுக்கிறீர்கள்?

 எவ்வளவு கேவலம் ,நல்லவர்கள் வேஷம் போடுவதற்கும் ஒரு அளவு உண்டு. இந்த வேஷம் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மேலும், பணம் மட்டுமே குறிக்கோள் என்று கார்ப்பரேட்டுக்கு முக்கியத்துவம் அளித்தால், பாமர மக்கள்  வளர்வது எப்படி? வாழ்வது எப்படி? இது மட்டுமல்ல, சட்டம் ஒழுங்கு பிரச்சனை சந்தி சிரிக்கிறது .அதாவது நாட்டில் ராணுவ வீரர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்றால் ,இந்த நாட்டில் அவர்கள் எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள் ?

ராணுவ வீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது ராணுவ சட்டத்தில் மிக முக்கியமான ஒன்று. அவர்கள் தான் உண்மையான இந்த தேசத்தின் உயிர் நாடி. சமீபத்தில் பிரபு என்ற ராணுவ வீரர் திமுக கவுன்சிலரால் கொலை செய்யப்பட்டது. ராணுவ வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் ஒன்று திரண்டு நியாயம் கேட்டு போராடியுள்ளனர். இப்படி ராணுவ வீரர்களுக்கும் ,அவர்களுடைய குடும்பத்திற்கும் ,அரசாங்கம் பாதுகாக்கவில்லை என்றால்,

 சாதாரண பாமர மக்களை இவர்கள் எப்படி பாதுகாப்பார்கள் ?இதையெல்லாம் திமுக அரசு எப்படி சரி செய்யப் போகிறது ? மக்கள் இந்த உண்மை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா?அல்லது பழகி விட்டார்களா? என்பது வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மக்கள் மனநிலையை பிரதிபலிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *