திருப்பரங்குன்றம் முருகன் மலையில், தீபம் ஏற்ற திமுக கைக்கூலிகள், எவ்வளவு பேசுகிறார்கள்? – முருகா உன் மலைக்கு! நீயே தான் தீர்ப்பு .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆறுபடை முருகனின் முதலாம் படையான திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கே இப்படி ஒரு சோதனையா? உன்னையும் சேர்த்து அரசியலுக்கு இழுத்து விட்டார்களே ! தெய்வத்தின் அருமை தெரியாத கூட்டம், அரசியல் அதிகாரத்திற்காக எப்படியும் பேசுகிறார்கள்.

முருகா உன்னுடைய சக்தி என்ன? என்று நிரூபிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. தீய சக்திகளை சம்ஹாரம் செய்யக்கூடிய பரம்பொருளே !உன் வேலுக்கு வேலை வந்து விட்டதா? தீய சக்திகளுக்கு நாட்டில் சரியான பாடம் நீ தான் சொல்ல வேண்டும்.

உன் சக்தி தெரியாமல், மனிதர்கள் ஆட்டம் போட்டால், அதற்கு என்ன தண்டனை என்று உனக்கு தன் தெரியும். மேலும்,உன்னைப் போற்றி வணங்க வேண்டிய இடத்தில் தர்காவை கொண்டு வந்து வைத்து விட்டு, அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் ஆட்சியாளர்கள் மத கலவரம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் மக்களிடம் அரசியல் செய்கிறார்கள். உண்மையான பக்தியோடு பக்தர்கள் வேண்டுவது முருகனுக்கு இந்த மலை சொந்தமானது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இருக்கின்ற இந்த மலைக்கு இப்படி ஒரு சோதனையா?மேலும்,

தமிழர்களின் வரலாற்று தெய்வம் முருகன். சங்க இலக்கியங்களால் போற்றப்பட்ட முருகனே !வெள்ளைக்காரன் சொன்னதை சட்டமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் திமுகவினர். மற்றும் மற்ற மதத்தினர், இதற்கு நீதி வென்றும் உன்னிடத்தில் பக்தர்கள் தீபம் ஏற்ற முடியவில்லை.

இது இந்துக்களுக்கும் இந்து மதத்திற்கும், வந்த சோதனையா? அவனவன் அவனவன் மதம் பெரிது என்று திமுக கூட்டணி கட்சிகள் பேசலாம். ஆனால் பிஜேபி மட்டும் இந்து மதத்திற்காக பேசக்கூடாது அப்படி பேசினால் அது மதவாதம் மதத்தை தூண்டுகிறார்கள் .

அப்ப உங்களையெல்லாம் யார் தூண்டுவது? என்னடா பேசுறீங்க? நீதிபதி சந்துரு மற்ற மதங்கள் எல்லாம் எந்த அரசியல் கட்சியும் பேசாது. அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க மாட்டார்கள்.

ஆனால், பிஜேபி மட்டும் இந்து மதத்தினருக்கு ஆதரவாக பேசக் கூடாது.இந்துக்களை மதமாற்றம் செய்து கொண்டிருப்பார்கள் .அதையெல்லாம் கேட்கக் கூடாது. அரசியல் கட்சிக்காரராக பேசிக் கொண்டிருங்கள். நீதிபதியா பேசுறதுக்கு தகுதி இல்லாத ஆட்கள் எல்லாம் அட்வைஸ் பண்ண கூடாது.

அதையெல்லாம் நினைக்கும் போது முருகா எங்களுக்கு எல்லாம் வேதனையாக இருக்கிறது. மேலும்,1947க்கு முன் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் என்னென்ன குளறுபடிகள் எப்படி எல்லாம் வஞ்சிக்கப்பட்டார்கள்?செய்தார்கள்? என்பது இந்திய வரலாற்றில் உள்ளது.

19 47 க்கு பிறகு சுதந்திரம் பெற்ற காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்த வரலாறு இந்திய வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.

அதன் பிறகு, இந்திரா காந்தி, நேரு, காலத்தில் என்னென்ன செய்தார்கள்? என்பது வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. சில உண்மைகள் மறைக்கவும் பட்டுள்ளது.

இது தவிர, இந்துக்களுக்கு எதிராக ஆங்கிலேயர்களால் சட்டமாக கொண்டு வந்தார்களோ, இந்துக்களுக்கு எதிராக செய்யப்பட்ட அநீதிகளை சட்டமாக்கினார்களோ ,அதை இன்று திமுக பேசிக் கொண்டிருக்கிறது. திமுகவின் கைக்கூலிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திமுகவின் கைக்கூலி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் பேசிக் கொண்டிருக்கிறது.மேலும்,

இந்த மலை திருமுருகாற்றுப்படையில் முருகனின் வரலாறு என்ன ?என்பது தெரியும். நக்கீரர் தமிழ் சங்கத்தை தோற்றுவித்த புலவனுக்கு தெரியாதது, இங்கே ஆங்கிலேய ஆதிக்க சக்திக்கு தெரிந்து விட்டதா? அது மட்டுமல்ல,

கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு தெரியாத உண்மைகள், இவர்களுக்கு தெரிந்து விட்டதா? ஓட்டுக்காக பேசிக் கொண்டிருப்பவன் எல்லாம், நாட்டுக்காக உழைப்பவன் அல்ல .நாட்டு மக்களுக்காக உழைப்பவன் அல்ல. யூட்யூபில் பேசிக் கொண்டிருப்பவன் அல்ல,

மேலும் ,உண்மையை சிந்தித்துப் பேச தகுதியில்லாதவன் எல்லாம் youtube இல் பேசிக் கொண்டிருக்கிறான். திமுகவின் ஊழல்கள் ,அராஜகங்கள், அதைப் பற்றி எத்தனை பத்திரிகைகள்? தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், மக்களிடம் சொல்லி இருக்கின்றன? ஆனால், வரலாற்று உண்மைகளை மறைக்க முடியுமா?

ஊழல்களை மறைத்து பேசுகின்றவர்கள், எப்படியும் பேசுவது திறமை என்று அரசியல் தெரியாத, மக்களிடம் நடித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், கோயிலுக்கு சொந்தக்காரன் முருகன், அவனை ஏமாற்றுவது பெரிய விஷயமா? திமுகவின் கைக்கூலிகள், நினைக்கிறார்கள்.

எது வரலாற்று உண்மைகள்? எடுத்துக்காட்டுங்கள் பார்க்கலாம்? கல்வெட்டுகளா? அல்லது ஆங்கிலேயன் அடிமைப்படுத்திய காலத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்புகளா? சங்க கால இலக்கியத்தின் வரலாற்று உண்மைகளா? ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் இவர்கள் காலத்தில் திருப்பரங்குன்றம் மலையில் தர்கா இருந்ததா? அங்கே சிக்கந்தர் என்ற முஸ்லிமை கொண்டு வந்து புதைத்தார்களா?

மேலும்,முஸ்லிம்களின் படையெடுப்புக்கு முன் ,இந்தியாவில் எத்தனை தர்காக்கள்? எங்கெங்கு இருந்தது? என்பது இவர்களுக்கு தெரியுமா? முஸ்லிம் படையெடுப்புக்கு பின் ,இந்தியாவில் எத்தனை இந்து கோயில்கள் இடிக்கப்பட்டது? அந்த வரலாறு அழிந்துவிட்டதா? அதுவும் வரலாற்று உண்மைகளாக தானே !

அதையும் படித்திருக்கிறோம் அல்லவா? இப்படி வரலாற்று உண்மைகள் மக்களுக்கு மறைத்து, ஓட்டுக்காக எப்படியும் பேசுவது என்று கைக்கூலிகள், பேசுவது இந்துக்களை ஏமாற்றும் வேலை.

மேலும்,இந்தப் பிரச்சனையை நீதிமன்றத்தில் நீதிபதி ஜி .ஆர் .சாமிநாதன் சட்டப்படி தான் அதற்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். மலையே முருகனுக்கு சொந்தம். மலையே இந்துக்களுக்கு சொந்தம், மலையே இந்துக்களின் வழிபாட்டு உரிமைக்கானது. அங்கே எங்கே ஏற்றினால் என்ன? முருகன் மலையிலே இப்படி ஒரு சோதனையா?

இங்கே தெய்வமா? அரசியல் அதிகாரமா? யார் என்பது முருகன் தான் இதற்கு தீர்ப்பு எழுத வேண்டும். யார், யாரோ எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். முருகா உன் சக்திக்கு ,இவர்களெல்லாம் ஒரு ஈடா? உன் கோயில்! உன் மலை! நீ தான் அதற்கு நீதிபதி! உலகில் வேறு யாரும் உனக்கு நீதிபதி அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *