திருவள்ளூர் மாவட்டம்,விடையூர் கிராமத்தில்  ஏரி மரம் ஏலம் விட்டதில் ஊழல் நடந்திருப்பதாக நீதிமன்றம் வரை வழக்கு. இந்த நிலையில் ஏரியில் மண் எடுக்கும் பிரச்சனையை கொண்டு வந்துள்ளதால் கிராம மக்களின் எதிர்ப்பு.

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

நாட்டில் அரசியல் கட்சியினரும், கிராமங்களில் உள்ள குடிகாரர்களும், பணத்துக்கு வேலை போகிறவர்களும், நாங்கள் தான் ஊர் என்று பேசுவது மட்டுமல்ல ,இந்த கட்சி பொறுப்புகள் எல்லாம் ஏதோ இவர்கள் ஊருக்கு படி அளப்பது போல ,நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இவர்கள் கிராமங்களில் உதராகப் பேசி உடம்பைக் காட்டி அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள், தங்களை அறிவாளியாகவும், புத்திசாலியாகவும், நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 அரசியலுக்கு உடம்பு தகுதியா? அல்லது அவர்களுடைய செயல்பாடும் திறமையும், தகுதியா? என்பது கூட தெரியாமல், பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இந்த கிராமத்தில் ஒரு பக்கம் வேலி காத்தான் ஏரி மரம் ஏலம் விட்டதில் மிகப்பெரிய கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது என்று இந்த பிரச்சனை உயர் நீதிமன்றம் வரை சென்றுள்ளது .தற்போது இந்த ஏரிகளில் மண் எடுத்து நாங்கள் அதாவது அரசியல் கட்சியினர் மற்றும் ஏலம்  எடுத்தவர்களும் ,கோடிக்கணக்கில் லாபம் பார்க்க திட்டம் போட்டு, இதற்கு கிராம பொதுமக்களின் கருத்து என்ன ? என்ற ஒரு கண் துடைப்பு கூட்டத்தை  கூட்டி உள்ளனர்.

இங்கே திமுக மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, கிராம மக்களிடம் இது பற்றி கேட்டபோது ,கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்பையும் மீறி பணத்துக்கு ஆசைப்படுபவர்கள், ஏரியில் ஆழம் எடுத்தால் தண்ணி தேங்கும் என்கிறார்கள். மற்றொரு பக்கம் விவசாயத்தை நம்பி இருக்கக்கூடிய விவசாயிகள்,ஏரி மண்ணை எடுத்தால் ,அதனால் நீர் ஆதாரம் பாதிக்கும் ,அந்த மண் தான் மழை நீரை தேக்கி வைத்துள்ளது. மண் எடுத்து விட்டால், அடிப்பகுதி நீர் வெளியேறிவிடும், இதனால், நீர் ஆதாரம் நிலத்தடியில் குறைந்து விடும் .இது புவியியல் ரீதியில் உண்மை என்றும் நிரூபிக்கப்பட்ட ஆய்வாளர்கள் கருத்து.

மேலும், இங்கே விவசாயத்தை நம்பி தான் இந்த கிராமத்தில் கிராம மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .ஏற்கனவே, விவசாயம் இந்த 100 நாள் வேலை திட்டத்தால், பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ,இன்னும் இப்படிப்பட்ட கிராமங்களில் நீர் ஆதாரத்தை வெளியேற்றி விட்டால், விவசாயம் முற்றிலும் அழிந்து போகும். நான் சொல்வது பொய்யா? உண்மையா? என்பதை ஆந்திராவில் உள்ள ஏரிகளில் எத்தனை ஏரிகளில் மண் எடுக்கிறார்கள்? அங்கே ஏரிகளின் நிலை எப்படி இருக்கிறது? எப்படி எல்லாம் அந்த ஏரியை பாதுகாக்கிறார்கள்? இது எல்லாம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இது பற்றி தெரிந்து, இந்த ஏரிகளில் மண் எடுக்க அனுமதி கொடுக்க வேண்டும்.

மேலும், உளவுத்துறை மூலம் இவர் ரிப்போர்ட் கேட்டிருப்பதாகவே தகவல் தெரிய வந்துள்ளது. இந்த உண்மையை புரிந்து கிராம மக்களின் எதிர்ப்பை புரிந்து செயல்பட வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கை .

கிராமங்கள் என்பது தற்போது பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்களே கிராமங்கள் இல்லை. அவர்களுக்கு வாக்களித்துவிட்டு மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சிறிய அதிகாரத்தை வைத்துக்கொண்டு கிராமத்தின் பொது சொத்துக்களை கொள்ளை அடித்து திட்டம் போட்டு செயல்படுகிறார்கள். இதை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் கவனத்தில் கொள்ள வேண்டும் .இதனால், ஊழல் வழக்குகள், வன்முறைகள், சண்டை சச்சரவுகள், கிராமங்களில் உறவுகளில் ஒற்றுமையின்மை, எல்லாவற்றிற்கும் காரணம் இது போன்ற தவறான நடவடிக்கைகள், ஒவ்வொரு கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது.

 மேலும், இந்த அதிகாரம் இவர்களுக்கு யார் கொடுத்தது? பொதுப்பணித்துறை ஏரிகளில் மண் எடுக்க தீர்மானம் போட்டு கொடுக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர் கொடுத்தாரா ?அல்லது கிராம மக்கள் கொடுத்தார்களா? அல்லது ஊராட்சி மன்ற சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளதா? இப்படிதான் ஒவ்வொரு கிராமங்களிலும் பல்வேறு பிரச்சனைகள் நீதிமன்ற கதவுகளையும், காவல் நிலையங்களிலும் போய்க்கொண்டிருக்கிறது. நாட்டில் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த எந்த சட்டமும் ,மக்களுக்கு பயனில்லை ஒரு பக்கம் ஊழலாகவும், மற்றொரு பக்கம் இது போன்ற பிரச்சனைகளையும், உருவாக்கிக் கொண்டிருக்கிறது இந்த பஞ்சாயத்து ராஜ் சட்டம் .

இதைப்பற்றி மாவட்ட ஆட்சியர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு, பொது சொத்துக்களில் தலையிட எந்த உரிமையும் இல்லை என்பதை அவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் .மேலும், அதையும் மீறி செயல்படும் பஞ்சாயத்து தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக பஞ்சாயத்து தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்? மக்கள் எதற்காக வாக்களித்தார்கள்? என்பதை இவர்களுக்கு எல்லாம் பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து தலைவர்களும்,பொது சொத்து என்பது தங்கள் விற்று பணம் சம்பாதிப்பதற்கு, சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 மேலும், கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் ,வார்டு உறுப்பினர்களுக்கும் , தங்களுடைய கிராமங்களை பட்டா போட்டு கொடுக்கவில்லை. இவர்கள் எதை செய்தாலும் ,இவர்கள் எப்படி பொது சொத்துக்களை கொள்ளை அடித்தாலும் ,அதையெல்லாம் பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய தலையெழுத்தா? கிராம மக்களுக்கு? மேலும், இவர்கள் தான் கிராமம் என்றால், இந்த கிராமத்தில் உள்ள 2500 வாக்காளர்கள் எதற்கு ? என்று கிராம மக்கள் கேள்வி கேட்டு, இப்ப பிரச்சனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தவிர, இப் பிரச்சனையை சரியான முறையில் மாவட்ட ஆட்சியர் பிரபுஷங்கர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இதில் தலையிட்டு ,உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் அவருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த பிரச்சனையில் மக்களின் தீர்ப்புக்கு முன்னால், அரசாங்கம் அதற்கு துணை நின்று செயல்படும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதையும் மீறி இந்த கிராமத்தில் ஏரி மண் எடுத்தால், இந்த பகுதியில் ஒரு ஓட்டு கூட திமுகவுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் விழாது என்று பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர் .இதைப் பற்றி சிபிசிஐடி போலீசார் மக்களின் கருத்து என்ன? என்பதை தெரிவித்து இருப்பார்கள்.

 மேலும், இது சம்பந்தமாக ஏற்கனவே சில தினங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் ஏரிகளில் மண் எடுத்தால் எங்களுடைய விவசாயம் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளனர். எனவே, இதற்கு சரியான முடிவை தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபசங்கர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியூர் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

மேலும், இந்த பிரச்சனையில் தலையிட கிராமத்தில் சிலர்  பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து, இப் பிரச்சனை குறித்து அவரிடம் பேச ஏற்பாடு செய்து வருகின்றனர். இதில் மாவட்ட ஆட்சியர் பிரபசங்கர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என்பதுதான்,இக் கிராம பிரச்சனையின் முக்கிய ஹாட்  டாப்பிக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *