விடையூர் கிராம பொதுமக்கள் மூலம் அனுப்பப்பட்ட புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, அதன் நகலை சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு அனுப்ப ஊராட்சிகள் ஆணையர் தாரேஷ் அகமது, கவர்னர் ஆர் என் ரவி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஆகியோர் உத்தரவிட்டனர். ஆனால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் கருவேல மரம் முழுதும் வெட்டி எடுத்து, அந்த வேரையும் நோண்டிய பிறகு அங்கு எதுவும் இல்லை என்று ரிப்போர்ட் அனுப்பலாம் என்று காலதாமதம் செய்து கொண்டிருக்கிறார்.
இவர் காலதாமதம் செய்ய வேண்டிய காரணம் என்ன? பொதுமக்கள் ஊழல் நடந்துள்ளது என்பதை தெளிவாக புகாரில் சொல்லியும் நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. அதனால், கிராம மக்கள் இவருடைய நடவடிக்கை நியாயமானதாகவும், நடுநிலையானதாகவும் இருக்காது என்பது இவர் காலம் தாழ்த்துவதிலிருந்து, எங்களுக்கு நன்றாக தெரிந்து விட்டது என்கிறார்கள்,
அதனால், இந்த ஊழல் புகாரை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க ஊராட்சிகள் ஆணையர் தாரேஷ் அகமது மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஆகியோர் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள், அவர்களுடைய நேரடி மேற்பார்வையில் இந்த ஊழல் புகார் விசாரிக்க வேண்டும் என்பதுதான் விடையூர் கிராம மக்களின் முக்கிய கோரிக்கை.மேலும்,
பல கோடி மதிப்புள்ள கருவேல மரங்கள் குறைத்து மதிப்பீடு செய்து, ஏலம் விட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் , மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் இவர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டுக் கொள்ளையில் பங்கு உண்டா? என்பதுதான் கிராம பொதுமக்களின் முக்கிய கேள்வி? தவிர,
300 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் ஏலம் விடப்பட்ட கருவேல மரங்கள் மதிப்பு பல கோடிக்கு மேல் தெரிவிக்கிறார்கள். ஆனால் ,இவர்கள் மதிப்பீடு செய்த தொகை ஒரு ஏக்கருக்கு ரூபாய் 160/- , இந்த 160 ரூபாய் வைத்துக் கொண்டு இன்று விடையூறிலிருந்து திருவள்ளுவருக்கு சென்று வர கூட செலவுக்கு போதாத ஒரு தொகை என்று பொதுமக்கள் கேலி பேசி சிரிக்கிறார்கள். அவ்வளவு பெரிய தொகையை நிர்ணயம் செய்து கிராம மக்களை ஏமாற்ற பார்க்கிறார்களா?
மேலும், இது பற்றி பொதுமக்கள் புகார் அளித்தும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர், நீர்வளத்துறை அதிகாரிகள், வனத்துறை, காவல்துறை போன்ற அதிகாரிகளுக்கு பெருந்தொகை கை மாறி உள்ளதாக கிராம மக்கள் சார்பில் தெரிவிக்கும் குற்றச்சாட்டு.தவிர,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் கிராம மக்கள் .
மேலும், இந்த ஏலம் முறைப்படி பத்திரிகைகளிலோ அல்லது தண்டோரா மூலமாகவோ, கிராம பொதுமக்களுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. மேலும் ஐயாயிரம் பேர் மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் 15 பேரை வைத்துக்கொண்டு ஏலம் விட்டு இருக்கிறார் நீர்வளத் துறை அதிகாரி ரமேஷ்.
இருப்பினும், இவர்கள் சொல்வது நாங்கள் முறைப்படி ஏலம் விட்டு இருக்கிறோம் என்கிறார்கள். அதாவது இவர் ஏலம் விட்டது அந்த கிராமத்தில் உள்ள 15 to 20 பேருக்கு தான் தெரியவந்துள்ளது. அதன் பிறகு கிராமத்தில் போது ஏலம் என்று 55 லட்சத்துக்கு மறு ஏலம் விடப்பட்டுள்ளது. இது பற்றி அந்த கிராமத்தில், கேள்வி கேட்பவர்கள் மீது அவதூறு செய்திகளை பரப்பியது கூட, கிராம மக்களுக்கு இவர்கள் சொன்னது அனைத்தும் பொய்கள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும்,. மேற்படி ஊழல் புகாரை விசாரிப்பதற்கு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அதற்கு தகுதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை மூடி மறைக்க என்னென்ன பேப்பர் ஒர்க் செய்ய வேண்டுமோ, அதை எல்லாம் சட்டப்படி செய்யும் வேலையில் தான் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதனால் டி ஆர் டி ஏ ஆணையர் தாரேஷ் அகமது அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அல்லது கவர்னர் முன்னிலையில் இதனுடைய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் கிராம மக்கள் .
மேலும், இவர்கள் மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு ஏக்கரின் மதிப்பு வெறும் 160 ரூபாய் ஆனால், தூத்துக்குடி திருநெல்வேலி பக்கம் இந்த கருவேல மரத்தின் மதிப்பு ஒரு ஏக்கர் குறைந்தபட்சம் ஏழு லட்சத்திலிருந்து 12 லட்சம் வரை போவதாக தகவல். தவிர ,இங்கு உள்ள வியாபாரிகளிடம் விசாரித்த போது ஒரு டன் கருவேல மரக்கட்டை ரூபாய் 3500/- என்கிறார்கள்.
அதற்கு காரணம், இந்த கருவேல மரத்தின் கரி எக்ஸ்போர்ட் செய்யப்படுகிறது. இது பல கோடி மதிப்புள்ள பொருள். அதாவது கருப்பு தங்கம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இதனுடைய மதிப்பு இருந்து வருகிறது. இது பற்றிய உண்மை நிலவரம் மேற்சொன்ன ஊராட்சிகள் ஆணையர் தாரேஷ் அகமது. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், கவர்னர் ஆகியோர் விசாரணை செய்து ,தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் விடையூர் கிராம பொது மக்களின் முக்கிய கோரிக்கை.
மேலும், இந்த ஊழலுக்கு ஒத்துழைக்க திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளை ஆதரவு தர கேட்டுக் கொண்டார்களா? என்கின்றனர் – விடையூர் கிராம பொதுமக்கள் .