திருவள்ளூர் மாவட்ட பூண்டி ஊராட்சியில், சுடுகாட்டுக்கு வழியில்லாமல் தலைமுறைகளாக போராடும் அருந்ததியினர்.

சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

திருவள்ளூர் அடுத்த பூண்டி ஊராட்சியில், உள்ள அருந்ததி காலனி மக்கள் பல தலைமுறைகளாக சுடுகாட்டுக்கு வழி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் 3 ஆண்டுக்கு முன்னர் இந்த அருந்ததியர் காலனியில் இருந்து கிராமத்தின் சிமெண்ட் சாலை வரை சுமார் 100 மீட்டர் மேல் உள்ள ஒரு இணைப்பு சாலையை ரூபாய் ஆறு லட்சத்திற்கு மேல் டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்று வரை,

 அந்த வேலையை எடுத்தவர் யார்? என்று தெரியாமல் இருந்து வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த தார் சாலை போடப்படாமல் அதற்குரிய தொகை பங்கு போட்டுக் கொண்டார்களா? என்பது தெரியவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

 மேலும், இது பற்றி அவர்கள் துணை வட்டாட்சியருக்கும் ,மாவட்ட ஆட்சியருக்கும் ,புகார் தெரிவித்ததாக தெரிவிக்கின்றனர். தவிர, இப் பிரச்சனை சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கேட்டபோது வரும் என்கிறார்களாம். ஆனால், எப்போது வரும் என்பது தெரியாது ?மேலும், கிராம பஞ்சாயத்து செயலாளரிடம் கேட்டால், நாங்கள் அனுப்பிவிட்டோம், எங்களிடம் எதுவும் இல்லை என்கிறார்கள்  என்று தெரிவிக்கிறார்கள்.

மேலும் நெல் வயலில் பிணத்தை எடுத்துச் செல்லும் போது, எங்களுக்கும் நிலத்தின் உரிமையாளர்களுக்கும், தகராறு ஏற்படுகிறது. அவர்கள் கேட்பது தவறு இல்லை. நெல் வயலில் இறங்கி மிதித்து எடுத்துச் சென்றால் எல்லோருக்கும் வேதனையாக தான் இருக்கிறது. ஆனால், இது பற்றி பலமுறை அரசாங்கத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், ஊராட்சிகளின் நிர்வாகம் எப்போதுதான் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போகிறது……..? மேலும்,

எந்த ஆட்சி வந்தாலும்,இப்படித்தான் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கணக்கு வழக்குகள் பொதுமக்களுக்கு தெரியாமல் இருந்து வருகிறது. இதற்கு கிராம சபை கூட்டம் நடத்தினால் என்ன? நடத்தாவிட்டால் என்ன? எல்லாம் ஒரு கண்துடைப்புக்காக நடத்துவது வீண் தான் .அதனால் தான், மக்கள் அதிகாரத்தில் இப்படிப்பட்ட பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும் என்றால், பஞ்சாயத்து நிர்வாகத்தின் கணக்கு வழக்குகள் பொதுமக்களுக்கு ஆன்லைனில் தினமும் ஏற்ற வேண்டும். என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அப்போதுதான் பஞ்சாயத்து நிர்வாகத்தின் வெளிப்படையான கணக்கு மக்களுக்கு தெரிய வரும் .அதுவரையில் மக்களை ஏமாற்றிக் கொண்டு இதுபோன்ற இடைத்தரகர்கள், அதிகாரிகள் பங்கு போட்டு சாப்பிட வசதியாக இருக்கும் என்பது கிராம மக்களின் குற்றச்சாட்டு .இனியாவது கிராம நிர்வாக உயர் அதிகாரிகளுக்கு இந்த உண்மை புரியுமா?

மேலும்,இந்த கிராம மக்கள் பல ஆண்டுகளாக போராடும் இப்பிரச்சனைக்கு மாவட்ட ஆட்சியர் ஆல் பின் ஜான் வர்கீஸ் உண்மை நிலை என்ன? என்பது பற்றி ஆய்வு செய்து, விரைவில் நடவடிக்கை எடுப்பாரா? என்பதுதான் அக்கிராம மக்களின் முக்கிய எதிர்பார்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *