
துருக்கியில் ஏற்பட்ட பூகம்பம், உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு உதவ இந்தியா முன்வந்து, அதற்கான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
அந்த விமானம் கூட பாகிஸ்தான் வான் வழியில் நுழைய விடாமல் தடுத்துள்ளது. இது பாகிஸ்தானின் மனிதபிமான மற்ற செயல். துருக்கிக்கு இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சார்பாக நிவாரண பொருட்கள், மருந்துகள், உடைகள், பாதுகாப்பு உபகரணங்கள், துருக்கிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, 100 மீட்பு படை வீரர்கள் துருக்கிக்கு அனுப்பப்பட்டு, அதில் உடல்களை கண்டுபிடிக்கும் பயிற்சி பெற்ற நாய்கள், மீட்பு பணிக்கு உடன் சென்றுள்ளது. மேலும், இந்த மீட்பு பணிக்கு செல்லும் விமானம் பாகிஸ்தான் வழியாக சென்றால் விரைவில் எளிதில் செல்ல முடியும். இல்லையென்றால் சுற்றி தான் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .
தவிர, பாகிஸ்தான், துருக்கி நட்பு நாடுகளாக இருந்தும் ஏன் இதை இந்த நேரத்தில் மறுத்துள்ளது ?மேலும் இந்தியா இந்த உதவிகளை செய்வது பிடிக்கவில்லையா? என்பது உலக நாடுகள் மத்தியில் இக்கருத்து பேசு பொருளானது.