அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்களை சூட்டி தேசத்தின் பெருமைக்குரியவர்கள் என்பதை இந்திய மக்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளார்- பிரதமர் நரேந்திர மோடி .மேலும் அங்கே அமைய உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவிட மாதிரியை காணொளி வாயிலாக திறந்து வைத்து அதை வெளியிட்டுள்ளார்.
தவிர, அந்தமான் நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசத்தில் உள்ள இதுவரை பயிரிடப்படாத 21 தீவுகளுக்கு பரம் வீர் சக்கரா விருது பெற்ற இராணுவ வீர்களின் பெயர்களை சூட்டி, ராணுவ வீரர்களின் பெருமைக்கும், அவர்களுடைய தியாகத்திற்கும், கொடுக்கப்பட்ட ஒரு கௌரவம் தான், பிரதமர் மோடியின் பெயர் சூட்டு நிகழ்ச்சி.
மேலும், பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சிகள் பேசும்போது,
நம் மூவர்ண கொடியை 1943 இல் முதல் முறையாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அந்தமானில் ஏற்றி வைத்தார். இந்த பெருமைமிகு அந்தமானில் அவருடைய நினைவிடம் அமைய உள்ளது. இது நம் நாட்டு மக்களிடையே தேசப்பற்று மேலும் வளர்க்க உதவும். தவிர, தாய் நாட்டுக்காக வீரதீரத்துடன் போரிட்டு 21 பரம் வீர சக்ரா விருது பெற்ற ராணுவத்தினரை கௌரவிக்கும் வகையில் அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு அவர்களுடைய பெயர் சூட்டப்படுகிறது.
இது நம் இளம் தலைமுறையினருக்கு பெரும் உந்து சக்தியாக இருக்கும். மேலும், நாட்டின் விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போரிட்ட வரலாற்றை மறைக்க முன்பு முயற்சிகள் நடந்தன. ஆனால், இதையெல்லாம் தற்போது,நாடு முழுவதும் அவருடைய பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மேலும், நேதாஜி தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் உத்தரவு, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பிறப்பிக்கப்பட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.