தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் இஸ்ரேலுக்கு 15,000 தொழிலாளர்களை இந்தியா வேலைக்கு ஆட்களை அனுப்ப தேர்வு .

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

செப்டம்பர் 11, 2024 • Makkal Adhikaram

இஸ்ரேல் நாட்டில் வேலைவாய்ப்பை பெற இந்திய அரசின் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் மேலும் குறைந்த வேலைவாய்ப்பு பயிற்சியுடன் முடித்தவர்கள், மேனேஜ்மென்ட் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 இதற்காக பி ஐ பி ஏ குழு விரைவில் இந்தியாவிற்கு வர உள்ளது. மேலும், இஸ்ரேல் நாட்டில் கட்டுமான பணிக்கு 10,000 பேர்களும், பராமரிப்பு பணிகளுக்கு 5000 பேர் இந்தியர்களும் தேவைப்படுகின்றனர் என இஸ்ரேல் இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.

 இது குறித்து தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இஸ்ரேல் நாட்டின் மக்கள் தொகை குடியேற்றம் மற்றும் எல்லை ஆணையம் பி ஐ பி ஏ விடுத்துள்ள கோரிக்கையில் கட்டுமான பிரிவில் பணி செய்வதற்காக பத்தாயிரம் பேர் , சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்ற 5000 பேர் தேவைப்படுகின்றனர்.

 இவர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், முதல் சுற்றில் 16, 832 பேர் அந்தந்த ட்ரேடுகளில் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களின் 10,349 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தவிர, இரண்டாவது சுற்று மகாராஷ்டிராவில் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பீடு ,உணவு, தங்கும் இடம் ஆகியவற்றுடன் மாதம் ரூபாய் 1. 9.2 லட்சம் சம்பளம் கிடைக்கும் என தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த வாய்ப்பை படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *