
புதுச்சேரியின் பொறுப்பு இயக்குநராக முனைவர் கணேசன்
கண்ணபிரான் காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக்கழக
மத்திய கல்வி அமைச்சகத்தால் 03.05.2023
அன்று நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் (08.05.2023)
பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்கு முன்பு இயக்குநராக இருந்த
முனைவர் கி. சங்கரநாராயணசாமி
பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் இந்த
பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்,
முனைவர் கணேசன் கண்ணபிரான் ஆந்திரப் பிரதேசத்தில்
அமைந்துள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஸ்ரீ சிட்டி,
சித்தூரின் இயக்குநராக பதவிவகிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் இயக்குனர் முனைவர் கே சங்கரநாராயணசாமிக்கு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களின் நன்றிகளை தெரிவித்தனர்.