தமிழ்நாட்டிலே தேனி மாவட்ட மக்கள் ஆட்சியாளர்களையும், அரசியல்வாதிகளையும் தட்டி கேட்க பயப்படுவதில்லை. அவர்கள் அரசியல் தெரிந்த மக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சிறை பிடித்து கேட்க வேண்டிய அவசியம் என்ன ? எதற்காக சிறப்பிடிக்கப்பட்டார் ? சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எரசக்கநாயக்கனூர் கிராமத்தில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் கம்பம் தொகுதி எம்எல்ஏ ராமகிருஷ்ணன் மக்களால் சிறைபிடிக்கப்பட்டார். மேலும்,
அரசு விழாவிற்கு வந்த எம் எல் ஏ வை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு காரசாரமாக வாக்குவாதத்துடன் கேள்வி கேட்டுள்ளனர். இந்த கேள்விகளுக்கு எம்எல்ஏவிடம் இருந்து சரியான பதில் இல்லை. மேலும், தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்பட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.
மேலும், இளைஞர்களிடத்தில் கேட்டபோது, எங்கள் கிராமத்தில் எல்லா வீடுகளிலும் ஆடு ,மாடு கால்நடைகளை வளர்த்து வருகிறோம். எங்களுக்கு மேய்ச்சல் நிலம் தட்டுப்பாடு உள்ளது. இது பற்றி தேர்தல் நேரத்தில் இவரிடம் கேட்டபோது எனக்கு வாக்களியுங்கள், வெற்றி பெற்றவுடன் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கால்நடை மேச்சலுக்கு ஏற்பாடு செய்து தருகிறேன் என்றார். அதுவும் இல்லை.
(அரசியல் கட்சியினருக்கும் கிராம மக்களுக்கும் இடையே தள்ளு முள்ளும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.)
மேலும் ,எங்கள் பகுதி கால்நடைகள் அதிகம் உள்ள பகுதி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கால்நடை மருத்துவமனை கட்டித் தருகிறேன் என்றார். அதையும் செய்யவில்லை .எங்களுடைய வாக்குகளை பெற்று வெற்றி பெற்று விட்டு, இதுவரை எந்த ஒரு நலத்திட்டமும், அடிப்படைத் தேவைகளும் செய்து தரவில்லை.
மேலும், இது பற்றி பலமுறை எம்எல்ஏ வை பார்த்து நாங்கள் வீட்டிலும் ,சந்தித்து முறையிட்டிருந்தோம் .அரசு விழா நடக்கும்போதும், நாங்கள் கோரிக்கை மனுக்களை பலமுறை கொடுத்திருந்தோம். எந்த பயனும் இல்லை. அதனால், எங்கள் கிராமத்திற்கு எந்த வசதியும் செய்து தராத நீங்க எந்த முகத்தோடு இங்கே வந்தீங்க என்பதுதான், அந்த கிராம மக்களின் மிகப்பெரிய ஆதங்கம் .
மேலும் ,அதே கிராமத்தில் எம்எல்ஏவின் ஆதரவாளர் ஒருவர் கிராம மக்கள் குறித்து தவறாக பேசும் பிரச்சனை பெரிதானது. இதனால் ,ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் கம்பம் தொகுதி எம்எல்ஏ ராமகிருஷ்ணனை சிறைபிடித்து ,அருகில் உள்ள மண்டபத்தில் அடித்து வைத்தனர்.
பிறகு சுமார் 20 நிமிடத்திற்கு மேல் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம் எல் ஏ வை 15 க்கும் மேற்பட்ட போலீசார் வந்து மீட்டு உள்ளனர். மேலும், ஒரு எம்எல்ஏ வை பொதுமக்கள் முற்றுகையிட்டு சிறை பிடித்த சம்பவம் மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது .
இதுபோல் தமிழகம் முழுதும் உள்ள கிராம மக்கள் பொது நலன்கள் குறித்து கேள்வி கேட்டாலும், அல்லது இது போன்ற சிறைபிடிப்பு சம்பவம் நிகழ்த்தினாலும், அல்லது மக்கள் நிற்க வைத்து கேள்வி கேட்கும் நிலைக்கு வந்திருக்கும், இந்த தேனி மாவட்ட மக்களின் அரசியல் வரவேற்க வேண்டிய ஒன்று .மேலும், இந்த மக்களைப் பார்த்து தமிழகத்தில் உள்ள கிராம மக்கள், தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கேள்வி கேட்டால் இனி அவர்களால் மக்களை ஏமாற்ற முடியுமா ?
தேனி மாவட்ட நிருபர் முரளிதரன்.