தேனி மாவட்டத்தில் தொடரும் கனிம வள கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும், பார்வர்ட் பிளாக் மாவட்ட பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி மாவட்ட ஆட்சியருக்கு புகார்  அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் ?

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

தேனி மாவட்டத்தில் உள்ள  ஆண்டிப்பட்டி தாலுக்கா மரி குண்டு  ஊராட்சியில்  மலை மண் மற்றும் கிராவல்  எடுக்க கொடுக்கப்பட்ட அனுமதி அளவைவிட மொத்தமாக அப்பகுதியே காலி செய்துள்ளனர். இது எவ்வளவு பெரிய விதிமீறல் என்பது மாவட்ட ஆட்சியருக்கும் ,கனிம வளத்துறை அதிகாரிக்கும் தெரியாததா?

 மேலும், இது சம்பந்தமாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களை கண்டு கொள்ளாமல் ,அதை குப்பையில் தூக்கி போடுகிறார்கள். பொதுமக்கள் எதற்காக புகார் அளிக்கிறார்கள்? என்பது மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரியாததா? மேலும் இந்த கிராவல் மண் மலை மண் எடுப்பதெல்லாம் சட்டப்படி எடுக்கிறார்களா? அல்லது சட்டவிரோதமாக எடுக்கிறார்களா? இதைப்பற்றி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்வதில்லையா?

 மேலும், இந்த கிராமத்திற்கு மண் ஏற்றி செல்லும் வாகனங்கள் அதாவது டாரஸ் லாரிகள் தினமும் வந்து செல்லும்போது, கிராம மக்களை உயிர் பயத்தில் வைத்து, இந்த சட்ட விரோத கிராவல் மண், மலை மண் எடுப்பது பற்றி பொதுமக்களின்  கருத்துக்களையும், உணர்வுகளையும் மதிக்காமல் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்று கொள்ளை அடிப்பது வாடிக்கையாக்கிவிட்டது. சட்டத்தை மதிப்பதில்லை. உயர்நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை. இவர்களுக்கு தேவை என்றால் நீதிமன்றத்தை நாடுகிறார்கள்.

 ஆனால், அதே நீதிமன்றம் கொடுக்கின்ற உத்தரவுகளை மதிப்பதில்லை என்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தேனி மாவட்டம் வேப்பம்பட்டி கிராமம் தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இரண்டு டாரஸ் ,20 லாரிகள் அங்கும், இங்கும் செல்லும்போது மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள். இது மட்டுமல்ல, இந்த மண் கொள்ளை  அண்டை மாநிலமான கேரளாவிற்கு விற்கப்பட்டு வருகிறது.கேரளாவில் இருந்து எந்த ஒரு மண்ணும், மணலோ எடுத்து வர முடியாது.

ஆனால், இங்கு இருக்கின்ற மணலும், மண்ணும் விற்று ஆட்சியாளர்கள் பணம் பார்ப்பது பொது மக்களுக்கு மிகப்பெரிய  சோதனையும், வேதனையும் இந்த மாவட்ட மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இவர்களுக்கு வாக்களித்து இவர்களை ஆட்சியில் உட்கார வைத்து, நாம் போட்ட வாக்கு நமக்கு எதிராக இருக்கிறது என்பதுதான் இப்பகுதி மக்களின் ஒவ்வொரு நாள் புலம்பல்.

மேலும், இந்த மண் கொள்ளை கேரளா டாரஸ் வண்டிகளில் இரவும், பகலும் கிராம குடியிருப்பு பகுதிகளில் எடுத்துச் செல்ல எந்த மாவட்ட ஆட்சியர் இவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்? என்பதுதான் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களான காமாட்சிபுரம் ,எஸ் அழகாபுரி, ஏரகோட்டை பட்டி, வேப்பம்பட்டி,  பூமழை குண்டு,விசிபுரம், சீலையம்பட்டி, ஆகிய கிராமங்கள் வழியாக இந்த மண் கொள்ளை எடுத்துச் செல்லும்போது மக்கள் மிகுந்த துயரங்களையும் ,வேதனைகளையும் அனுபவித்து வருகிறார்கள்.

இது தவிர, அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ ,மாணவிகள் பள்ளிக்கு சென்று வரும் போது ,அவர்கள் வீட்டுக்கு வரும் வரை பெற்றோர்கள் ஒருவித உயிர் பலி அச்சத்திலே இருந்து வருகிறார்கள். இதற்கு காரணம் என்னவெனில் வேப்பம்பட்டி கிராமத்தில் நடந்த சம்பவம் தான் கடந்த 2019 தேர்வு விடுமுறை நாள் அன்று பள்ளிக்கு சைக்கிள் ஓட்டிச் சென்ற புதிய காலனி அருகே பள்ளி மாணவன் மீது டிப்பர் லாரி மோதி ,சம்பவ இடத்திலேயே மாணவன் உயிரிழந்தான். இன்று வரை இந்த நிகழ்வு ,அந்த கிராமத்தில் மக்கள் மனதில் நீங்காமல் ஒரு பதற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர் .

மேலும், இயற்கை கொடுத்த கொடையான கிராவல் மண், மலை மண்  போன்றவற்றை ஆட்சி, அதிகாரம் இருப்பவர்களுக்கு சுயநலமாக  சட்ட விதிமுறைகளை மீறி கொள்ளையடிப்பதால் பொதுமக்கள் குமுறல். இந்த பகுதிக்கு அமலாக்கத்துறை வராதா? என்ற ஏக்கத்தில் இருந்து வருகின்றனர். மேலும், இந்த மாவட்ட மக்கள் முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடிசாம்பல் தான் என்பதை மறவாதீர் என்ற சாபத்தையும் கொடுக்கிறார்கள். இவையெல்லாம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கும், தேனி மாவட்ட ஆட்சியருக்கும் எங்கள் வேதனை புரிகிறதா ? – கிராம மக்கள். முரளி செய்தியாளர்-தமிழ்நாடு சமூகநல பத்திரிக்கையாளர் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *