தேனி மாவட்ட பி.ஆர்.ஓ நல்லதம்பி மற்றும் ஏ.பி.ஆர்.ஓ மகாவிஷ்ணு செய்தியாளர்களுக்குள் ஜாதி மற்றும் ஏழை, பணக்காரன் பாரபட்சம் காட்டும் PRO & APRO இருவர் மீதும், செய்தித்துறை இயக்குனர் மோகன் நடவடிக்கை எடுப்பாரா ?

அரசியல் ஆன்மீகம் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் பத்திரிக்கை என்றால் அர்த்தம் தெரியாத பல செய்தியாளர்கள் இருக்கும்போது ,இது போன்ற PRO & APRO செய்தியாளர்களிடம் பாரபட்சம் காட்டுவது இருக்கத்தானே செய்வார்கள் .மேலும், பத்திரிக்கை துறையை பற்றி பல முறை மக்கள் அதிகாரத்தில்  தெரிவித்து வந்தும் ,இது போன்ற சமூக அநீதி  பத்திரிக்கை துறையில் இருப்பது மிக, மிக கேவலம் .

மேலும், பலமுறை எழுதியிருக்கிறேன், தவிர, பத்திரிக்கையும் தேனி மாவட்டத்தில் உள்ள பி ஆர் ஓ அலுவலகத்திற்கு மாதம்தோறும் கொடுக்கப்பட்டு வருகிறது. படித்தால்தானே  உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள முடியும்? எப்படியோ, அந்த காலத்தில் தனது தந்தையின் கட்சி செல்வாக்கு அல்லது உறவினரின் கட்சி செல்வாக்கின் சிபாரிசில் வேலைக்கு வந்து விட்டார்கள்.

 அதனால் இவர்களுக்கு இந்த பத்திரிக்கை துறை என்றால், அரசியல் கட்சிப் பணி போலவே நினைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள் .இவர்கள் எல்லாம் பட்டம் பெற்று எத்தனை ஆண்டு காலம் செய்தி துறையில் வேலை செய்தும், பத்திரிக்கை துறையைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய வேதனை .மேலும், பத்திரிக்கை என்பது அறிவு சார்ந்தது. இங்கே ஏழை ,பணக்காரன் பெரிய பத்திரிக்கை, சிறிய பத்திரிக்கை என்ற குருட்டுத்தனமான குறுகிய வட்டத்திற்குள் இருப்பவர்களுக்கு புரிய வைக்க முடியாது .

மேலும், இதுபோன்ற குறிகே வட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் தினசரி பெரிய பத்திரிகைகள், பெரிய தொலைக்காட்சிகள் எதுவாக இருந்தாலும், அறிவை விலை கொடுத்து வாங்க முடியாது. ஒருவருக்கு தெரிந்தது ,இன்னொருவருக்கு தெரியாது. இங்கே நான் பெரியவன், நீ பெரியவன் என்பதெல்லாம் அறிவு சார்ந்தவர்கள் ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். பத்திரிகை என்பது அறிவு சார்ந்தது. இங்கே பெரிய பத்திரிக்கை, சிறிய பத்திரிக்கை என்று பாரபட்சம் காட்டும் PRO களுக்கு, இதே சிறிய பத்திரிக்கையில் பெரிய விஷயம் வந்தால் அது பெரிய பத்திரிகையா? (OR) சிறிய பத்திரிக்கையா? இதே பெரிய பத்திரிக்கையில், சிறிய விஷயங்கள் வந்தால், அது சிறிய பத்திரிக்கையா? அல்லது பெரிய பத்திரிக்கையா?

 இதற்கு பிஆர்ஓ நல்லதம்பி, ஏ பி ஆர் ஓ மகாவிஷ்ணு பதில் சொல்ல முடியுமா? முதலில் இந்த பத்திரிகைகளில் பாரபட்சம் காட்டும் நீங்கள், எந்தெந்த பத்திரிகைகளில் மக்களுக்கான செய்தி, தினமும் தினசரி எத்தனை வருகிறது? என்பதை நிருபியுங்கள். மேலும், மக்களுக்கான அதன் பயன் என்ன? என்பதை நிருபியுங்கள். நானே அதை ஏற்றுக் கொள்கிறேன். இந்த கேள்வியை செய்தித் துறையில் மத்திய அரசில் பணிபுரி கூடிய முக்கிய அதிகாரி ஒருவரிடம் கேட்டேன். அவரால் சரியான பதில் சொல்ல முடியவில்லை .அவரும் என்னிடம் சிறிது நேரம் வாதம் செய்துவிட்டு ,பிறகு நீங்கள் சொல்வது போல் ஆட்சியாளர்களை எதிர்த்து, அரசியல் கட்சிகளை எதிர்த்து பத்திரிக்கை நடத்த முடியாது என்று தெரிவித்து விட்டார் .

ஆனால் ,இதையெல்லாம் எதிர்த்து ஒரு சாமானிய பத்திரிகைகள், இந்த சமூகத்திற்காக மக்களிடம் உண்மையை கொண்டு சேர்க்கும் பத்திரிக்கை பத்திரிக்கையாளர்களை அவமதிக்கின்றீர்கள் என்றால் உங்களுக்கு பத்திரிக்கை பற்றிய அர்த்தம் தெரியாது. அதுமட்டுமல்ல சொந்த பணத்தில் சமூக ஆர்வலர்கள் பத்திரிக்கை நடத்தி ,கூடுமானவரைக்கும் உண்மைகளை கொண்டு சேர்க்கின்ற பத்திரிக்கை மற்றும் செய்தியாளர்களையாவது மதிக்க தெரியுமா? மேலும் ,பத்திரிக்கையில் வரக்கூடிய செய்திகள் எவ்வளவு பொய்? எவ்வளவு உண்மை என்பதை தெரியுமா?

 எதுவுமே தெரியாமல் தனக்கொரு அரசின் சீட் PRO & APRO கிடைத்துவிட்டது என்று உட்கார்ந்து கொண்டு, அரசாங்கம் அதிகாரம் கொடுத்துவிட்டது என்று மாதா,மாதம் சம்பளம் வாங்கிக் கொண்டு மாவட்ட ஆட்சியர் போட்டோவையும் செய்தியும் ஒட்டி பைல் அனுப்பி கொண்டிருக்கும் உங்களுக்கு இதுதான் பத்திரிக்கை என்று குறுகிய வட்டத்தில் பணி செய்து கொண்டிருக்கிறீர்கள். பத்திரிக்கை என்றால் குறுகிய வட்டத்திற்குள் ஆட்சியாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நடத்திக் கொண்டிருக்கும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் பெரிய பத்திரிகையா ?சமூக நீதிக்கும்  , மக்களுக்கும் உண்மைகளை கொண்டு சேர்க்கும் பத்திரிகைகள்  சிறிய பத்திரிகையா ? இப்போது சொல்லுங்கள் ?எது சிறிய பத்திரிக்கை? எது பெரிய பத்திரிக்கை? இப்போதாவது PRO  நல்ல தம்பிக்கும் APRO  விஷ்ணுவுக்கும் பத்திரிகை என்றால் ,அர்த்தம் புரிந்ததா?மேலும்,

 பத்திரிக்கை என்பது மிகப்பெரிய கடல் .அந்த கடலில் பெரிய பத்திரிகைகள் முத்துக்களை எடுப்பதாக இந்த செய்தி துறை அதிகாரிகள் தவறான கற்பனையில் இருந்து வருகிறீர்கள். அது மிகவும் தவறு. அதை எல்லாம் இந்த சமூக நலன் செய்தியாளர்கள், பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து அதற்கான போராட்டங்கள், நீதிமன்றத்திற்கு இப் பிரச்சனையை கொண்டு செல்லும்போது நிச்சயம் அனைவரும் புரிந்து கொள்வீர்கள். மேலும், பத்திரிக்கை துறை தமிழ்நாட்டில் மிகவும் கேவலப்பட்டு கொண்டிருக்கிறது. இதே பெரிய பத்திரிக்கை, சிறிய பத்திரிக்கை ,பெரிய தொலைக்காட்சி என்று நீங்கள் நினைத்துக் கொண்டு பேசி வரும் அல்லது பாரபட்சம் காட்டி வரும் உங்களுக்கு பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் இதைப் பற்றி எவ்வளவு விமர்சனங்கள் செய்து வருகிறார்கள் என்பது சமூக ஊடகங்களில் பார்த்திருக்கிறீர்களா?

 மேலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த நிருபர்களை புறக்கணிப்பதாக தேனி மாவட்ட செய்தியாளர்கள் குற்றச்சாட்டுக்கு உங்களால் பதில் தர முடியுமா? அல்லது இல்லை என்று மறுக்க முடியுமா?

தவிர, தேனி மாவட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள், தங்கள் பணி புரியும் பத்திரிகை நிறுவனத்நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட செய்தியாளர் கடிதங்கள், மாவட்ட  ஆட்சியருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் தங்களுக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கும், செய்தியாளர்களுக்கும் அரசு செய்திகள் மற்றும் விளம்பரங்கள் கொடுக்கப்படுகிறது. இது பத்திரிக்கை சுதந்திரமும் அல்ல ,நாட்டின் நான்காவது தூணும் அல்ல. பத்திரிக்கை என்பது தனக்கு வேண்டிய செய்தியாளர்கள், தனக்கு வேண்டிய பத்திரிகைகள், செய்தித் துறைக்கு எடுப்பு வேலை செய்வதற்கும் , காக்கா புடிக்கிற வேலை பார்ப்பதற்கும் பத்திரிகை என்ற நான்காவது தூண் வேலை அல்ல .

மேலும், தனக்கு வேண்டிய செய்தியாளர்களுக்கும், தனக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கும், தீபாவளி, பொங்கல் வந்தால் அவர்களுக்கு மட்டும் மாவட்டங்களில் உள்ள முக்கிய அதிகாரிகளிடம் வசூல் செய்து ஸ்வீட் பாக்ஸ், பட்டாசு பாக்ஸ் மற்றும் துணிகளை கொடுப்பது எவ்வளவு கீழ்த்தரமான ஒரு வேலையை இந்த செய்தி துறை அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்? இதுதான் செய்தி துறை அதிகாரிகளின் லட்சணமா?

 இவர்களுக்கு பத்திரிக்கை என்றால், இவர்கள் சொல்வதுதான் செய்தி. இவர்கள் சொல்வதுதான் பத்திரிக்கை. இவர்கள் சொல்பவர்கள் தான் செய்தியாளர்கள். அப்படி என்றால் இந்த பத்திரிக்கை மற்றும் இந்த செய்தியாளர்கள் நிலை என்ன? இதுதான் பெரிய பத்திரிக்கையின் நிலையா? இவர்கள்தான் பத்திரிகைதுறையின்  நான்காவது தூணா? இப்போதாவது சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் இந்த உண்மைகளை தெரிந்து கொள்வார்களா?

மேலும், தேனி மாவட்டத்தில் தொடர்ந்து வெளிவரும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இணையதளத்திலும், வெளிவந்து கொண்டிருக்கிறது. இதைக் கூட whatsapp குழுவில் இந்த பிஆர்ஓ மற்றும் ஏ பி ஆர் ஓ சேர்க்கவில்லை என்று செய்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால், மக்களுக்கு போய் சேர வேண்டிய நல்ல கருத்துக்கள், உண்மைகள் இவர்களே தடுப்பது செய்தித்துறை எப்படி நடுநிலையாக மக்களுக்கு பணியாற்ற முடியும் ? மேலும், இது மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு, இப்படிப்பட்ட பாகுபாடு செய்வது நாட்டில் நான்காவது தூணுக்கு கொடுக்கின்ற அங்கீகாரமா?

தவிர, தனக்கு வேண்டிய பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் அரசு விழா நிகழ்ச்சிகளிலும், அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் ,பத்திரிகையாளர்கள் பெயரைச் சொல்லி பணத்தை வசூல் செய்து வேண்டியவர்களுக்கு கவர் கொடுத்து, வேண்டாதவர்களை புறக்கணிப்பது இவர்களுடைய வேலையாக உள்ளது .அது மட்டுமல்ல, முறையாக செய்தியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய இருசக்கர வாகனத்தின் அரசு ஸ்டிக்கர் கூட தருவதில்லை .இந்த மாவட்டத்தில் சுமார் 70 நபர்களுக்கு மேல் பஸ் பாஸ் கொடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அதிலும் முறைகேடு நடந்துள்ளது.

மேலும் ,இந்த அரசு மகளிருக்கு இலவச பஸ் பாஸ் கொடுத்து, ஓட்டுக்காக இருந்து வரும் நிலையில், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு இலவச பஸ் பாஸ் கொடுக்காமல் அலட்சியம் செய்வது ,எவ்வளவு தரம் தாழ்ந்த வேலையை செய்து வருகிறது? என்பது இதிலே புரியும். ஏனென்றால், அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுகின்ற பத்திரிகைகளுக்கு எந்த சலுகை ,விளம்பரங்களும் கொடுக்கக் கூடாது .

அரசு என்ன தவறு செய்தாலும், அது நன்றாக மக்களிடம் செய்கிறது என்று அதை பாராட்டி, அதற்காக ஒரு நாலு கட்சி நபர்களை தேர்வு செய்து, அவர்களுடைய பேட்டியை போட்டுக் கொண்டு, பொதுமக்களை ஏமாற்றுபவர்கள் எல்லாம் பெரிய பத்திரிகை, தொலைக்காட்சிகள், அவர்களுக்குத்தான் அரசு அங்கீகாரம் ,அவர்களுக்குத்தான் பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்கள், அவர்களுக்குத்தான் தமிழக அரசின் அரசு அடையாள அட்டை, இது தான் மத்திய மாநில அரசுகள் இந்த சமூக நலனுக்காக போராடுகின்ற பத்திரிகைகளுக்கு கொடுக்கின்ற நான்காவது தூணின்  அங்கீகாரமா?

 மேலும், மேற்படி சலுகை ,விளம்பரங்கள் கொடுக்கப்படும் பத்திரிகைகளின் விளம்பர தொகையில் 20% முதல் 50% வரை கமிஷன் பெற்று வருவதை சிபிஐ விசாரித்தால் உண்மை நிலை தெரியுமா? மேலும் ,சிறிய பத்திரிகைகள் என்று அலட்சியம் காட்டும் இவர்கள் இதே சலுகை, விளம்பரங்கள்  கொடுத்தால்  ஏன் எங்களால் இந்த சர்குலேஷன் காட்ட முடியாதா? இவர்கள் மட்டும் மக்களின் வரிப்பணத்தில் சர்குலேஷன் காட்ட வேண்டும் .நாங்கள் மட்டும் சொந்த பணத்தில் சர்குலேஷன் காட்ட வேண்டுமா? இதுதான் பத்திரிக்கை சமூக நீதியா?

மேலும், இதில் எவ்வளவு பொய்யான சர்குலேஷன் கணக்குகள் காட்டப்படுகிறது தெரியுமா ?எத்தனை பத்திரிகைகள் அதற்கு தகுதியானவை என்பது தெரியுமா? எத்தனை பத்திரிகைகள் அதற்கு தகுதி இல்லாதது தெரியுமா? மேலும் பருவ இதழ்கள் என்று சொல்லக்கூடிய மாத இதழ், வார இதழ்களில் எவ்வளவு சமூக நலனுக்காக வெளிவரும் செய்திகள் ஆவது தெரியுமா? எவ்வளவு இணையதளத்தில் மக்களுக்கு உண்மையை புரிய வைத்துக் கொண்டிருப்பது தெரியுமா?

 இது எல்லாம் தெரியாமல் அரசு வேலை கிடைத்துவிட்டது என்று அதிகாரத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நீங்கள், மாதந்தோறும் அரசு வழங்கும்  125 லிட்டர் டீசல் போடுவதில் போலி பில்கள் கணக்கு காட்டி வருவது எத்தனை பேருக்கு தெரியும் ? மேலும், அரசு  நிர்வாகத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிக்கை மற்றும் செய்தியாளர்களுக்கு எதிராக அவர்களுடைய போன் நம்பர் மற்றும் பெயர் பட்டியல் கொடுத்து கட்சியை ரவுடிகளோ அல்லது குண்டர்களோ அவர்களை தாக்குதலுக்கு ஆளாக்கும் வேலை ,அதாவது அடியாள் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் செய்தி துறையில் பிஆர்ஓ ,ஏ பி ஆர் ஓ வேலைக்கு வந்துள்ளது இந்த பத்திரிக்கை துறைக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சாபக்கேடு .

அதுமட்டுமல்ல, அங்குள்ள மில் உரிமையாளர்கள் ,கல்லூரி கல்வி நிறுவனங்கள், குவாரி நடத்துவோர் மற்றும் ஜவுளி நிறுவனங்களிடம் குறிப்பிட்ட நிறுவர்களின் பெயர்கள் லிஸ்ட் கொடுத்து மொத்தமாக ஆதாயம் பார்த்து வருவதாகவும், இவர்கள் மீது செய்தியாளர்கள் கொடுக்கின்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு. இப்படிப்பட்டவர்கள் எப்படி பத்திரிக்கை என்றால் என்னை? என்று தெரியாமல் கட்சியின் கரை வேஷ்டி கட்டிக்கொண்டு ,வரவேண்டிய தகுதி உள்ள இவருக்கு எப்படி செய்தித் துறையில் வேலை கொடுத்தார்கள்?அதுவும் மாவட்ட ஆட்சியர் பிஆர்ஓ . இவருடைய சொந்த மாவட்டத்தில் இவர் வேலை செய்வது, அரசியல் கட்சி வேலையா ? அல்லது இவரது அண்ணன் தலைமைச் செயலகத்தில் அண்ணாதுரை உதவி இயக்குனராக இருக்கிறார் என்ற சிபாரிசிலா?

மேலும், இவருக்கு தலைமைச் செயலகத்தில் இவருடைய அண்ணன் அண்ணாதுரை உதவி இயக்குனராக இருப்பதால், இவர்கள் மீது எந்த புகார் அனுப்பினாலும் ,நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று தேனி மாவட்ட செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். jtpu இந்த உண்மைகளை எத்தனை பத்திரிகைகள் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன? செய்திக்கு கொடுக்கப்பட்ட பெயர் தான் செய்தித்தாள், அந்த செய்தித்தாளுக்கு செய்தி கொடுப்பவர்கள் பெயர் தான் செய்தியாளர்கள் . மேலும்,  பத்திரிக்கை துறையின் புரிதல் இல்லாமலே, செய்தித்துறை அதிகாரிகளாக பணியாற்றும் பிஆர்ஓ மற்றும் ஏ பி ஆர் ஓக் களுக்கு  செய்தித் துறை உயர் அதிகாரிகள் பயிற்சி அளிப்பார்களா ?

இதற்கு, இவரைப் போன்ற செய்தித்துறை அதிகாரிகளுக்கு , மேலும் பதில் சொல்ல வேண்டும் என்றால்பெரிய பத்திரிக்கை என்று அரசின் மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் விளம்பர ,சலுகைகள் வாங்கி அனுபவித்து கொண்டிருக்கும் பத்திரிகைகள் எத்தனை லட்சம் பேருக்கு உண்மையான செய்திகளை கொண்டு சேர்த்துள்ளது என்ற விவரம் தெரியுமா? எதுவுமே தெரியாமல் அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் போல காட்டப்பஞ்சாயத்து வேலையா? இது? இது பற்றி விசாரணை செய்து செய்தி துறை இயக்குனர் மோகன் நடவடிக்கை எடுப்பாரா? -தேனி மாவட்ட செய்தியாளர்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *