தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்காமல், நேர்மையான தேர்தல் நடத்த முடியாது – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூடமைப்பு மற்றும் வாக்காளர்கள் .

ட்ரெண்டிங்

ஏப்ரல் 23, 2024 • Makkal Adhikaram

தேர்தல் ஆணையம் தேர்தல் விதி முறைகளை மாற்றி அமைக்காமல், நாட்டில் நேர்மையான தேர்தல், சமூக நலனுக்கான தேர்தல் மற்றும் மக்களுக்காக உழைக்கக்கூடியவர்களை தேர்வு செய்ய முடியாது என்கிறார்கள் வாக்காளர்கள்மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு . 

இது பற்றி மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் பலமுறை இணையதளத்திலும், பத்திரிக்கையிலும், தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் அதைப்பற்றி கண்டு கொள்வதில்லை. தற்போது மக்களிடையே மிகப்பெரிய விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கு என்ன காரணம்? நாட்டில் தேர்தல் என்பது பொது நலன் கருதி, நாட்டு மக்களின் நன்மைக்காக, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி, பாதுகாப்பு, திட்டங்கள், சமூக நன்மை, பற்றிய முக்கிய தேவைக்கான மக்களின் தேர்வு தான் அரசியல் தேர்தல் . 

இந்த தேர்தலை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவச பொருட்கள் கொடுப்பதற்கும், இலவச திட்டங்களை அறிவிப்பதற்கும் ,தேர்தல் நடத்துவது வீணானது என்று பலமுறை மக்கள் அதிகாரம் பத்திரிகையில் தேர்தல் ஆணையத்திற்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது . இங்கே கடமைக்கு தேர்தல் நடத்துவதால் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. 

அதேபோல் அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு, வாக்களிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாமல், அவர்களுக்கு வாக்குரிமை கொடுப்பது நாட்டுக்கு தேவையற்றது. தகுதியான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற புகார்களும், கள்ள ஓட்டுகள் போடப்படுவதாக புகார்களும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர் .இது தவிர, ஓட்டு எந்திரத்தில் எந்த சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமோ, அந்த சின்னம் வரவில்லை. வேறு சின்னத்திற்கு போய் விழுவதாகவும் பொதுமக்கள் புகார் . மேலும் ஓட்டு எந்திரத்தில் பட்டன் அழுத்தினால் லைட் ஆன் ஆகவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. 

அதுமட்டுமல்ல, திமுக தேர்தல் அறிவிப்பு நாட்களுக்கு முன்னரே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து விட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன . அது எப்படி என்றால்? மகளிர் சுய உதவி குழுக்களின் வங்கிக் கடன்கள் கட்டி விடுகிறார்கள் .அவர்களுக்கு ஓட்டுக்கு பணமும் போட்டு விடுகிறார்கள். அதே போல்,வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சரி பார்ப்பது போல், பணம் கொடுத்து விடுவதாக எதிர்கட்சிகள் புகார் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட குளறுபடிகளை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல், கடமைக்கு தேர்தல் நடத்துகிறது.

இது தவிர, ஓட்டுப்பதிவின்போது கொடுக்கப்படும் டே – டாஸ் (Da-ta) அதாவது வாக்கு சதவீதம் தவறாக உள்ளது என்று பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்களின் குற்றச்சாட்டு . அதாவது முதலில் வாக்கு சதவீதம் 72 என்று அன்றைய இரவு 6 மணி க்கு மேல் ஓட்டு பதிவின் போது தேர்தல் ஆணையத்தால் கொடுக்கப்பட்ட புள்ளிவிபரம் அதன் பிறகு 62 சதவீதமாக கொடுக்கிறார்கள் .இது தவறானது. சரிபார்த்து தான் கொடுக்க வேண்டும். காலதாமதம் ஆனாலும், பரவாயில்லை .கொடுப்பது சரியான புள்ளிவிவரமாக இருக்க வேண்டும். 

மேலும், வேலைக்காக சென்னைக்கு வந்தவர்களுக்கு ஊருக்கு சென்று அவர்களின் வாக்கு செலுத்த வேண்டும் என்று புறப்பட்டால் கிளம்பாக்கம் பஸ் நிலையத்தில் அவர்களுக்கு பஸ் கிடைக்காமல், இரவு நேரம் முழுதும் காத்திருக்க வைத்து விட்டார்கள். அந்த மக்கள் எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பார்கள் ? அவர்கள் அனைவரும் திமுக ஆட்சியையும், ஆட்சியாளர்களையும் திட்டி தீர்த்து உள்ளார்கள். எவ்வளவு நேரம் குழந்தை குட்டிகளுடன், இந்த வெயிலில் அங்கே சிரமப்பட்டு இருப்பார்கள்? என்பதை நாம் உணர வேண்டும். இப்படி பொறுப்பற்ற வகையில் தேர்தல் நடத்துவது, கடமைக்கு தேர்தல் நடத்துவது, அதைவிட நடத்தாமலே விட்டு விடலாம்.

 இது தவிர, யார் அதிக பணம் கொடுத்து வாக்குகளை வியாபாரம் செய்வதும், ஏலம் எடுப்பதும், போன்ற அரசியல் கட்சிகளால், மீண்டும் தேர்வு செய்யப்படும்,வேட்பாளர்களால் ஊழல் ஆட்சியை தான் கொடுக்க முடியும். நேர்மையான ஆட்சியை தர முடியாது. இந்த ஊழல் ஆட்சியை மீண்டும் மக்களுக்கு கொண்டுவர, தேர்தல் ஆணையமே உடந்தையாக உள்ளது. இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய மிகப் பெரிய ஜனநாயக கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது என்பதை மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் வாயிலாகவும், ஒட்டுமொத்த இந்திய வாக்காளர்கள் சார்பிலும், தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், இக்கருத்தை பதிவு செய்கிறேன்.

அதனால், தேர்தல் விதிமுறைகளில் தேர்தல் ஆணையம் கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும். மேலும், வாக்காளர்களுக்கு எளிமையான முறையில் வாக்களிக்க அவர்கள் செல்போன் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர் போன்ற கருவிகளில், இணையதளத்தில் வாக்களிக்கும் முறையை கொண்டு வர வேண்டும் என்று பலமுறை, இக்கருத்தை வலியுறுத்தி இருக்கிறேன். இதனால், மக்களுக்கு வெயிலில் நின்று வாக்களிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. கள்ள ஓட்டு போட முடியாது. என்னுடைய கைரேகை வேறு யாரும் வைக்க முடியாது. என்னுடைய ஆதார் நம்பர் மற்றும் தேர்தல் அடையாள அட்டை நம்பர் வேரு யாரும் பயன்படுத்த முடியாது .எத்தனை மணிக்கு, எத்தனை நிமிஷத்தில் நான் வாக்களித்தேன் என்பதை அதில் பதிவு வர வேண்டும் .மேலும், 

நான் அனுமதிக்காமல் வேறு ஒருவர் அதை பயன்படுத்த முடியாது. இது படித்த வாக்காளர்களுக்கு மட்டும், இந்த தேர்தல் விதிமுறையை கொண்டு வரலாம் . ஏனென்றால், படிக்காதவர்களின் வாக்குகளை அரசியல் கட்சிகள் ஒட்டு மொத்தமாக பணத்திற்கு விலை பேசி விடுவார்கள். அதனால், இதை அரசியல் தெரிந்த, சிந்திக்க கூடிய, படித்தவர்களின் வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் . எது எப்படியோ தேர்தல் பற்றிய விழிப்புணர்வு, பொதுமக்களுக்கு அவசியம் தேவை. 

அதற்காக எத்தனை கோடி ?செலவு செய்து மக்களிடம் கொண்டு சென்றாலும், அது நாட்டுக்கு, சமூக நலனுக்கு, நல்ல பலனை தரும். இப்படி கடமைக்கு தேர்தல் நடத்தி, ஊழல் கட்சிகளையும், ஊழல்வாதிகளையும் மக்கள் அரசியல் தெரியாமல் மீண்டும், மீண்டும் தேர்வு செய்து கொண்டிருப்பதும், அவர்களின் வாக்குரிமையை விற்பதும், சமூக நன்மைக்கு எதிரான ஒன்று . 

இதை தேர்தல் ஆணையம் நிச்சயம் தடுக்க நடவடிக்கை எடுத்தால் தான் மக்கள் விரும்பும் அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பது உறுதி . இல்லையென்றால், இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலுக்காக பல ஆயிரம் கோடி செலவு செய்து,கடமைக்கு தேர்தல் நடத்துவது வீண் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *