ஜூலை 16, 2024 • Makkal Adhikaram
நாட்டு மக்களுடைய உழைப்பை உறிஞ்சும் அரசியல்வாதிகளிடம் லஞ்சம் வாங்கும் வாக்காளர்களுக்கும், அரசியல் கட்சி மற்றும் கட்சியினருக்கும் தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் தேச நலனுக்காக கடும் சட்டத்தை கொண்டு வராவிட்டால் நாட்டில் தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஏலம் தான் .
நாட்டில் தேர்தலில் பணமும், மதுபாட்டிலும் ஒருவருடைய வெற்றியை தீர்மானிப்பது தான் ஜனநாயக தேர்தலா ?
தேர்தல் ஆணையத்திற்கு பலமுறை மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் செய்தியை வெளியிட்டு வருகிறோம் . தேர்தல் விதிமுறைகளில் கடுமையான மாற்றம் தேவை .அது மட்டுமல்ல, நடந்து முடிந்த விக்கிரவாண்டி தேர்தல்,
தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதை விட, மக்களை ஏலத்தில் எடுக்க தேர்தல் ஏல போட்டியை நடத்தி விடுங்கள். யார் அதிக பணம் கொடுத்து மக்களை எடுத்துக் கொள்கிறார்களோ, எடுத்துக் கொள்ளட்டும் என்று இந்த மக்களை ஏலம் விடுங்கள். ஆளும் கட்சியாக இருக்கட்டும் ,அரசியல் கட்சியாக இருக்கட்டும், எதிர்க்கட்சியாக இருக்கட்டும், யாராக இருந்தாலும், மக்களிடம் பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்குகிற வேலை, அது ஜனநாயக தேர்தல் அல்ல. தேர்தலில் விசாரணை செய்து ஓரிரு மாதங்களுக்குள் அந்த வேட்பாளரை எந்த கட்சியாக இருந்தாலும் .எவ்வளவு பணம் எந்தெந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது ?என்பதை கணக்கெடுங்கள்.வாங்கினாலும் தண்டனை, கொடுத்தாலும் மூன்றாண்டு சிறை தண்டனை, தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும்.
ட்ரோன்களைக் கொண்டும், ரகசிய கேமராக்கள் வைத்தும், கண்காணியுங்கள். தேர்தல் நடத்துவதற்கு என்று தனி அதிகாரிகளையும், அதற்கான தகுதியான ஆட்களையும் நியமியுங்கள். தேர்தல் பணிகளில் அரசு அதிகாரிகளை அப்புறப்படுத்துங்கள். துணை ராணுவம் பயன்படுத்துங்கள். ராணுவ அதிகாரிகளை கொண்டு தேர்தல் நடத்துங்கள். மக்களுக்கு பணம் கொடுத்தார்கள் என்றால் அது பற்றி சிபிஐ விசாரணையில் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், உடனடியாக அவர்களை பதவி நீக்கம் செய்யுங்கள்.மேலும்,
பணத்தைக் கொடுத்து தேர்தலில் வெற்றி பெறுவது ஊழல் செய்ய அல்லது அரசியல் வியாபாரம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட வரின் நோக்கமாக இருக்குமே ஒழிய, மக்களுக்கு சேவை செய்யும் நோக்கம் துளி கூட இருக்காது. இதை தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் கருத்தில் கொண்டு இதற்கான சட்ட விதிமுறைகளை தேர்தலில் கடுமையாக்கப்பட வேண்டும் . மேலும், ஒருவர் தேர்தலில் நிற்கும் போது அவருடைய சொத்து மதிப்பு ஒரு பங்கு என்றால், ஐந்து வருடத்திற்குள் அவருடைய சொத்து மதிப்பு 100 பங்காக உயர்ந்து விடுகிறது. இது எல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று.
அதனால், பணத்தைக் கொடுத்து மக்களின் அதிகாரத்தை விலைக்கு வாங்கி, அரசியலில் கொள்ளை அடித்து பினாமி பெயரில் சொத்துக்களும் வாங்கி குவித்து வருவது ,இன்று ஊழல் வழக்குகள் நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கென்று தனி நீதிமன்றம், அரசு அதிகாரிகளின் நேரம், இவை அனைத்தும் தேவையில்லாமல் செலவு செய்து, இவர்களுடைய பொய் கணக்குகளை கண்டுபிடிக்க சிபிஐ, உளவுத்துறை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, ஊழல் கண்காணிப்பு துறை இவ்வளவும் போராட வேண்டி இருக்கிறது.எதற்கு அந்த வேலை? உடனடியாக அந்த சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள் . நீதிமன்றத்தில் நிரூபித்து விட்டு திரும்ப பெறட்டும் .
ஏன் இவ்வளவு சிரமம்? ஒருவன் அரசியலுக்கு தகுதி இல்லாதவன். அவனை அரசியல் கட்சி பணம் கொடுத்து ஜெயிக்க வைக்கிறது என்றால்! எந்த நோக்கத்திற்காக ஜெயிப்பான்? மக்கள் முட்டாள்களாக வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். சுயநலவாதிகளாக வாக்களிக்கிறார்கள். பணத்திற்காக வாக்களிக்கிறார்கள். ஜனநாயக தேர்தலை கேலிக் கூத்தாக வாக்களிக்கிறார்கள். இதையெல்லாம் மாற்றம் கொண்டு வர வேண்டும். நாட்டில் அம்பேத்கர் போட்டோ ஓட்டை சட்டத்தை வைத்து இந்த காலத்து மக்களுக்கு அது ஏற்புடையதல்ல .
அம்பேத்கர் காலத்தில் இப்படி பணத்திற்காக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஒருவன் பொருளோ, பணமா கொடுத்தால், மக்கள் மனசாட்சி இல்லாமல் வாக்களிக்க மாட்டார்கள். அம்பேத்கர் சட்டம் மனசாட்சி உள்ள மக்களுக்கு மட்டும்தான் இன்று மனசாட்சி இல்லாத மக்களுக்கு, சட்டங்களை அதற்கேற்றார் போல் இந்திய தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் சேர்ந்து மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இது நாட்டின் சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் சமூக ஆர்வலர்கள் அரசியல் தெரிந்தவர்கள் அனைவரின் கோரிக்கை.