திருப்பூரில் பிறந்து 34 ஆண்டுகள் அரசு பணியில் பல இடங்களில் வேலை பார்த்த இணை இயக்குனர் குமார் இறுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பில் கிண்டி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில்,சிறப்பான வரவேற்பு அளித்து ,பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அப்போது இவரைப் பற்றி அந்நிகழ்ச்சியில் பேசிய ,இயக்குநர்கள் , இணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் !
ஒரு மனிதன் பிறந்து அரசு வேலையில் பணியாற்றினாலும் அல்லது தனியார் நிறுவனத்தில் பணியாற்றினாலும் அல்லது சமூகப் பணியில் ஈடுபட்டிருந்தாலும், பணி ஓய்வு பெறும் போது சக அலுவலக நண்பர்கள், தனக்கு கீழ் பணி புரிபவர்கள், அவர்கள் அத்தனை பேரும் வாழ்த்துக்கள் பெற்று அன்புடன் வரவேற்று பிரிவு உபசார விழா நடத்தும்போது, அலுவலக பணியில் இருந்த போது, யாருக்கெல்லாம் என்னென்ன உதவி செய்தார் ? எப்படி எல்லாம் தன் வளர்ச்சிக்கு உதவினார் ? என்பதை இந்த நேரத்தில் தான் தெரிந்து கொள்ள முடியும். மேலும்,
இவ்விழாவில் இணை இயக்குனர் குமாருக்கு நற் சான்றும், பாராட்டும் தெரிவித்தது , அங்கே அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எல்லோரும் அவரை ஒரு நல்ல மனிதர், தெய்வ பக்தி மிக்கவர், அனைவருக்கும் உதவி செய்யக் கூடியவர், நல்ல பண்பாளர், சிரித்த முகத்துடன் எப்போதும் இருப்பவர் ,இப்படி ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் வாழும்போதும், வாழ்ந்த பிறகும் இப்படி ஒரு பாராட்டு பெறுவது உண்மையிலேயே அரசு ஊழியர்களில் இப்படியும் ஒருவர் இருந்தாரா ? என்பது இக்காலகட்டத்தில் மிகவும் ஒரு ஆச்சர்யமான விஷயம்.
ஒரு பக்கம் பாராட்டுகிறார்கள். மற்றொரு பக்கம் வாழ்த்துகிறார்கள் .இந்தப் பாராட்டும் வாழ்த்தும், ஒரு முகஸ்துதிக்கு யாரும் தெரிவிக்கவில்லை. இதை ஒவ்வொரு இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் தங்கள் உள்ளன்போடுதான் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார்கள். மேலும்,
அவர் எப்படி எல்லோருக்கும் ஒரு நல்ல மனிதர் என்று பெயரெடுத்து, பணியாற்றி, பணி நிறைவு பெறுவது ,இக்கால கட்டத்தில் எவ்வளவு சிரமம் ? ஆட்சிகள் மாறி, மாறி வரும்போது இவர்களுக்கான அரசியல் நெருக்கடிகள் இருக்கும். இது ஒரு பக்கம் மற்றொரு பக்கம் கம்பெனி வழியில் ஏற்படும் பிரச்சனைகள், அதனால் வரும் அரசியல் நெருக்கடிகள், இதையெல்லாம் சமாளித்து எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல், இன்று ஓய்வு பெறுவது அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பெரும் சவால்.
மேலும், அக்கால கட்டத்தில் இருக்கின்ற அதிகாரிகள் ஒவ்வொருவரும், இப்ப பணியினை ஒரு இன்வால்வ்மெண்டோட செய்திருக்கிறார்கள் என்பது இந்த பணி நிறைவு விழாவின்போது பேசிய ஒவ்வொரு அதிகாரிகளின் பேச்சிலிருந்து வெளிப்பட்ட தகவல். இப்போது கடமைக்கு அரசு பணியினை செய்கிறார்கள்.
அதனால், மக்களுக்கு எந்த பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை இதை இன்றைய அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஆட்சியாளர்களின் எடுபிடிகளாக அரசு ஊழியர்கள் இருக்கக்கூடாது. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உண்மையில் இப்படி ஒரு மனிதர், தனக்கு மேல் உள்ள அதிகாரிகளும் , தன்னுடன் பணியாற்றுபவர்களும், தன் கீழ் பணியாற்றுபவர்களும், எல்லோரும் வந்து ஒரு குடும்ப நிகழ்ச்சி போல் வாழ்த்தி விட்டு சென்றது, இணை இயக்குநர் குமார் இத்துறையில் இவர் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்துள்ளது என்பது பணி நிறைவு விழாவில் பேசிய ஒவ்வொருவரின் பாராட்டும், வாழ்த்தும் அதற்கு சான்று. அவருக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் வாழ்த்துக்கள்.
செய்தியாளர் – முருகன்