ஆவடி நாசர் ஒரு அமைச்சருக்கு உள்ள தகுதி நிச்சயம் அவரிடம் இல்லை. பொதுவெளியில் தனது கட்சியினர் என்று கூட பார்க்காமல் கல்லை எறிந்தது, இதுவரையில் தமிழ்நாட்டில் எந்த அமைச்சரும் இல்லை. அதுபோல், அதிகாரிகளிடம் எப்படி பேச வேண்டும்? அந்த இங்கிதமும் இல்லை. பத்திரிகை செய்தியாளர்களிடம் எப்படி பேச வேண்டும்? என்ற முறையும் தெரியவில்லை. இப்படிப்பட்ட ஒருவரை தான் தமிழக,முதல்வர் M.K.ஸ்டாலின் , நாசரை பால்வளத்துறை அமைச்சர் ஆக்கினார். அதையும் தக்க வைத்துக் கொள்ள அவரால் முடியவில்லை. ஆசை அளவோடு இருந்தால் பரவாயில்லை .அளவுக்கு அதிகமாக ஆசை, அது ஆபத்தில் தான் போய் முடியும். அந்த வகையில் நாசர், நாசர் உடைய மகன் இவர்களுடைய கட்டுப்பாட்டில் ஆவடி மாநகராட்சி இருந்தது. இவர்களை கேட்காமல் ஒரு துரும்பக் கூட ஆசைய கூடாது. அப்படி வைத்திருந்தார்கள்.
ஆனால், இதனுடைய ஒவ்வொரு ரிப்போர்ட்டும் திமுகவினர், உளவுத்துறை அதிகாரிகள், அவ்வப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்தனர். இது தவிர, இவர் அமைச்சர் பதவியில் இருந்த பால்வளத் துறை இந்த இரண்டு ஆண்டுகளில் படாத பாடு பட்டு விட்டது. ஒரு பக்கம் அதிகாரிகள், மற்றொரு பக்கம் பால் முகவர்கள், இவர்கள் தலைமைச் செயலாளர், முதல்வர் மு க ஸ்டாலின், ஒவ்வொரு மாதமும் ,இவர்களுடைய கதறல் வாட்ஸ்அப் செய்திகளில் வெளிவந்து கொண்டே இருந்தது. இவர்களுக்கு எல்லாம் தற்போது ஒரு விடியல் ஏற்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், பால் பாக்கெட் களின் அளவு ஒரு பக்கம் குறைவாக இருந்தது. குளிர்பான பேக்குகளின் அளவு குறைவாக இருந்தது. அதேபோல் ,தீபாவளி ஸ்வீட் போன்றவையும் தரம் குறைந்து இருந்ததாக பத்திரிகை செய்திகளில் கூட வெளிவந்துள்ளது. இது எல்லாவற்றையும் விட பால்வளத் துறை நஷ்டத்தில் இயங்கி இருப்பதாக வெளிவரும் தகவல் .இவ்வளவு பிரச்சனைக்கும் அமைச்சர் பதவியில் இருந்து நாசரை தூங்கியதால், முதல்வர் மு க ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
இது தவிர ,திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்க்ஸ்சை தனக்கு பி ஏ வாக வேலை பார்க்க வைத்து விட்டார். இவ்வளவு விஷயங்கள் நாசரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கியதால் ,திருவள்ளூர் மாவட்ட பொதுமக்களும், அதிகாரிகளும், பால்வளத்துறையும் இதை வரவேற்றுள்ளனர்.