நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் ,ஊடகங்கள் அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றி தான் ஒரே பேச்சு! நாட்டு மக்கள் நலன் தேவையில்லையா ?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் ஒவ்வொரு நாளும் அரசியல் கட்சிகள் கூட்டணி பற்றி தான் பேச்சு. மேலும், எந்த கூட்டணிக்கு எவ்வளவு சீட்டுகள் கிடைக்கும்? எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதியில் செல்வாக்கு?இதனால், எந்தெந்த கட்சிகளுக்கு அரசியல் லாபம் ?எதற்கு மைனஸ், எதற்கு பிளஸ் ,எந்தக் கட்சிக்கு ஆதரவாக செய்தி வெளியிடலாம்? எந்த கட்சிக்கு மறைமுக எதிர்ப்பு செய்திகளை வெளியிடலாம்?

 இதனால் நமக்கு என்ன லாபம்? இதைப்பற்றி தான் டிவியில் விவாதம், சோசியல் மீடியாக்களில் விவாதம், சமூக ஊடகங்களில் விவாதம், இப்படி வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கருத்துக்களையும், ஆய்வுகளையும், ஆலோசனைகளையும், வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த மக்களை பற்றி ஒருவரும் சிந்திக்கவில்லை. எந்த கட்சி ஆட்சி அமைத்தால் மக்களுக்கு நல்லது? எந்த கட்சி கூட்டணிகள் ஊழலற்ற ஆட்சியை மக்களுக்கு தரும்? மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எந்தெந்த அரசியல் கட்சிகள் செயல்படுவார்கள்?

 இதைப்பற்றி ஒரு ஊடகங்கள், ஒரு சமூக ஊடகங்கள் ,ஒரு விவாத ஆலோசகர்கள் கூட, இதுவரை பேசவில்லை. அரசியல் கூட்டணி அதுவும் சுயநலமாக, எந்த கட்சியுடன் கூட்டு சேர்ந்தால் நாம் ஜெயிக்க முடியும்? எந்த கட்சியுடன் கூட்டு சேர்ந்தால், சிறுபான்மை வாக்கு வரும்? பெரும்பான்மை வாக்கு வரும்? பணம் வரும்? இதையெல்லாம் பற்றி தான் அரசியல் கட்சிகள் சிந்திக்கிறார்கள். பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், வாக்களிக்கும் மக்களைப் பற்றி ஒருவரும் சிந்திக்கவில்லை. ஒருவரும் செய்திகளை வெளியிடவில்லை. ஆளும் கட்சிகள் இதுவரை மக்களுக்கு என்ன செய்தது? எதிர்க்கட்சிகள் மக்களுக்கு இதுவரை என்ன செய்து கொண்டு இருந்தது? இதைப் பற்றி எல்லாம் யாரும் பேசவில்லை. இதைப் பற்றி யாரும் செய்திகளும் வெளியிடவில்லை.

 இவர்கள் அரசியல் கட்சிகளுக்காக தான் மக்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள். மக்களுக்காக அரசியல் கட்சிகளா? அல்லது அரசியல் கட்சிகளுக்காக மக்களா? அதாவது செருப்புக்காக காலா? அல்லது காலுக்காக செருப்பா? வாக்களிக்கும் மக்கள் ஏதோ கூலிக்காரர்கள் போல, அதாவது 5000, 2000, 500 ஏலத்தில் இவர்களை எடுப்பது போல் நினைத்துக் கொண்டார்களா? இப்படி பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுப்பதில்லை. அவர்களுடைய வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்வதில்லை. இப்படிப்பட்ட தேர்தல் எப்படி ஜனநாயக தேர்தல் ஆகும்?

மேலும்,தேர்தல் ஆணையம் இன்னும் தன்னுடைய  கடமையை செய்யவில்லை .அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும். மக்களாட்சியின் அடிப்படை தேர்தல் ஆணையம் ஒரு நாட்டின் வலிமையான, நேர்மையான, நிர்வாகத்தை கொடுக்கக்கூடிய அரசியலுக்கு தகுதியானவர்கள் யார் ?என்பதை புரிந்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

தவிர,ஒருமுறை கூட தேர்தல் ஆணையம் தன் பங்கிற்கு தேர்தலைப் பற்றிய கருத்துக்களை மற்றும் அதன் முக்கியத்துவத்தை, அதன் வலிமையை என்ன என்று இதுவரை ,மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை. பல ஆயிரம் கோடி செலவு செய்து என்ன பயன்? நூறு அரசியல் கட்சிகள் தேர்தலில் நிற்பதால் ,மக்களுக்கு என்ன பயன் ?மக்களை சிந்திக்கும் அரசியல் கட்சிகள் எத்தனை? ஊடகங்கள் எத்தனை? அது பற்றி பேசாமல் ,தேர்தல் வியாபார கூட்டணிகளை பற்றி பேசிக் கொண்டிருப்பது ,தேர்தல் என்பது அரசியல் வியாபாரம் ஆகிவிட்டதா? அந்த வியாபாரத்தை வாக்காளர்கள், தகுதியானவர்களை தேர்வு செய்து. முறியடிப்பார்களா? – சமூக ஆர்வலர்கள், சமூக நலன் பத்திரிகையாளர்கள், சமூக நலன் பத்திரிகைகள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *