நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால், எந்தெந்த அரசியல் கட்சிகள் எவ்வளவு பொய்களை மக்களிடம் சொல்லுமோ ….! – விழித்துக் கொள்வார்களா ?  வாக்காளர்கள் .

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் அரசியல் என்பது அரசியல் கட்சிகளுக்கு, தொண்டு நிறுவனங்களுக்கு, சமூக அமைப்புகளுக்கு, பணத்திற்காக விலை போகும் அரசியல் கூட்டம், அரசியல் தெரியாத வாக்காளர்களிடம் பொய் பிரச்சாரங்களை செய்து அவர்களை முட்டாளாக்கும் சுயநல அரசியல் வியாபாரத்தை பொங்களுக்குப் பிறகு தொடங்கி விடுவார்கள் .

இதில் எத்தனை சுய உதவிக் குழுக்களுக்கு பணம்  போகுமோ, இந்த போட்டியில் அதிமுக வா ?திமுக வா? என்று யார் இதில் முந்திக் கொள்ளப் போகிறார்கள்? இதே போல், தொண்டு நிறுவனங்கள், பெண்கள் சமூக நல அமைப்புகள், இது தவிர, கிருத்துவ அமைப்புகள் ,முஸ்லிம் அமைப்புகள் பணத்தை கொண்டு இரண்டு கட்சிகளும் விலை பேசுவார்கள் .

இதுதான் இந்த ரகசிய அரசியல் வியாபாரம். இந்த ரகசிய அரசியல் வியாபாரத்தை நடத்துவதற்கு எல்லா பகுதிகளிலும் ஏஜென்ட்கள் இருப்பார்கள். இந்த ஏஜெண்டுகளும், அரசியல் கட்சி ஏஜென்ட்டுகளும் ,கைகோர்த்து இந்த ரகசிய அரசியல் டீலிங் செய்வார்கள் .இப்படி தான் பல ஆண்டுகளாக இந்த டீலிங் நடைபெற்று வருகிறது .இதையெல்லாம் முறியடிக்க மக்கள் தயாராக இருப்பார்களா? அல்லது அவர்களுடைய வீக்னஸை இந்த அரசியல் வியாபாரிகள் பயன்படுத்தி கொள்வார்களா?

 இப்படிப்பட்ட பொய் பிரச்சாரங்களையும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதையும், பணம் வாங்குவதையும் தேர்தல் ஆணையம் கண்டு கொள்வதில்லை.தேர்தல் ஆணையம் இந்த வாக்காளர்களுக்கு அடிப்படைத் தகுதியாவது கொண்டுவர பிரச்சாரங்கள் செய்ய வேண்டும். மேலும், இந்த தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். அதாவது அரசியல் கட்சிகள் பிரச்சாரங்கள் அத்தனையும் தேர்தல் ஆணையமே அவர்களுக்கு பதிலாக செய்ய வேண்டும்.

 இவர்கள் வாக்காளர்களை சந்திக்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கையோ அதையெல்லாம் எடுக்க வேண்டும். ஏனென்றால் வாக்காளர்களை சந்திப்பது பணம் கொடுப்பதற்கு, பணத்தைக் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கும் வேலை. அதைத்தான் கீழ்மட்ட அரசியல் கட்சி புரோக்கர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அப்படி ஒரு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. பணம் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும், வாக்காளர்களை ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம். அங்கே ஜனநாயகம் இல்லை.  மக்களாட்சியும் இல்லை .பணத்தின் ஆட்சிக்கு மக்கள் வாக்களித்தால், அது மக்களாட்சி அல்ல ,பணத்தின் ஆட்சி .அந்த ஆட்சிக்காக எத்தனை புரோக்கர்கள்? அண்டர்கிரவுண்ட் அரசியல் செய்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதை வைத்து பிரச்சாரம் செய்யப் போகிறார்கள்?  இந்த பிரச்சாரம் செய்பவர்களுக்கு எத்தனை கோடிகள் கைமாறப்போகிறது ? இது யாருக்கு தெரியும் ? இந்த உண்மைகள் வாக்காளர்களுக்கு தெரியாது. வாக்காளர்களுக்கு தெரிந்ததெல்லாம் 500 , ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம், ஐயாயிரம், பத்தாயிரம் அதிகபட்சம். ஆனால், வாக்காளர்களை விலை பேசும் இடைத்தரகர்கள் பல லட்சங்களை பல கோடிகளை வாங்குகிறார்கள் .

இதில் பிரசாந்த் கிஷோர் போன்ற அரசியல் ஆலோசனை புரோக்கர்களும் அடங்குவார்கள். இப்படிப்பட்ட ஒரு அண்டர் கிரவுண்ட் அரசியல், தேர்தலில் எவ்வளவு பொய் பிரச்சாரங்களை செய்யும் என்பது வாக்காளர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரியுமா? அதனால்தான், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு அவசியம் தேவை என்று மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. மேலும், இவையெல்லாம் எதை நோக்கி அரசியல் செய்கிறது ?

மக்களின் விலைமதிப்பற்ற வாக்குகளை வைத்து தான், இந்த அண்டர் கிரவுண்ட் அரசியல் நடக்கிறது. இதற்கு எவ்வளவு மக்கள் ஏமாறப்போகிறார்கள்?  எவ்வளவு மக்கள் விழித்துக் கொள்ளப் போகிறார்கள் ? என்பதுதான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல்.மேலும்,

 தமிழ்நாட்டில் மக்களின் வீக்னஸ் வறுமை, பொருளாதாரப் பிரச்சினை, சமூக பிரச்சனை, சட்ட போராட்டம், இது எல்லாம் கூட ஆங்காங்கே இருக்கக்கூடிய அரசியல் கட்சியினர்,யார் யாருக்கு? என்னென்ன பிரச்சனை இருக்கிறது? அதில் எப்போது? எப்படி உள்ளே நுழைந்து அவர்களை பிரைன்வாஷ் செய்து, நான் இதை செய்கிறேன் .அதை செய்கிறேன் .இப்படி பல பொய்களை பேசுகின்ற கூட்டமாக இன்றைய அரசியல் புரோக்கர்கள் இருந்து வருகிறார்கள் .மேலும்,

அதைவிட மோசம் பெண்கள் ,இவர்கள் எந்த அரசியல் கட்சி பணம் கொடுக்கிறார்களோ, அந்த அரசியல் கட்சிக்கு என்னிடம் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் .அவர்களை உங்களுக்கு வாக்களிக்க வைக்கிறோம் என்று ரகசிய அக்ரீமெண்ட் போட்டுக் கொள்வார்கள். நான் கேள்விப்பட்டதில் திமுக அமைச்சர்கள் ,எம் எல் ஏக்கள், எம்பிக்கள் இவர்களெல்லாம் பணத்தால் அடித்து இந்த கூட்டங்களை விலை பேசி வைத்திருக்கிறார்கள்.

 இவர்கள் ஒரு பக்கம் என்றால், அதே போல் அதிமுகவில் இப்படிப்பட்ட இந்த குரூப்புகள் பணத்துக்காக வேலை செய்கிறது. பணத்துக்காக வாக்களிக்க தயாராகி வருகிறது .இதில் தான் வாக்காளர்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வீடு தேடி கார்கள் வரும். பணம் வரும். இல்லையென்றால், இவர்கள் அவர்களைத் தேடி செல்வார்கள் .இப்படிப்பட்ட புரோக்கர் வேலைகள் தமிழ்நாட்டில் ரகசியமாக நடக்கும் அண்டர் கிரவுண்ட் அரசியல் .கேட்டால் சுய உதவி குழுக்கள், சமூக அமைப்புகள் என்று ஏதோ ஒரு பெயரை சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் மீறி இன்று அரசியல் செய்து வருவது என்பது கடினமான வேலை.

 மக்களுக்காக ,மக்களின் தேவைக்காக, மக்களின் பிரச்சினைகளுக்காக, எந்த அரசியல் கட்சியும் இல்லை. ஆனால், வாக்கு வங்கியை எப்படி விலை பேசலாம்?  என்பதில் தான் அதிமுக ,திமுக போட்டி போட்டுக் கொண்டு, தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறது. இதற்கு பல ஊடகங்கள் ஒத்து ஊதும் வேலையை பார்க்கிறது. மக்களின் வரிப்பணத்தில் ஒத்து ஊதும் வேலையை பார்த்துக் கொண்டு, மக்கள் நலனுக்காக, எத்தனை பத்திரிகைகள்? எத்தனை தொலைக்காட்சிகள்? இருப்பதை விரல்விட்டு எண்ண முடியும்.

மேலும், சோசியல் மீடியாக்களில் எவ்வளவு பொய்கள் வருமோ, மீடியாக்களில் எவ்வளவு பொய்கள் வருமோ, பத்திரிகைகளில் எவ்வளவு பொய்கள் வருமோ, அரசியல் கட்சி தலைவர்கள் எவ்வளவு பொய்களை பேசுவார்களோ ,இதில் எது உண்மை? எது பொய் ?என்பது அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும். ஆனால் தெரியாதவர்கள் குழம்பித்தான் ஆக வேண்டும். இப்போதே  பிஜேபிக்கும் திமுகவுக்கும் தான் அரசியல் டாப் பைட் என்பதை புரிந்து கொண்டு, திமுக அரசியல் கட்சியினர் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையைத் தவிர, எத்தனை பொய்கள் இருக்குமோ, அத்தனை பொய்களையும், உண்மையாக பேசத் தெரியும்

.

அவர்களை விட உத்தமன், அரிச்சந்திரன் நாட்டில் இல்லை என்று நடிக்கவும் தெரியும். அதனால், இந்த பொய் பிரச்சாரங்களை எதிர்த்து, பிஜேபி எப்படி அரசியல் செய்யப் போகிறது? ஒரு பக்கம், திமுக அரசியல் கூட்டணி கட்சிகளின் பொய் பிரச்சாரம்,  மற்றொரு பக்கம் பணம், இது தவிர ஊடகங்கள், சோசியல் மீடியாக்கள், இத்தனையும் தமிழ்நாட்டில் மக்களிடம் எவ்வளவு உண்மைகளை சொல்லப்போகிறது? எவ்வளவு பொய்களை சொல்ல போகிறது ?என்பதுதான் கேவலமான அரசியல்.

இது தவிர, அரசியல் ரவுடிகள், அவர்களுடைய மிரட்டல்கள், காவல்துறையின் பொய் வழக்குகள், எத்தனை பிரச்சனைகளுக்குள் தமிழ்நாட்டின் அரசியல் இருக்கிறது? என்பதை வாக்காளர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்? மேலும், இன்றைய அரசியல் அதிமுக, திமுக பேசுவதற்கும், செயல்படுவதற்கும் சம்பந்தமே இல்லை .பேசுவது எவ்வளவு வேண்டுமானாலும், பேசிவிட்டு போகலாம். ஆனால், அதில் ஒன்று கூட முழுமையாக செயல்படுத்த முடியுமா? என்பது தான் எங்களைப் போன்ற சமூக நல பத்திரிகையாளர்கள் கேள்வி? தவிர, இதில் அதிமுக தலைமையில் கூட்டணி கட்சிகள்,திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள், பிஜேபி தலைமையில் கூட்டணி கட்சிகள் அமைத்து போட்டியிட்டாலும் ,வரும் நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கின்ற யுத்தமாக தான் அது இருக்கும்  என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *