நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் தங்களுக்கான மக்களின் ஆதரவு எந்தெந்த மாநிலத்தில்  சர்வே நிலை என்ன ? – தமிழ்நாட்டில் பிஜேபி சர்வே ?

அரசியல் இந்தியா உணவு செய்தி சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு பிரபலமான செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கின்ற காரணத்தால், ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கான செல்வாக்கு மக்களிடத்தில் எப்படி உள்ளது? என்பதை தனியார் சர்வே அமைப்புகள் மூலம் சரிபார்த்துக் கொள்ளும். மற்றொரு பக்கம் உளவுத்துறை மூலம் சர்வை எடுத்து அதை சரி பார்த்துக் கொள்ளும்.

 இது ஆளும் கட்சியாக இருக்கின்ற அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் அதிமுக, திமுக மத்தியில் பிஜேபி இப்படி தான் இந்த சர்வேயில் மக்கள் செல்வாக்கு எப்படி உள்ளது? ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டில் எத்தனை சீட்டுகள் நமக்கு கிடைக்கும்? எந்தெந்த தொகுதி வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளது ?வெற்றி வாய்ப்புகள் குறைவாக உள்ள தொகுதிகள் எது? அதையெல்லாம் சரி செய்ய முடியுமா? இதையெல்லாம் ஆளும் அரசியல் கட்சிகள் தங்களுடைய பலத்தை சரிபார்த்துக் கொள்ள சர்வே என்ன சொல்கிறது? மக்களின் கருத்து என்ன? அவர்களின் மனநிலை என்ன? இதையெல்லாம் தெரிந்து கொள்ள அரசியல் கட்சிகள் இந்த சர்வே எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

 அப்படிதான் பிஜேபி ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எத்தனை சீட்டுகள் கிடைக்கும்? தனியாக நின்றால் எத்தனை சீட்டுகள் கிடைக்கும்? இது எல்லாம் ஒரு சர்வே எடுத்து இருக்கிறது? அதில் தனியாக நின்றால் ஒரு சீட்டு கூட ஜெயிக்க முடியாது. என்று சர்வேயில் சொல்லப்பட்டுள்ளதாம்.ஆனால், வாக்கு சதவீதத்தில் மட்டும் வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாக சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளது. மேலும் தற்போதுள்ள நிலைமையில், தனியாக நின்றால் எந்த அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை என்பது கேள்விக்குறி தான்.

 தமிழ்நாட்டில் அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு தான் பிஜேபி வளர்ந்துள்ளது அது மறுக்க முடியாத உண்மை. இந்த கட்சியில் நிர்வாகிகள் அரசியல் செய்ய தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு திமுக, அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்ய தகுதி இல்லை.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு, மக்களின் எதிர்பார்ப்புகளை விட, இவர்களுடைய எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால், மக்களின் பிரச்சினை என்ன? அது தெரியாமல் பேனரில் தங்கள் போட்டோக்களை போட்டு காட்டிக்கொண்டு, விசிட்டிங் கார்டில் தங்கள் பொறுப்புகளை போட்டு காட்டிக்கொண்டு, ஒயிட் அண்ட் ஒயிட் வேஸ்ட்டையும், சர்ட்டும் காட்டிக்கொண்டு, கட்சிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அண்ணாமலை ஒருவரே தமிழ்நாட்டில் எல்லாவற்றையும் சரி செய்து விட முடியாது. பெரிய விஷயங்கள் அவரிடம் கொண்டு செல்லலாம். சிறிய விஷயங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும், உள்ள எத்தனையோ திமுக ,அதிமுக கட்சியினரின் அராஜகங்கள் ,பாமக அராஜகங்கள், விடுதலை சிறுத்தை கட்சிகளின் அராஜகங்கள், அதிகப்படியாக உள்ளது. இதையெல்லாம் எதிர்த்து அரசியல் செய்ய இவர்களுக்கு அந்த தகுதி, திறமை வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சியை பிடிக்க முடியும் .

அண்ணாமலை திமுகவினரின் ஊழல் விவகாரங்களை எதிர்த்து போராடவே நேரம் சரியாக இருக்கும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு பிரச்சனைகளையும், அண்ணாமலை ஒருவரை எதிர்பார்த்து கட்சியினர் உட்காந்து கொண்டிருந்தால் அது வேலைக்காகாது. மேலும், மக்களிடம் இன்னும் பிஜேபி கட்சியினர் அதிகம் நெருங்கி வரவில்லை. நானே எங்களுடைய கிராமத்தில் சில பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் பேச வேண்டும். அதுவும் அண்ணாமலையை பார்த்து பேச வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள். அதற்காக மாநிலத்தில் உள்ள தற்போதைய கார்த்திக் கோபிநாத் இடம் சொல்லிப் பார்த்தேன்.

 அதன் பிறகு சென்னையில் மாவட்ட செயலாளர் இடம் சொல்லி இருக்கிறேன். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவரிடம் சொல்லி இருக்கிறேன். அவர் மட்டும் அண்ணாமலைக்கு மெயில் போட்டதாக தெரிவித்தார். ஒரு சிலர் 27 நடை பயணம் முடிந்தால் தான் அவரை பார்க்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இது தவிர, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் இடம் சொன்னால் ஏன்செய்ய மாட்டார்களா? என்று என்னிடம் கேட்டார்கள்.

நான் சொன்னேன் அவர்கள் எல்லாம் பேனரில் தங்கள் போட்டோவை காண்பித்துக் கொண்டு, மீடியாவில் மைக்கை பிடித்துக் கொண்டு  பேசுவதற்கு தான் தெரியும். இங்கே களத்தில் நின்று அவர்களால் போராட முடியுமா? என்பது தெரியவில்லை. அதனால், எனக்கு மாநில தலைவரைப் பார்த்து பேசினால் தான் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்பது சொல்லிவிட்டேன். இது திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்ல, ஓட்டு மொத்த தமிழ்நாட்டிலும் இதே நிலைமைதான்.அதில் ஒரு சில மாவட்டங்கள் விதிவிலக்காக இருக்கலாம். இதை எல்லாம் பிஜேபி சரி செய்ய வேண்டும்.

 ஏனென்றால் 50 ஆண்டுகால திமுக ,அதிமுக நிர்வாகிகள் பொது சொத்துக்களை கொள்ளை அடித்து, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து, கொழுத்து போய் இருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து அரசியல் செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதேபோல் அன்புமணி ராமதாஸ் ஊழலை ஒழிப்பேன் என்று மைக்கில் பேசிக் கொண்டிருக்கிறார். இவருடைய கட்சி நிர்வாகிகள் நிலைமை என்ன? என்று விடையூர் கிராமத்தில் வந்து பார்த்து பேசட்டும் மக்களே பதில் சொல்வார்கள். ஏனென்றால், இங்கே இந்த கிராமத்தில் ஓட்டு மொத்தமும் வன்னியர் சமுதாயம் தான் அதிகமாக இருக்கிறது. வன்னியர் சமுதாயத்தை மதிக்க தெரியாத இவர்கள் ,எப்படி வன்னியர்  சமுதாயத்திற்கு நல்லது செய்வார்கள் ?

 இன்று ஒரு கிராமமே ஏரி மரத்தில் ஏலம் விட்ட வேலைக்காத்தான் மரங்கள் கோடிக்கணக்கில் ,இந்த பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ஏழுமலை அவர்கள் குடும்பங்கள் பங்கு போட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குத் துணையாக திமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர் ஏரிகளில் மண் எடுக்க வந்து நின்று கொண்டிருக்கிறார். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ,விவசாயம் பாதிக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.புகாரும் மாவட்ட ஆட்சியர் பிரபசங்கரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.இப் பிரச்சனை அரசியல் அதிகாரம் உள்ளதால் ,எந்த அளவுக்கு இவர்கள் மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்க வந்திருக்கிறார்கள் என்று பொதுமக்கள் பேசி வருகிறார்கள்.

ஆனால், இவர்களை நன்றாக கொள்ளையடிக்க சொல்லி ,இவர்களுக்கு ஆதரவாக கார்ப்பரேட் கம்பெனி பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் நல்லவர்களாக காட்டிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பத்திரிகை, தொலைக்காட்சிகள் தான் மக்களுக்கு தேவையா ?மக்களின் பிரச்சினைகள் என்ன? அவர்களுடைய கருத்து என்ன? அவர்களுடைய ஆதங்கம் என்ன? அவர்களுடைய வேதனைகள் என்ன? இது எல்லாவற்றையும் சமூக நலன் பத்திரிகைகள் தான் மக்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது. என்பதை இப்போதாவுது பத்திரிகை உலகமும், பொதுமக்களும் புரிந்து கொண்டால் சரி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *