
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி மிகவும் முக்கியமான கருவி. இது அறிஞர்களின் படைப்பாற்றல், கல்வியாளர்களின் படைப்பாற்றல் மூலம் தான் கல்வியின் தரம், பயன்பாடு எவ்வாறு மனித வாழ்க்கையில், எதிர்காலத்திற்கு உதவும்? என்பதை கட்டமைப்பது தான் கல்விக் கொள்கை. அப்படிப்பட்ட ஒரு கல்விக் கொள்கையை மாநில அரசும், மத்திய அரசும் அதை வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தால், மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆவது ?
.jpg)
இதில் அரசியல் செய்வதால், செய்பவர்களுக்கு அந்த மாணவர்களிடமிருந்தும், பொது மக்களிடம் இருந்தும் என்ன பலன் எதிர்பார்க்கிறார்கள்? இதுதான் ஒரு முக்கிய கேள்வி ?மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்து எல்லா மாநிலங்களிலும் செயல்படுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு அதை எதிர்த்து அரசியல் செய்கிறது.
இந்த நீட் தேர்வினால் மாணவர்களுக்கு பாதிப்பு என்று தமிழக அரசு தெரிவிக்கிறது. ஆனால், மத்திய அரசு சாதாரண ஏழை மற்றும் நடுநிலை குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பை படிக்க வாய்ப்பு உள்ளது என்கிறது.
இது ஒரு புறம் அடுத்தது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மாணவர்களை வெளிநாட்டு மாணவர்களுடன் அல்லது வெளி உலக கல்வியாளர்களுடன் போட்டி போடும் நிலைக்கு கொண்டு செல்கிறது என்று மத்திய அரசின் கல்வி கொள்கை விளக்குகிறார்கள். ஆனால், மாநில அரசின் கல்விக் கொள்கை மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துமா? மேலும், கால சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு கல்வியில் மாற்றம் அவசியமானது,முக்கியத்துவமானது. அதை உணர்ந்து ஆட்சியாளர்கள், கல்வியாளர்கள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

பழைய கல்விக் கொள்கை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவை ஒத்து போகும். ஆனால், எல்லா காலங்களிலும் அதே கல்வி மாணவர்களின் தரத்தையும், எதிர்கால வாழ்வியல் முறையோடு அது ஒத்து போகாது. காரணம், மனித மனம் மாற்றங்களை கொண்டது. அந்த மாற்றத்திற்கு தகுந்தவாறு கண்டுபிடிப்புகள் தேவை. அதற்கு கல்வி மிகவும் அவசியமானது .கல்வியை அரசியல் ஆக்கிக் கொண்டிருந்தால், நாட்டின் வளர்ச்சி ,மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை .
மேலும், இப்படிப்பட்ட அரசியலால் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை பாழாக்கி கொண்டிருக்கிறது என்கிறார் கல்லூரியின் விரிவுரையாளர் (professor) . அதாவது அவர் என்னிடம் தெரிவித்தது மாணவர்கள் இன்று பெரும்பாலும் ஆசிரியர்களை மதிப்பது குறைந்துவிட்டது. அவர்களுக்காக நாங்கள் எவ்வளவோ பாடப்புத்தகங்களில் இருந்தும், நூலகங்களில் இருந்தும் நோட்ஸ் எடுத்து அதை அவர்களுக்கு கொடுக்கும் ஆவலில் செயல்பட்டால், அவர்கள் அதை வாங்கிக் கொள்ள கூட தயாராக இல்லாமல், அலட்சியம் செய்கிறார்கள்.
.jpg)
அதாவது, மாணவர்களுக்காக நாங்கள் சாப்பாடு கஷ்டப்பட்டு தயாரித்து கொடுக்க, ஒவ்வொரு நாளும் வருகின்றோம். ஆனால், அவர்கள் உண்ணாமல் வேஸ்ட் (waste) செய்கிறார்கள். இதனால் மாணவர்களின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மாணவர்களின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்பட்டால், நாட்டின் எதிர்கால வளர்ச்சி பாதிக்கப்படுவது மட்டுமல்ல, அந்த மாணவன் தன் சுய முயற்சியால் வேலைக்கு செல்லவும் அல்லது தனியாக ஒரு தொழில் தொடங்கி நடத்தவும், தகுதியற்றவனாகி விடுகிறான். குறிப்பாக சொல்லப்போனால், அவன் பொருளீட்ட தகுதியற்றவனாகி விடுகிறான்.
.jpg)
அதனால், அவன் ஏதோ அரசியல் கட்சிகளில் சேர்ந்தாலும், பதவிக்கு வந்தாலும் ,சமூகத்திற்கு அதில் கூட நன்மை செய்ய தகுதியற்றவனாகி விடுகிறான். அங்கேயும் எப்படி தவறான முறையில் பொருளீட்டுவது? மேலும், அரசியலில் தன்னை அல்லது தன் உழைப்பை தியாகம் செய்ய தகுதியற்றவர்கள், எப்படி அரசியலுக்கு வருகிறார்கள்? அதற்கும் தகுதியானவர்கள் தேவை. தகுதியற்றவர்களால் தான் இன்று அரசியலில் ஊழலும், ரவுடிசமும் தலைவிரித்து ஆடுகிறது.
.jpg)
அதனால், கல்வி என்பது சமூகத்திற்கும், தனி ஒருவனுக்கும், நாட்டிற்கும் முக்கியத்துவமானது. அதனால், இனியாவது தமிழ்நாட்டில் எந்த அரசாங்கமும் அல்லது அரசியல் கட்சிகளும், கல்வியை வைத்து அரசியல் செய்வது மாணவர்களின் நலனுக்கும், சமூக நலனுக்கும், நாட்டின் எதிர்கால நலனுக்கும் எதிரானது என்பதை புரிந்து கொண்டால் சரி.