மக்களிடம் ஆன்மீகத்தையும் அரசியலில் கொண்டு போகிறார்கள் போலீசாமியார்கள் .அதேபோல் ஜோதிடத்தையும் வியாபாரம் ஆக்குகிறார்கள் போலி ஜோதிடர்கள். இது தவிரஇ மாந்திரீகம் பரிகாரம் என்று மக்களை பயமுறுத்தி பணத்தை பறிப்பதும் அவர்களிடத்தில் பல பொய்களை சொல்லி இது நடந்து விடும். இப்படி செய்தால் அது நடந்து விடும். என்றெல்லாம் ஜோதிடத்தில் ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் பலர் யாரோ ஒரு ஜோதிடர் இந்தக் கோயிலுக்கு சென்று மனதார வழிபாடு செய்யுங்கள் தவறு இல்லை. ஆனால் இந்த தகடு வையுங்கள். இந்த ஓமம், பரிகார பூஜைகள் லட்சக்கணக்கில் வாங்குகிறவர்களும் உண்டு. அதில் ஏமாறும் மக்களும் உண்டு .
விதி என்பது கர்மாவால் தீர்மானிக்கப்பட்டது. அதுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் நல்லது, கெட்டது எல்லாவற்றிற்கும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் தீர்மானிக்கிறது. அதை நாம் இந்த பரிகார பூஜையால் அதை நிவர்த்தி செய்ய முடியுமா ? இல்லை. இல்லாத ஒன்றை அதாவது
விதியில் இல்லாத ஒன்றை ஒருவருக்கு அமையும் வாய்ப்பு உள்ளதா? நிச்சயம் கிடையாது .அவரவர்க்கு என்ன தீர்மானிக்கப்பட்டிருக்கிறதோ அது நிச்சயம் கிடைக்கும். அதில் தடங்கல்கள், தடைகள் இருந்தால்; ;அதற்கு இறை வழிபாடு நிச்சயம் தேவை. அதுவும் இறை பிரார்த்தனை தான் முக்கியமானது.
அது கோவிலுக்கும் செல்லலாம். அல்லது மனதார வீட்டிலும் வணங்கலாம். அது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. இங்கே பல சாமியார்கள் பல கோடிகளில் உல்லாசமாக இருக்கிறார்கள்.; சாமியாருக்கு தேவை கோடிகள் எதற்கு? அப்படியே இருந்தாலும் அந்த கோயிலுக்கோ பூஜை செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை தினமும் தேவை இருக்கலாம். ஆனால் பல கோடிகளில் சம்பாதித்து அதற்கு ஒரு அறக்கட்டளை அமைத்து அங்கே மக்களை தங்க வைத்து சொற்பொழிவு ஆன்மீக சிந்தனைகள் இதையெல்லாம் இலவசமாக கொடுக்கிறார்களா? அதுவும் இல்லை .பணம் குடுத்து வாங்குகிறார்களா? இப்படி தெய்வம் என்பது பணத்திற்கு.
பேராசைக்கு பொருளுக்கு ஒரு காலம் ஏற்றுக் கொள்ளாது. பணம் கொடுத்து இறைவனின் அன்பையும், கருணையும் வாங்க முடியாது .ஒரு காலத்தில் சாதாரண மக்கள் மீது குறி சொன்னது எல்லாம் நடந்தது.. அந்த அளவுக்கு குறி சொல்பவர் அந்த தெய்வத்தை மட்டுமே நினைத்து எளிமையாக வாழ்ந்து எந்த எதிர்பார்ப்பும் மக்களிடம் இல்லாமல் இருந்தார்கள.; அவர்கள் மீது தெய்வ அனுக்கிரகம் இருந்தது. இது கலிகாலம் என்பதால் இப்போது எல்லாமே பணம் என்ற பேராசைக்கும். பொருள் என்ற பேராசைக்கும் தெய்வம் விலகி விட்டது. மக்கள் எப்போது தெய்வத்திடம் அன்பு காட்டவில்லையோ அப்போதே மக்கள் சந்தோஷத்தையும் நிம்மதியும் நிறைவையும் இழந்து விட்டார்கள் .தர்ம சிந்தனை நியாயமான வழியில் பொருளீட்டுதல் உண்மையை பேசுதல் .தர்ம வழியில் நடத்தல் கடவுளுக்கு பயந்து நடத்தல் சட்டத்தை மதித்து வாழ்தல் தன் உறவுகளுடன் அன்பும் பாசத்துடன் மகிழ்ச்சியுடன் இருத்தல் இதையெல்லாம் மறந்துவிட்டு போலி வாழ்க்கையில் கார், பங்களா ,பல கோடிகள் இப்படி வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள், யாராவது நிம்மதியும், சந்தோஷத்தையும் அடைந்திருக்கிறார்களா? என்பதை ஒருவரை காட்டுங்கள் . நிச்சயம் இருக்க மாட்டார்கள்.
இவர்களுக்கெல்லாம் அடுத்த பிறவி என்ன என்பது அவர்களுக்கு தெரியாது. இருக்கும் வரை சட்டத்தை ஏமாற்றி சமுதாயத்தை ஏமாற்றி சுருட்டி கொள்வது திறமை என்று நினைக்கலாம் .அவ்வளவும் பாவத்தின் கணக்கு உங்களுடைய பிறவிக் கணக்கில் இறைவன் எழுதி விடுவார், அங்கே பணம் கொடுத்து நீதிமன்றத்தில் வாய்தா வாங்குவது போல. அல்லது சட்டத்தை ஏமாற்றி தீர்ப்பு எழுதிக் கொள்வது போல இறைவனின் சட்டம் இடம் கொடுக்காது. அந்த சட்டத்தில் இந்த ஜாதிக்கு ஒரு சட்டம.; அந்த ஜாதிக்கு ஒரு சட்டம் இந்த மதத்திற்கு ஒரு சட்டம் அந்த மதத்திற்கு ஒரு சட்டம் எதுவுமே கிடையாது.
நீ என்ன செய்து இருக்கிறாயோ அதற்குத் தகுந்தவாறு உன்னுடைய பிறவி கணக்கு எந்த மதத்திலோ எந்த நாட்டிலோ எந்த மொழியிலோ உன் பிறவி தொடரும். அங்கே நீ எப்படி பிறப்பாய் பணக்காரனா? ஏழையா? அல்லது கூலியா ?எல்லாம் நீ செய்த கர்மா அடுத்த பிறவியை தீர்மானிக்கிறது. இதை புரிந்து கொள்வது கடினம். இருப்பினும் இது புரிந்தவர்களுக்கு புரியும். புரியாதவர்களுக்கு புரியாது. எல்லாம் வல்ல ஈசன் கருணை அன்பு எல்லா உயிர்க்கும் கிடைக்க அருள்வாய் பரம்பொருளே .