அதிக வட்டி கொடுப்பதாக மோசடிகள், வங்கி கணக்குகளில் நூதன மோசடிகள், மலிவான, கவர்ச்சியான விளம்பரங்களால் மோசடிகள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை தேவை .
நாட்டில் நல்லது நடக்காவிட்டாலும் பரவாயில்லை. கேட்டது தேடி வந்து நடக்க இன்றைய கால சூழ்நிலை மக்களை ஏமாற்றுகிறது. அது அவரவர் வைத்துள்ள செல்போன்கள் தற்போதைய காலகட்டத்தில் எதிரி என்று சொல்லலாம். மேலும் ,ஒரு நாட்டின் அரசியல் சரியில்லை என்றால், அந்த நாட்டில் நிர்வாகம் ,கட்ட பஞ்சாயத்து, மோசடிகள், கொலை, குற்றம் இவை எல்லாம் சர்வ சாதாரணம் ஆக நிகழும்.மேலும்,
தற்போதைய ஆன்லைன் மோசடிகள் ,குற்றங்கள் அதிகரிப்பதற்கு மக்களே பாதிபேர் அதற்கு உட ந்தையாக இருக்கிறார்கள்.மோசடி செய்பவர்களின் பேச்சைப் பார்த்தால் அரிச்சந்திரனையும் மிஞ்சி விடுவார்கள். அவர்களுடைய உடை ,தோரணைகள்,பேச்சு, நடிப்பு எல்லாம் இவர்களா? ஏமாற்றப் போகிறார்கள், என்று பாமர மக்களுக்கு நினைக்கத் தோன்றும். அதனால் ,ஆசை வார்த்தைகளை தூண்டி, ஆளை கவிழ்ப்பது தான் இன்றைய நூதன மோசடிகள்.
மேலும், கடந்த 9 மாதங்களில் புதுச்சேரியில் மட்டும் 22 கோடி ரூபாய் ஆன்லைன் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக சைபர் கிரைம் அதிகாரி தெரிவித்துள்ளார். அதாவது, இணைய வழி முதலீடுகள், அதே பொருளை தரமாக 20% குறைவாக தருகிறோம் ,போன்ற மலிவான, கவர்ச்சியான விளம்பரங்களால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. எல்லோரும் ஏமாறுகிறார்கள். ஒரு பக்கம் அரசியல்வாதிகளால், மற்றொரு பக்கம் மோசடி பேர்வழிகளால், இனியாவது மக்கள் விழித்துக் கொண்டால் சரி .