நாட்டில் உண்மையை வெளிப்படுத்துவதற்கு பத்திரிக்கைகள் தேவை! ஆனால், பொய்யும், போலி செய்திகளையும், வெளியிடுவதற்கு பத்திரிகை – தொலைக்காட்சிகள் தேவையா ? – சமூகநலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள்.

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சமூக நலனுக்காக பத்திரிகை நடத்துபவர்கள் தமிழ்நாட்டில் ஐந்திலிருந்து 10% இருக்கலாம். இது மக்களுக்காக, மக்களின் நலனுக்காக, இந்த பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும், சில அரசியல் கட்சிகளிடமும், அதிகாரிகளிடமும் எதிர்ப்புகளை சம்பாதித்து பத்திரிக்கை நடத்த வேண்டியிருக்கிறது.

 இந்த நிலையில் அரசியல் கட்சிகள் பல பொய்களை மக்களிடம் சொல்லி அரசியல் செய்வதும், அதையும் உண்மை என்று மக்களிடம் செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதும், பத்திரிக்கை துறைக்கு வந்த சோதனையாக தான் உள்ளது. மேலும், பத்திரிகை என்றால் என்ன? என்று தெரியாத மக்களிடம் அல்லது நாட்டின் அரசியல் உண்மை நிலவரம் எதுவும் தெரியாதவர்களிடம், ஆட்டோ ஓட்டுபவர்கள், கூலி வேலை செய்பவர்கள், இவர்களுக்கு எல்லாம் அரசியல் தெரியுமா ?தெரிந்தவர்கள் ஒரு சதவீதம் கூட இருக்க மாட்டார்கள்.

 அப்படிப்பட்டவர்களிடம் மைக்கை நீட்டி தமிழக அரசு, கவர்னருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்பதைவிட, அந்த ஊடகங்கள், அவர்களை கொண்டு போய் உச்ச நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களையே தீர்ப்பு எழுத சொல்லுங்கள், நன்றாக இருக்கும் .முன்னாள் சிபிஐ அதிகாரி, தற்போதைய தமிழக ஆளுநருக்கு தெரியாத விஷயங்கள், இந்த மக்களுக்கு தெரிந்திருக்கிறது. அப்படித்தான் இந்த ஊடகங்கள் சொல்கிறது. ஒன்று, உண்மையை மக்களிடம் சொல்வதற்கு தகுதியையோ, தைரியமோ இருந்தால் சொல்லுங்கள்.

 இல்லையென்றால், மக்களிடம் பொய்யை சொல்லி ஏமாற்றி, இந்த ஊடகத்துறையை கேவலப்படுத்த வேண்டாம் .அதேபோல், தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவாவேலு சில ஊடகங்கள் கற்பனையாக செய்திகளை வெளியிட்டுள்ளது. ஒரு அமைச்சர் ஏவ விட்டவர்கள் எங்கோ இருக்கிறார்கள். ஆனால், ஊடகங்கள் சில கற்பனையாக செய்திகளை வெளியிட்டு வருகிறது. சரி அப்படியே இவர் சொல்வது போல் அந்த ஊடகங்கள் கற்பனையான செய்திகளாக இருந்தால், அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை கொடுக்கின்ற விவரங்கள் கற்பனையானதா? அல்லது உங்கள் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு கற்பனையானதா? அல்லது உங்களுடைய பூர்வீக சொத்து விவரம் கற்பனையானதா?

 இது தவிர, இன்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ள மிகப்பெரிய அரசியல் மோதல் உருவாகியுள்ளது. இதை உருவாக்கி அரசியல் நடத்தும் திமுக அரசால், பொதுமக்கள் நலனை பற்றி கவலை கொள்ளாமல், இவர்கள் சொந்த நலனை பற்றி கவலைப்படுகிறார்கள். அதாவது, இவர்களுடைய சொத்துக் குவிப்பு பல லட்சம் கோடிகளில் இருக்கும் போது, ஐடி ரெய்டு, அமலக்கத்துறை வராமல் யார் வருவார்கள் ? இவர்கள் எல்லாம் மத்திய அரசின் ஏஜென்ட்களா என்கிறார்கள்? அதைத்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர், அவர்கள் ஏஜென்ட் என்றால் தமிழ் நாட்டில் உள்ள காவல்துறை உங்களுடைய ஏஜெண்டா?என்கிறார். எனவே, நாட்டில் இப்படிப்பட்ட நிகழ்வுகள்! அரசியல் பொதுநலத்திலிருந்து, சுயநலத்திற்கு மாறிவிட்டது என்பது இதைவிட முக்கிய சான்று வேறு என்ன இருக்க முடியும்?

மேலும், செய்தித்துறை ஒன்று அரசுக்காக அல்லது ஆட்சியாளர்களுக்காக இயங்குகிறதா? இல்லை மக்களுக்காக? மக்கள் நலனுக்காக ?இயங்குகிறதா? தவிர, அதில் பணியாற்றக்கூடிய செய்தி துறை பி. ஆர். ஓ களுக்கு மத்திய மாநில அரசுகள் பத்திரிகை துறையைப் பற்றி பயிற்சி கொடுக்க வேண்டும். இவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தொலைக்காட்சி, தினசரி பத்திரிகை தான் பத்திரிக்கை மற்ற பத்திரிகைகள் எல்லாம் பத்திரிகை இல்லை என்று சான்றளிக்கிறார்களா? ஏனென்றால்,

அவர்களுக்கு மட்டும் தீபாவளிக்காக வசூல் செய்யும் ஸ்வீட்டும், பட்டாசும் அன்பளிப்பு தருகிறார்கள். அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், இந்த தீபாவளிக்காக வசூல் செய்யும் ஸ்வீட்டும், பட்டாசும் அன்பளிப்பாக தருகிறார்கள். அதனுடைய மதிப்பு பார்த்தால் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு அன்பளிப்பு கொடுப்பது, குறிப்பிட்ட பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மட்டும்தான் சமூக கடமையாற்றுகிறதா? அல்லது பத்திரிக்கை கடமையாற்றுகிறதா? இது எதற்காக கொடுக்கப்படுகிறது? ஒரு பக்கம் அரசுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுகிறார்கள் என்பதற்காகவா? எதற்காக இந்த அன்பளிப்பு கொடுக்கப்படுகிறது?

மேலும், குறிப்பிட்ட பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மட்டும்தான் சமூக கடமையாற்றுகிறதா? அதற்காக பட்டாசு ,இனிப்பும் வசூல் செய்து அவர்களை அரசாங்கம் பெருமைப்படுத்துகிறதா? மேலும் இந்த சமூக கடமை ஆற்றக்கூடிய பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் விவரம் என்ன? கட்சி சார்ந்த தொலைக்காட்சிகள் எத்தனை? பத்திரிகைகள் எத்தனை? சமூக கடமை ஆற்றக்கூடிய தொலைக்காட்சிகள் எத்தனை? பத்திரிகைகள் எத்தனை? இதைப்பற்றி இனிவரும் காலங்களில் மாவட்டங்களிலும், தலைமைச் செயலகத்திலும் சமூக நலன் சார்ந்த பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் ஆர்டிஐ (RTI ) யில் கேள்வி கேட்க உள்ளனர் .

மேலும் எந்தெந்த மாவட்டங்களில் உள்ள பிஆர்ஓ க்கள் இந்த வசூல் வேட்டை அன்பளிப்பு? இதற்கு மாவட்ட பிஆர்ஓ க்கள் பதில் சொல்லி ஆக வேண்டும்.

இப்படிப்பட்ட குளறுபடிகள் பத்திரிக்கை துறையில் இருப்பதால், செய்தி துறையில் உள்ள பத்திரிகை ,தொலைக்காட்சிகளை தரம் பிரிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் தான் ,மத்திய- மாநில அரசின் செய்தித்துறை ,இந்த பத்திரிகைகளை தரம் பிரிக்காததால் ,சமூகத்தில் மிகப்பெரிய கேவலம், மரியாதைஇன்மையை பத்திரிக்கை துறை சந்தித்து வருகிறது.

இது தவிர, வாட்ஸ் அப்பில் தங்களுடைய சொந்தக் கருத்துக்களை வெளியிட்டு, அவர்களும் பத்திரிக்கை செய்தியாளர்கள் குழுவில் போடுகிறார்கள் . தவிர, குடி போதைகளில் மிதப்பவர்கள் கருத்து சொல்வது, பல  பத்திரிக்கை நிருபர்கள் குடிபோதைகளில் அடிமையாகி இருப்பதால்,அவர்களுடைய செய்தியும் ,கருத்தும் சமூகத்திற்கு எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்? அவர்களும் தங்களை பெரிய ஊடகத்தின் ஏஜென்ட் என்ற கனவில்  மிதக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களால் சமூகத்திற்கு என்ன நல்ல விஷயங்கள் கொண்டு போய் சேர்க்க முடியும்? ஆட்சியாளர்களும், அரசியல் கட்சியும் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கும்போது, அதைப் பற்றி சிறு கருத்து கூட சொல்ல இவர்களுக்கு தகுதி உண்டா? அப்படி சொன்னாலும், இவர்களுடைய கார்ப்பரேட் கம்பெனிகள் அதை போடுமா? அப்படி போடும் ஒரு சில பத்திரிகை, தொலைக்காட்சிகள் அதன் ஆசிரியர் மட்டுமே கருத்துக்களை வெளியிடுவார்.

இதில் பல ஊடகங்கள் தன்னுடைய அரசியல் கட்சி கொள்கைக்கு ஏற்றவாறு கருத்துக்களையும், செய்திகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் ஆதரவாகவும் இருக்கலாம். மற்றொரு பக்கம் அது எதிராகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட நிலை தான் இன்றைய பத்திரிகைகளின் நிலைமை .இது, பத்திரிக்கை துறைக்கு மிகப்பெரிய கேவலமாக உள்ளது.

இப்படி ஆளாளுக்கு ஒரு கருத்தை போட்டுக் கொண்டிருந்தால், எது உண்மை? எது பொய்? என்பதை யார் சொல்வது ?மேலும், பத்திரிக்கை துறையில் தினசரி பத்திரிகைகளில் வருகின்ற செய்திகளால், மக்களுக்கு என்ன பயன்?

 அப்படி பயன் அடைந்து இருந்தால், இன்று நாட்டில் ஊழல், பிரிவினைவாதம், தீவிரவாதம்,தீய சக்திகள், அரசியல் கட்சிகளின் பொய் பிரச்சாரங்கள், ஊழல்வாதிகள், ரவுடிகள் அரசியலுக்கு வர முடியாது. ஆனால், அவர்களும் வெற்றி பெறுகிறார்கள். இவையெல்லாம் இந்தியாவின் வாக்காளர்கள் தேர்தலில் தெரிந்து வாக்களிக்கிறார்களா? அல்லது தெரியாமல் வாக்களிக்கிறார்களா? கோடிக்கணக்கில் சலுகைகளை, விளம்பரங்களை பெறுகின்ற பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் ஏன் மக்களுக்கு இந்த சமூக கடமையும், பத்திரிகை கடமையும் ஆற்றவில்லை? என்பதுதான் சமூக நலன் சார்ந்த பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் கேள்வி?

மேலும், ஆயிரக்கணக்கான கோடிகளை பத்திரிகைகளின் விளம்பரத்திற்கும், சலுகைகளுக்கும் செலவு செய்யும் மத்திய – மாநில அரசுகள் இது சமூக கடமையாக அல்லது பத்திரிகையின் கடமையாக நாட்டில் செயல்படுகிறார்களா என்பதை ஏன் கேட்கவில்லை? இவர்களுக்கு இவர்களுடைய விளம்பரமும் நாட்டு மக்களுக்கு எந்த உண்மையும் தெரியக்கூடாது என்பதுதான் முக்கியமா?

அதுதான் இவர்களுடைய அரசியல் திறமையா? அல்லது இதுதான் பத்திரிகைகளின் சமூக கடமையா? நாட்டு மக்களின் நலன் முக்கியமில்லையா? பத்திரிகை, தொலைக்காட்சிகள் செய்திகளை விட அல்லது சமூக பத்திரிக்கை கடமையை விட ,அவர்களுடைய பத்திரிகையின் பெயரும், தொலைக்காட்சியின் பெயரும், மட்டுமே மக்களிடம் வியாபார அங்கீகாரம் பெற்றுவிட்டதா?மேலும்

இதைப் பற்றி எல்லாம் மக்கள் சிந்திக்காமல், வாய்க்கு வந்தபடி பேசுபவர்களின் கருத்துக்களை செய்தியாக வெளியிடும் பத்திரிகைகளும், சமூகக் கடமையாற்றுகிறதா? எந்த அரசியல் கட்சிகளால் மக்களுக்கு லாபம்? எந்த ஆட்சியாளர்களால் லாபம்? தற்போதைய அரசியல் சூழ்நிலையில், எந்த அரசியல் கட்சிக்கு நற்சான்று வழங்க முடியும்? ஆனால், அதற்கும் நற்சான்று கொடுத்து,அந்த பக்கம் நின்று தனக்கான வருமானத்தை பார்க்கும் வேலை எல்லாம், இன்றைய பத்திரிகையின் சமூக கடமையா? இதுதான் சமூக ஊடகமா ?

இப்படிப்பட்ட ஊடகங்களை பொதுமக்கள் விமர்சித்து வருவது, அவர்களுக்கு தெரியுமோ! தெரியாதோ தெரியவில்லை. மேலும், இப்ப பிரச்சனைகளை வலியுறுத்தி , தொடர்ந்து மக்கள் அதிகாரம் இந்த பத்திரிகைகளின் தகுதி, தரம் பிரித்து ,அதற்கான அங்கீகாரத்தையும், மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வீணடிப்பதை வியாபாரம் நோக்கம் கொண்ட பத்திரிகை- தொலைக்காட்சிகளுக்கும், அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகளுக்கும், சலுகை, விளம்பரங்கள் மத்திய- மாநில அரசுகள் கொடுப்பது சமூக கடமையா? அல்லது பத்திரிக்கை கடமையா? இதை எப்படி பத்திரிகைகளின் சர்குலேஷன் தீர்மானிக்கிறது?மேலும்,

 எது? என்பதை இனிவரும் காலங்களில் மத்திய மாநில அரசின் செய்தித்துறை இதை நிச்சயம் தீர்மானிக்க வேண்டும் என்பதை சமூக நலன் சார்ந்த பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் ஒட்டுமொத்த குரல்.

இக்குரலுக்கு நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கி ஜனநாயகத்தின் நான்காவது தூணை நீதிமன்றம் பாதுகாக்குமா? – சமூகநலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *