நாட்டில் கனிமவளக் கொள்ளைக்கு முக்கிய பொறுப்பு ,அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு ,உயர் நீதிமன்றம் அபராதம் விதிக்காத வரை, கனிம வளக் கொள்ளை தொடரும் – சமூக ஆர்வலர்கள்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தமிழ்நாட்டில் கனிம வளக் கொள்ளை எவ்வாறு நடைபெறுகிறது? ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் தான், இந்த கனிமத்திற்கு உத்தரவு வழங்குகிறார்கள்.

இதற்கு கனிமவளத்துறை அதிகாரிகள் பங்கு எதுவும் இல்லை. அவர்கள் ஃபைல் ரெடி பண்ணி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவார்கள். மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்குவார். உத்தரவு வழங்கக்கூடிய மாவட்ட ஆட்சியர் ஒருநாளும் இவர்கள் 5000 லோடு ,அல்லது 6000 லோடு சவுடு மண்ணோ, அல்லது கிராவலோ எவ்வளவு இடத்தில் எடுக்க வேண்டும்? எத்தனை அடி ஆழம் எடுக்க வேண்டும்? அதற்கான பவுண்டரி பிக்ஸ் பண்ணுவது கிடையாது. மேலும்,அந்த எல்லையை வரையறுக்காமல் 5000 ,6000 லோடு என்று பணம் கட்டிவிட்டு, ஒரு ஏரியே மண் எடுத்துச் செல்ல இவர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள்? இது திருவள்ளூர் மாவட்டம்,விடையூர் கிராமத்தில் நடக்கின்ற ஒரு சட்டத்திற்கு புறம்பான சவுடு மண் குவாரி

அதுமட்டுமல்ல, அந்த ஏரிக்குள் இவர்கள் கொடுக்கின்ற இந்த 5000 லோடு அனுமதிக்கு 15 லிருந்து 20 பொக்லின் எப்படி அனுமதிக்கலாம்? எத்தனை பொக்லின் அனுமதிக்க வேண்டும்?ஒரு நாளைக்கு எத்தனை லோடு எடுக்க வேண்டும்? அதுவும், எந்த விதிமுறையும் இல்லை. மேலும்,

இவர்கள் மாவட்ட ஆட்சியர்களாக இல்லாமல், எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அவர்களின் மாவட்ட செயலாளர்களாக மாறி விடுகிறார்கள். இதனால், சமூக ஆர்வலர்களுக்கும், கிராம பொது மக்களுக்கும், மற்றும் மணல் கொள்ளையர்களுக்கும், இடையே மோதல் போக்கை உருவாக்குவது மாவட்ட ஆட்சியர்கள் தான்.

மேலும்,இவர்கள் 2.5 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு, இவர்கள் பார்க்க வேண்டிய வேலையை, சமூக ஆர்வலர்கள், சமூக நலன் பத்திரிகைகள், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்கிறார்கள்.

மேலும்,ஒவ்வொரு கிராமத்திலும், பொது சொத்துக்களை பாதுகாக்க அந்தந்த கிராம சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், போராட வேண்டி இருக்கிறது.

இதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மாவட்ட ஆட்சியர்கள் ,அரசியல் கட்சிகாரர்கள் போல, செயல்படுவதால் தான், இந்த கனிமவளக் கொள்ளை தொடர்கிறது.

மேலும்,ஒவ்வொரு ஊரிலும் ,இவர்கள் செய்கின்ற தவறுக்கு ,சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொண்டிருக்க வேண்டிய அவல நிலை ஏன்? எனவே, மாவட்ட ஆட்சியர்களுக்கு,இனி உயர் நீதிமன்றம், இவர்களுக்கு அபராதம் விதிப்பது மட்டுமல்ல,

அந்தந்த கிராமத்தில் எவ்வளவு மணல் கொள்ளை நடந்திருக்கிறதோ, அதற்கு ஏற்ற அளவு இவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதித்தால் தான், இந்த மணல் கொள்ளையை தடுக்க முடியும். தவிர, இவர்களை நீதிமன்ற கூண்டில் ஏற்றி, அந்த அபராதத்தை சொந்த பணத்தில் கட்டி விட்டு வர வேண்டும்.

அப்போதுதான் இந்த மணல் கொள்ளையை தடுக்க முடியும். அதுவரை நாட்டில் மணல் கொள்ளை நிச்சயம் தடுக்க முடியாது – சமூக ஆர்வலர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *