ஜூன் 22, 2025 • Makkal Adhikaram

நாட்டில் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அது பொதுமக்கள் மட்டுமல்ல, நாடாளுமன்ற எம்பிக்கள் வரை விமர்சனத்தை முன் வைக்கிறார்கள்.அதாவது ஒன்று நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு ஒன்று சட்டம் தெரியாமல்,கட்சிகளின் பின் புலத்திலிருந்து அந்த கட்சியின் சிபாரிசின் பேரில், நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் தீர்ப்புக்களை ஆய்வுக்கு உட்படுத்தி பாருங்கள். அது பெரும்பாலும் விமர்சனத்திற்கு அந்த தீர்ப்புகள் இருந்து வருகிறது என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகின்ற கருத்து.

மேலும், அப்படிப்பட்டவர்களை நீதித்துறை நியமனங்கள் நிறுத்தப்பட வேண்டும். நீதிபதிகளின் தேர்வு ஒன்லி ஃபார் மெரிட்.(Only for merit)தவிர அப்படி நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் நியமனங்கள் ,அவர்களுடைய தீர்ப்புகள், அத்தனையும் எடுத்துப் பாருங்கள், பொதுமக்களும் ,அரசியல்வாதிகளும், தீர்ப்பு நடுநிலையாக வராமல், ஒரு சார்பாக வரும்போது, அது விமர்சனத்திற்கு உள்ளாகிறது.
ஒரு பக்கம் ஆட்சியாளர்களுக்காக தீர்ப்பை கொடுக்கிறார்கள். அது அத்தனையும் விமர்சனத்திற்கு உள்ளாகிறது. ஒரு சில தீர்ப்புகள் நியாயமானதாக இருக்கிறது. இதுதான் சரியான தீர்ப்பு அப்படி என்று நீதிமன்றங்கள் கொடுக்க வேண்டிய தீர்ப்பு, இன்று பல நிலைகளில் நீதியின் கண்கள் கட்டப்பட்டு விட்டதா? என்ற நிலைக்கு நீதிமன்றங்கள் இருந்து வருகிறது. நீதித்துறை சரி செய்ய வேண்டும். அரசியல் தலையீடு இருப்பதால் தான் இன்று நீதித்துறை இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு முக்கிய காரணம். இதில் மதத்தையும் கொண்டு வந்து விடுகிறார்கள். ஒரு மதத்திற்கு எதிரானதாகவும் ,இன்னொரு மதத்திற்கு சாதகமான தீர்ப்புகளை கொடுக்கிறார்கள் .நியாயமான தீர்ப்புகளை கொடுக்க வேண்டிய நீதித்துறை நீதி ஒரு சார்பாக கொடுப்பது வேதனையானது .

மேலும், நீதி துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, நீதிபதிகள் வீணடிக்க கூடாது. அரசியல் கட்சிகளின் சிபாரிசு, அரசியல் தலையீடு ,இது அத்தனையும் ஒழித்தால் தான், நீதித்துறையை சரி செய்ய முடியும். நீதிபதிகள் தேர்வு தவறானது. அதாவது மெரிட்டில் (merit) தேர்வு செய்யும் வழக்கறிஞர்கள் மட்டும்தான், நீதிபதிகளாக நியமிக்க முடியும் .அந்த நிலை கொண்டு வராத வரை, இப்படிப்பட்ட விமர்சனங்கள் நீதித்துறையின் மீது தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கும். இது உச்சமாக நீதிமன்றத்திலும் வருகிறது. உயர்நீதிமன்றத்திலும் வருகிறது.

இது பற்றி சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது கடுமையான ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார். அவர் இந்த நாட்டில் மத வன்முறையை தூண்டுவதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தான் முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றமும், நீதிபதிகளும் கண்டன அறிக்கையை வெளியிட்டனர்.
மேலும், இதுபற்றி எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினரை கடுமையாக விமர்சித்தனர். இருப்பினும், பிரபல விஞ்ஞானி எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆனந்த் ரங்கநாதன் ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டு, துபேவுக்கு முழு ஆதரவை தெரிவித்தார். அந்த வீடியோவில் சரளமாக ஆங்கிலத்தில் ரங்கநாதன் உச்சநீதிமன்றத்திற்கு 9 மிக முக்கிய கேள்விகளை முன் வைத்தார்.
அந்தக் கேள்விகள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்தி சுருக்கம் இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அதாவது அவரின் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்த ஒன்பது கேள்விகள்.
1. காஷ்மீர் பிரச்சனைகளில் இரட்டை நிலைப்பாடு.
2. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விரைவாக விசாரணைக்கு எடுத்தது.
3. ஆனால் 1990களில் காஷ்மீர் இந்துக்களுக்கு எதிரான கொடுமைகள், கட்டாய இடப்பெயர்வு, வீடுகளை அபகரித்தல் ,கோவில்கள் இடிப்பு, கொலைகள், பாலியல் வன்கொடுமைக,ள் மற்றும் mass exodus தொடர்பான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டபோது, அதை மிகவும் காலத்திற்கு முன்பு நடந்தது என்று கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது இரட்டை நிலைப்பாடு இல்லையா?
4. இது இந்துக்களிடையே கோபத்தை ஏற்படுத்ததா? இது மத மோதல்களுக்கு வழி வகுக்காதா?மேலும்,
5. வகுப்ப வாரியத்தின் தவறான பயன்பாடுகள் குறித்து மௌனம்.
6. வஃபுவாரி சீர்திருத்தங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் இப்போது கவலைப்படுகிறது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் வஃபு வாரியம் சட்டவிரோதமாக சொத்துக்களை அபகரித்தது வரி ஏய்ப்பு செய்தது மற்றும் ஒரு இணையான நீதி அமைப்பை நடத்தியது. ஆனால், நீதிமன்றம் மௌனமாக இருந்தது.
7. சீர்திருத்தங்கள் இஸ்லாத்திற்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டால்,இந்து நிலங்களில் மசூதிகளையும் ,தர்காக்களையும் கட்டுவது எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது? மேலும்,
8. இரண்டு மில்லியனுக்கும் அதிகமான இந்து சொத்துக்கள் வஃபு வாரியத்தால் அபகரிக்கப்பட்டன. உச்சநீதிமன்றம் அதற்கும் மௌனமாக இருந்தது .இதுவும் மதச்சார்பின்மையா? இல்லையென்றால் வேறு என்ன?
9. அறநிலையத்துறை என்ற பெயரில் கோயில் நிலம், நிதிகள் பிற இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்துக்களுக்கு கட்டுப்பாடுகள், இந்து கோயில்கள் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவற்றின் வருமானம் மதரஸாக்கள், ஹாஜ் யாத்திரைகள், வஃப் வாரியங்கள், இஃதார் விருதுகள், மற்றும் கடன்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்து மத நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
10. இந்து உரிமைகள் தொடர்பான மனுக்கள் பெரும்பாலும், தள்ளுபடி செய்யப்படுகின்றன. சிறுபான்மையினருக்கு எப்போதும் சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது நியாயமா? அல்லது இது இந்துக்களின் கோபத்தை தூண்டும் வழியில்லையா? மேலும்,
11. இந்துக்களுக்கு எதிரான கல்வி பாகுபாடு!
12. கல்வி உரிமை சட்டத்தின் கீழ், இந்து பள்ளிகள் சிறுபான்மையினருக்கு 25% இடங்களை ஒதுக்க வேண்டும். ஆனால், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு இந்த விதி பொருந்தாது. ஆயிரக்கணக்கான இந்து பள்ளிகள் மூடப்பட்டன. இந்து குழந்தைகள் இப்போது இந்து அல்லாத நிறுவனங்களில் படிக்கிறார்கள்.
13. இது மதமாற்றத்தை ஊக்கி வைப்பது இல்லையா?
14. ஏன் உச்சநீதிமன்றம் இந்த ஒரு தலைப்பட்ச விதியை பார்க்கவில்லை? பேச்சு சுதந்திரத்தில் வெளிவேஷம். இந்துக்கள் பேசும்போது ஒரு வெறுப்பு பேச்சு. மற்றவர்கள் பேசும்போது அது கருத்து சுதந்திரம் என்று அழைக்கப்படுகிறது. நுபுர் சர்மா ஹதீஸிலிருந்து மேற்கோள் காட்டினார். நீதிமன்றம் அதை வெறுப்பு பேச்சு என்று கூறியது. ஆனால், ஸ்டாலின், உதயநிதி, ஆ ராசா மற்றும் திருமாவளவன் போன்ற பிற தலைவர்கள் சனாதன தர்மத்தை நோய் என்று அழைத்த போது நீதிமன்றம் மௌனமாக இருந்தது . இது நீதியா? மேலும்,
15. இந்து மரபுகளுக்கு எதிரான பாரபட்சமான தடை .
16. உச்சநீதிமன்றம்! தசரா விலங்கு பலி இந்து பழக்க வழக்கங்களை கொண்ட திருவிழாக்களை தடை செய்கிறது. ஆனால், ஈத் பண்டிகையின் போது நடைபெறும் பாரிய ஹலால் விலங்கு வதை குறித்து எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை.? மேலும், கோகுல அஷ்டமி கிருஷ்ணனின் திருவிழாவில், தயிர், பானை கொண்டாட்டங்களுக்கு உயர் ரக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
ஆனால், முஹரம் தொடர்பான வன்முறைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், தீபாவளி பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், கிறிஸ்மஸ் வெடி மருந்துகளுக்கு எந்த விமர்சனமும் இல்லை. இது பாகுபாடு இல்லையா?
17. வழிபாட்டுத் தலங்கள் சட்டம் இந்துக்களின் மறு சீரமைப்பை தடுக்கிறது. 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத்தலங்கள் சட்டம் ஆகஸ்ட் 15, 1947 அன்று இருந்த வழிபாட்டுத்தலங்களின் மத அடையாளத்தை மாற்றக்கூடாது என்று கட்டாயப்படுத்துகிறது. மேலும், இந்த சட்டம் அழைக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட பண்டைய கோவில்களை மீண்டும் பெறுவதில் இருந்து இந்துக்களை தடுக்கிறது. மேலும், ராமர் கோயிலுக்காக பல தசாப்தங்களாக போராட வேண்டி இருந்தது. பல கோயில்கள் இன்னும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இது வரலாற்று அநீதி இல்லையா?மேலும்,
18. இந்து மரபுகளை மட்டும் குறி வைப்பது சபரிமலை வழக்கில் ,நீதிமன்றம் இந்து உணர்வாளர்களை புண்படுத்தியது. மேலும், சில இந்து கோயில்களில் ஆண்கள் மட்டும் அல்லது பெண்கள் மட்டும் செல்லும் பழக்கம் உள்ளது. ஆனால், நீதிமன்றம் இந்து மரபுகளை மட்டுமே கேள்வி எழுப்பியது. இஸ்லாத்தில் பெண்கள் மசூதிக்குள் நுழையவோ அல்லது சில அமைப்புகளில் குரானை ஓதவோ முடியாது. அதேபோல, கிறிஸ்துவத்தில் பெண்கள் பாதிரியார்களாக முடியாது. இதை ஏன் நீதிமன்றம் அந்த மதங்களை கேள்வி கேட்கவில்லை?மேலும்,
19. சி ஏ ஏ (CAA) எதிர்ப்பு போராட்டங்களின் போது நடவடிக்கை இல்லை. ஷாகின்பாக் போராட்டங்கள் மற்றும் சிஏஏ (CAA)எதிர்ப்பு கலவரங்களின் போது, உச்சநீதிமன்றம் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. போராட்டக்காரர்கள் பொது சாலைகளை நாள் கணக்கில் மறித்தனர். ஆனால், நீதிமன்றம் அதை நிறுத்தவில்லை. இது சட்டத்தின் கேலிக்கூத்து இல்லையா? இதுவும் இந்துக்களின் கோபத்தை அதிகரிக்கவில்லையா?
இதனால், நீதித்துறை! அதர்ம துறையாக செயல்படுவதை சாமானிய மக்களும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால், நீதித்துறை ஒவ்வொரு தீர்ப்பும் நடுநிலையோடு இருக்க வேண்டும்.பணக்காரனுக்கு ஒரு தீர்ப்பு ,அரசியல்வாதிகளுக்கு ஒரு தீர்ப்பு, ஆட்சியாளர்களுக்கு ஒரு தீர்ப்பு, மதவாதிகளுக்கு ஒரு தீர்ப்பு, என்று நீதியை பொதுமக்கள் விமர்சனம் செய்யக்கூடாது.நடுநிலை இல்லாமல் கொடுக்கின்ற தீர்ப்புகள் கேலிக்கூத்தானது.
நாட்டில்! பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்துக்களுக்கே, இந்த நிலைமை என்றால்! நீதித்துறை அவசியம் சரி செய்யப்பட வேண்டும். அரசியல் தலையீடு ஒழிக்கப்பட வேண்டும்.அரசியல் தலையீடு இருந்தால் அங்கே பணம் விளையாடும்.