டிசம்பர் 02, 2023 • Makkal Adhikaram
நாட்டில் கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள் ஊழலுக்கு மறைமுகமான செய்திகளை சில பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தற்போது வெளிவந்த ஒரு பத்திரிக்கையின் செய்தி அதிர்ச்சியாகவே இருந்தது. வெளி உலகத்திற்கு தன்னை பெரிய பத்திரிகை என்று சொல்லிக் கொண்டாலும், அதற்குள் என்ன பிரச்சனைகள் இருக்கிறது? என்பதை தெரியாமல், பொதுமக்களையும்,அரசு உயர் அதிகாரிகளையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
ஒருவர் பொதுநல வழக்கு தொடர்கிறார் என்றால், அந்த பிரச்சனையில் அவர் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது அந்த கிராமத்திலோ, அந்த பகுதியிலோ, அதற்கான பாதிப்புகள் அந்த மக்களோடு அனுபவித்து இருக்க வேண்டும். ஆனால், கருவேல மரத்தை வைத்து சார்கோல்(Charcoal) வியாபாரம் செய்யக்கூடிய முதலைகள், நாட்டில் வெறும் சில ஆயிரங்களுக்கு கிராமங்களில் ஏலம் எடுத்து விட்டு,அதில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள், நீர்வளத் துறை அதிகாரிகள், கோடிக்கணக்கில் பங்கு போட்டுக் கொண்டிருக்கும் பெரும் ஊழல்கள் தான் இன்றைய கருவேலம் மரம் அகற்றுகின்ற வேலை.
இதில் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சியினருக்கு எவ்வளவு சமூக அக்கறை? அந்த அக்கரைப்பற்றி பத்திரிக்கையில் செய்தி வெளிவந்துள்ளது .அதையும் அவர்களையும் பாராட்டி தான் தீர வேண்டும். ஏனென்றால் சமூக ஆர்வலரை விட, இன்று ஒரு அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் அதில் முனைப்பு காட்டுகிறார்கள் என்றால், எந்த அளவுக்கு மணல் வியாபாரத்திற்கு சமமாக ஒரு கொள்ளை இந்த கருவேல மரத்தில் நடந்தேறி வருகிறது. நீதிபதிகளும், நீதிமன்றமும் சமூக நல பத்திரிகைகளின் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்காததால் தான், போலியான பொய் செய்திகளுக்கு கார்ப்பரேட் நிறுவனம் என்றால் அக்மார்க் செய்தி நிறுவனமா?
அதனால் உண்மை எது? என்பதை ஆய்வு செய்யுங்கள். எந்தெந்த கிராமங்களில் இந்த பிரச்சனைகள் தொடர்கிறது? இதில் பொது மக்களின் எதிர்ப்பு என்ன? எதைப் பற்றியும் கவலைப்படாமல், அரசு அதிகாரிகளும், பஞ்சாயத்து தலைவர்களும் ,நீர்வளத்துறை அதிகாரிகளும், பங்கு போட்டுக் கொள்ளும் சம்பவம் தான், இந்த சார்கோல் கருவேலமரம் வியாபாரம் .இது கருப்பு வைரம் என்று சொல்லலாம் .அந்த அளவிற்கு இதில் ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் அரசியல் உள்ளது .இதை சென்னை உயர்நீதிமன்றம் அலட்சியமாக கருதக்கூடாது.மேலும்,
இந்த கருவேல மரத்தின் ஒரு டன் விலை என்ன? ஒரு ஏக்கரில் எத்தனை டன் மரம் இருக்கிறது? அதன் மதிப்பு என்ன? இவையெல்லாம் தற்போது கோடியில் வியாபாரம் செய்பவர்கள் தான் இவ்வளவு முனைப்பு காட்டுகிறார்கள். அதனால், இதனுடைய உண்மையான நிலவரம் மதிப்பீடு செய்த அதிகாரி பொதுமக்கள் முன்னிலையில் இந்த ஏலங்கள் விடப்படாமல், ரகசியமாக ஏலங்களை விட்டு கோடிக்கணக்கில் ஊழல்கள் நடைபெறுகிறது.அது மார்க்கெட் மதிப்பு என்ன? அரசு நிர்ணயிக்கும் விலை என்ன? தவிர ,தனியார் கம்பெனிகள் வாங்கும் விலை என்ன?
இது தவிர, இந்த கருவேல மரத்தை கரியாக்கி சார்கோல் பிசினஸ் செய்யும் வியாபாரிகளின் விலை என்ன? இவை அனைத்தும் இதில் மறைந்துள்ள மிகப்பெரிய ஊழல்கள். இதில் நிர்வளத்துறை அதிகாரிகளின் ஊழல் பங்கு என்ன? ஊராட்சி மன்ற தலைவர்களின் ஊழல் பங்கு என்ன? அந்த கிராமப் பகுதிகளில் உள்ள அரசியல் கட்சியினரின் ஊழல் பங்கு என்ன? இவையெல்லாம் ஒவ்வொன்றாக கணக்கெடுத்தால், இதில் எவ்வளவு பெரிய ஊழல் மறைந்திருக்கிறது? என்பது அரசுக்கும், நீதிமன்றத்திற்கும், தெரியவரும் .
மேலும், சில கிராமங்களில் நடைபெற்ற முறைகேடான ஏலம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளாக தொடரப்பட்டுள்ளது. அது எதற்காக கிராமத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் தொடர்ந்தார்கள்? என்பதை நீதிமன்றமும், நீதிபதிகளும், அரசின் உயர் அதிகாரிகளும் புரிந்து கொண்டால் சரி .