இது தான் கலிகாலத்தின் வாழ்க்கை என்பதா? கலி காலத்தில் நல்லவர்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். ஏமாற்றுபவர்கள் வாழ்க்கையில் உயர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். ஏமாற்றுபவர்களில் பல பிரிவுகள் உள்ளது. இன்று அரசியலில், அரசியல் கட்சிகளில் ஏமாற்றுபவர்கள் ஒரு பிரிவு, மதத்தை வைத்து ஏமாற்றுபவர்கள், ஜாதியை வைத்து ஏமாற்றுபவர்கள்,
இதையும் தாண்டி, ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றுவது, அதிக வட்டி கொடுப்பதாக சொல்லி எத்தனையோ நிதி நிறுவனங்கள், பெண்களை காதலித்து ஏமாற்றுவது, போலி சாமியார்கள் ஆன்மீகத்தில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள், போலி ஜோதிடர்கள் ஜோதிடத்தை வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் ,இப்படி ஆளாளுக்கு அவரவர் இருக்கின்ற துறைகளில் நயவஞ்சகமாக நன்றாக பேசி நல்லவர்கள் போல் வேஷம் இட்டு தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொண்டு ஏமாற்றுவது இன்றைய அரசியல் ஆகிவிட்டது.
இதில் அரசியல் தான் எல்லாவற்றிற்கும் மூல காரணம்,எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், இன்று அரசியல் கட்சி என்பது மக்களின் நம்பிக்கைக்கு, அவர்களுடைய அமைதியான வாழ்க்கைக்கு, இவர்களே ஒரு போராட்டக்காரர்களாக இருந்து வருகிறார்கள். இது கீழ் மட்டத்திலிருந்து ஆரம்பித்து, இன்றைய எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு இவர்கள் உத்தமர்களாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதைவிட ஒரு கொடுமை, இந்த உத்தமர்கள் மீடியாக்களில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். அதுதான் அப்பாவிகள் அரசியல் ஏமாற்றப்படுகிறார்கள். அங்கு தான் நல்லவர்கள் வீழ்த்தப்படுகிறார்கள். நாட்டில் நல்லவர்கள், நம்பிக்கை கூறியவர்கள், நான் கடவுளை மூன்று வேளை தொழுகுது வழிபடுகிறேன். அதனால், எனக்கு யாரும் துரோகம் செய்ய மாட்டார்கள். அப்படி செய்தாலும், கடவுள் பார்த்துக் கொள்வார் என்று குருட்டு நம்பிக்கையில் இருப்பவர்களும் உண்டு .இதுவும் ஒரு ஏமாற்றம்தான். இந்த கலிகாலத்தில் கெட்டவர்களின் ஆதிக்கம் அதிகமாகி, நல்லவர்களின் ஆதிக்கம் குறைவாக இருக்கும் போது, இவர்களால் வாழ்க்கையில் இவர்கடைய அபிலாஷைகள், எண்ணங்கள் வெற்றி பெற முடியாத நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.
(டாஸ்மாக் குடித்துவிட்டு ஓட்டு போட்டால், இந்த ஓட்டுக்கு என்ன அர்த்தம்? இது தகுதியான சிந்தித்து போடும் ஓட்டா? இல்லை போதையில் போடுகின்ற ஓட்டா? இதைப் பற்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?)
இதற்கு காரணம், இவர்கள் நன்றாக பேசினாலே, ஏமாந்து விடுகிறார்கள். அதாவது பேசிய கவிழ்த்து விடுவது இது ஆண்கள் மட்டுமல்ல, அரசியலுக்கு வந்த பெண்களும், அந்த வேலையை செய்கிறார்கள். அதனால், நாட்டில் இன்று அது எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், இவர்கள் நம்பிக்கைக் குறியவர்கள் என்று யாரையும் எளிதில் நம்பி விட முடியவில்லை. பேசத் தெரிந்தவர்கள், இந்த சமூகத்தை ஏமாற்ற தெரிந்தவர்கள் ,ஊர் சொத்துக்களை ஏமாற்றத் தெரிந்தவர்கள், ஊழல் செய்யத் தெரிந்தவர்கள், சட்டத்தை ஏமாற்றுபவர்கள், சட்டப்படி நான் திருடினேன், சட்டப்படி நான் கொள்ளை அடித்தேன் ,அது தவறில்லை என்று மக்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .அது திறமை என்று அரசியலில், அரசியல் தெரியாத மக்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், மக்களிடம் விழிப்புணர்வு என்பது அவசியமானது.
இந்த விழிப்புணர்வு நீங்கள் இவர்களிடம் ஏமாறாமல் இருப்பதற்கும், உங்களுடைய உழைப்பு வீணாகாமல் வளர்ச்சி பெறுவதற்கும், அடிப்படை அரசியல். அந்த அரசியலுக்கு தகுதியானவர்கள் தேர்வு மிக முக்கியமானது. அந்த தகுதி ஆனவர்கள் வாயிலே பேசிக்கொண்டிருந்தால், அங்கே யார் தகுதியானவர்கள்? யார் நல்லவர்கள்? என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இன்று ஊழல்வாதிகளும், பிராடுகளும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எப்படி இன்று பத்திரிகை துறையில் உள்ள தகுதி இல்லாதவர்களும், தகுதி இருப்பவர்களும், இது பத்திரிகை நிருபர்களுக்கு மட்டுமல்ல பத்திரிகைகளுக்கும் சேர்ந்து தான் இந்த நிலைமை உள்ளது. அதே நிலைதான் அரசியலிலும் இன்று உள்ளது. தகுதி உள்ளவர்கள், தகுதியற்றவர்கள் இரண்டும் போட்டி போடுகிறது .இரண்டு பேரும் பேசுகிறார்கள், உத்தமர்களைப் போல, இதில் யாரை தேர்வு செய்வது? என்பது பொதுமக்களுக்கு மிகப்பெரிய குழப்பம். இப்போது எங்களைப் போன்ற ஆட்கள் என்றால், அவரை ஏ டூ இசட் புள்ளி விவரத்தோடு ஆதி அந்தம் போராவும், தோன்றி எடுத்து விடுவோம்.
ஆனால்,அரசியல் என்றால் என்ன? என்ற அறிச்சுவடி தெரியாத மக்களிடம் பேசி அவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் நாங்கள் ஜெயித்தால் இதை செய்து விடுவோம், அதை செய்து விடுவோம், என்று பொய்யான தேர்தல் வாக்குறுதிகள். அப்படிதான் தற்போதைய கர்நாடகாவில் ஜெயித்த காங்கிரஸ் அரசு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. செலவு செய்ததை எடுக்க முடியாமல் எம்எல்ஏக்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், அரசியல் கட்சியினரும் கலக்கத்தில் இருந்து வருகிறார்கள். அரசியல் என்பது ஜெயித்த பிறகு, மக்களை சுரண்டி சாப்பிடுவது தான் இன்றைய அரசியல் ஆகிவிட்டது.
அதனால்,நாட்டில் ஏமாற்று அரசியல் வியாபாரத்திற்கும், ஊழல் மற்றும் ஊழல்வாதிகளுக்கும், முட்டுக் கொடுக்கும் பத்திரிகைகளில் இருந்து, அதேபோல் தொலைக்காட்சிகள் இடம் இருந்து, சமூக ஊடகங்களில் இருந்து, உங்களை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதில் அலட்சியம் இருந்தால், நிச்சயம் ஏதாவது ஒரு விதத்தில் நீங்கள் இந்த சமூகத்தில் ஏமாற்றப்படுவீர்கள் என்பது உறுதி. இன்று மனித வாழ்க்கையின் நம்பிக்கையே அரசியலால் கேள்விக்குறியாகி உள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை, நடுத்தர மக்கள் .இந்த மக்க மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு மட்டும் அல்ல, வாழ்க்கையின் விழிப்புணர்வும் அவசியமானது .
அப்போதுதான் நீங்கள் இந்த சமுதாயத்தில் வளர்ச்சிக்கான பாதையை தேர்வு செய்ய, உண்மையானவர்கள், மக்களுக்காக உழைப்பவர்கள், மேலும், அதற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள், இவர்களால் தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் .மீதி எல்லாம் இந்த அரசியலில் ஏழை, நடுத்தர மக்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் எந்த ஜாதியாக இருந்தாலும் சரி, எந்த மதமாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும், உங்களை ஏமாற்றுவதற்கு எப்படியும் பேசி ,அவர்களுடைய திறமை இதுதான் என்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால், இனி எதிலும் அலட்சியமாக இருப்பவர்கள், உழைப்பை நம்பி வாழ்பவர்கள் ,உண்மையை நம்பி வாழ்பவர்கள், கடவுளை நம்பி வாழ்பவர்கள், தர்மத்தின் வழியில் நடப்பவர்கள், யாரிடமும் அலட்சியமாக இருக்காதீர்கள். அரசியலில் யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். இன்றைய அரசியல் என்பது மக்களை ஏமாற்றும் ஒரு தொழிலாக்கி விட்டார்கள். ஒருவருக்கு வாக்களிக்கும் முன் அவரைப் பற்றி 100 முறை சிந்தியுங்கள். அந்த அரசியல் கட்சியை பற்றி 100 முறை சிந்தியுங்கள். இவர் அதற்கு தகுதியானவரா? என்று ஆயிரம் முறை சிந்தியுங்கள் .அப்போதுதான் ,தமிழ்நாட்டில் தகுதியான நபர்கள் அரசியலுக்கு தேர்வு செய்ய முடியும். அவர்களால்தான் நாட்டின் வளர்ச்சிக்கும், பொது மக்களின் நன்மைக்கும், சேவை மனப்பான்மை கொண்டவர்கள் யார்? என்பதை தீர்மானியுங்கள்.