பொதுமக்கள் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளை பெரிய நிறுவனங்களாக நினைத்து ஏமாந்தால், அது உங்கள் தவறு. உங்கள் தவறால் அவர்களுடைய வியாபாரம் பெருகிக்கொண்டே போகிறது.இது தவிர, தொலைக்காட்சி விவாதம், இந்த விவாதத்தில் என்ன உண்மை தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்? திருடனும் நல்லவன் மாறி பேசுவான். கொள்ளை அடிப்பவனும், உத்தமன் மாதிரி பேசுவான். இதைத்தான் பார்த்துவிட்டு போக வேண்டும். அவர்கள் ஒன்றே ,ஒன்று சொல்லி தப்பித்துக் கொள்வார்கள். அவர்கள் பேசினார்கள். சொன்னார்கள். நாங்கள் போட்டோம். எங்களுக்கும், அதுக்கும் சம்பந்தமில்லை.மேலும்,
இப்படி எந்த ஒரு சமூக நலன் ஊடகமும் இந்த கருத்தை சொல்லாது. வியாபார நிறுவன ஊடகங்களும், விளம்பர நிறுவன ஊடகங்களும், இதை அலட்சியமாக ஒரே வரியில் சொல்லிவிட்டு போய்விடுவார்கள். ஆனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான். அதனால், திருவள்ளுவர் ஒரு திருக்குரலை இதற்கு உதாரணமாக சொல்லிவிட்டு போயிருக்கிறார். அது என்ன என்றால்? எப்பொருள் யார்? யார்? வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு .மேலும்,
எந்த பத்திரிக்கையாக இருந்தாலும், அந்த பத்திரிகையின் தரம், தகுதி, என்னவென்று தெரியாமல், இந்த செய்திகளை எல்லாம் படித்து ஏமாறாதீர்கள் . தேச நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும் நடத்துகின்ற பத்திரிக்கைகள் மிக மிகக் குறைவு. அந்த மிகக் குறைந்த பத்திரிகைகளுக்கு கூட, இன்று வரை இந்த நாட்டில் எந்தவித சலுகைகளும், விளம்பரங்களும் கொடுக்காமல் ஏமாற்றும் செய்தித் துறை, எவ்வளவு பெரிய தவறுகளை இந்த சமூகத்திற்கும், தேசத்திற்கும் செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பதை மக்களாகிய நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.மேலும்,
இங்கே சர்குலேஷன் என்ற ஒரு சட்டத்தை போட்டு, அந்த சட்டத்திற்குள் இந்த சமூக விரோத கும்பலுக்கு, தேச விரோத கும்பலுக்கு மறைமுகமாக கூஜா தூக்குகின்ற பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் கூட மத்திய, மாநில அரசின் சலுகை விளம்பரங்களா? இதையும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா, இந்த பத்திரிக்கை துறையைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இதுவும் சட்டத்தில் நான்காவது தூண் என்று சொல்லிக் கொள்வது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்.
இவையெல்லாம் பணத்திற்காக, வியாபார நிறுவனங்களாக மாறி பல ஆண்டுகள் ஆகிறது. இதற்கு தான் முக்கியத்துவம் அளித்து மத்திய மாநில அரசின் செய்தித் துறை மற்றும் அதிகாரிகள் கோடி கணக்கில் மக்களுடைய வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எப்படி பத்திரிக்கையை படித்தவர்கள், உண்மையை புரிந்தவர்கள், எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது . அதனால், நாடு எக்கேடு கேட்டுப் போனால் என்ன? சமூகம் எக்கேடு கெட்டுப் போனால் என்ன? என்று எழுதிக் கொண்டு, எத்தனை கோடி சம்பாதிக்கலாம்? அரசியல் கட்சிகளின் சுயநலத்திற்கும், ஆட்சியாளர்களின் சுயநலத்திற்கும், பத்திரிக்கை நடத்துவது! பத்திரிக்கையின் நான்காவது தூண் .இதுவல்ல,மேலும்,
கார்ப்பரேட் பத்திரிகை- ஊடக அரசியல், சமூக நலன் ஊடகங்களில் வெளி வருகின்ற செய்திகள் கூட, இதை சோசியல் மீடியாவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பத்திரிகையை பதிவு செய்து நடத்தும் போது அதற்கு (RNI)மத்திய அரசு கொடுத்துள்ளது.மேலும், அந்தப் பத்திரிகையின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இணையதளங்கள், எப்படி சோசியல் மீடியாவாக இந்த கார்ப்பரேட் ஊடக பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், இதை சோசியல் மீடியாவாக சொல்கிறார்கள்? சில அரசியல் கட்சிகளின் செய்தி நிறுவனங்களாக இருந்து கொண்டு அதுவும் சர்குலேஷன் என்ற கணக்கு காட்டி, இது யாரை ஏமாற்றும் வேலை?
இவர்களுடைய அரசியல் செல்வாக்கு ஊழலுக்கு ஒத்துவதும் வேலை. மற்றும் ஆட்சியாளர்கள் சொல்வதை செய்திகளாக போட்டுக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளுக்கு, பத்திரிகைகளுக்கு இது முன்னுரிமையா? இந்த முன்னுரிமை தான் பத்திரிக்கை சுதந்திரமா? இதற்கு தான் கோடிக்கணக்கில் மக்களுடைய வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்களா? இது எல்லாவற்றையும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், தனிப்பட்ட முறையில் பதிவு செய்யாத பெயரில் வழங்கப்பட்ட டொமைன்கள், யூ டியூப்கள் வேண்டுமானால், அதை சோசியல் மீடியாவாக எடுத்துக் கொள்ளலாம். அதில் வரும் செய்திகளுக்கு மக்களும், முக்கியத்துவம் அளிக்க வேண்டியது இல்லை. பத்திரிக்கை துறையும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியது இல்லை . மேலும், இணையதள பார்வையாளர்களை ஏன் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா அதை சர்குலேஷனில் கொண்டு வரக்கூடாது? இதுதான் உண்மையான பத்திரிக்கை துறையின் தற்போதைய சமூக மாற்றமாகும்.மேலும்,
இப்படிப்பட்ட முக்கிய கருத்துக்கள், எந்த பத்திரிக்கை? தொலைக்காட்சிகளில் வெளி வருகிறது? என்பதை பத்திரிகை துறை, பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா,மத்திய மாநில அரசின் செய்தித்துறை ,இதை அவசியம் கவனத்தில் கொள்ளுமா ? இந்த மாற்றத்திற்கான சட்டத்தை பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா,விளம்பரம் மற்றும் சலுகைகளுக்கு, தகுதியான பத்திரிகைகள் எது? என்பதை மத்திய செய்தி துறைக்கு பரிந்துரைக்குமா? – சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் .