நீதித்துறையில் அரசியல் தலையீடு அதிகமானதிலிருந்து, நிதித்துறை பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறது. அதே போல் தான் பத்திரிகை துறையிலும் அரசியல் தலையீடு இதைவிட அதிகமாக இருப்பதால், இன்று நாட்டில் பத்திரிகை யாருக்காக இருக்கிறது? யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது? இந்த நிலைமைக்கு பொதுமக்களின் விமர்சனம் தொடர்கிறது.
சில தினங்களுக்கு முன் அம்பேத்கரின் போட்டோ நீதிமன்றத்தில் இருக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஜோதிராமன் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவுக்கு சீமான், திருமாவளவன் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தன.
நீதிமன்றத்தை பொறுத்த அளவில் எது தேவை? எது தேவையற்றது ?என்பது நீதிமன்றம் எடுக்கின்ற முடிவு .அதற்கு ஆலோசனை வழங்குவதற்கு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அருகதை கிடையாது .நீங்கள் சண்டை போட்டுக்கொண்டு, நீங்கள் பிரச்சனை பண்ணிக்கொண்டு ,நீங்கள் ஊழல் செய்து கொண்டு, நீதிமன்றத்தின் கதவுகளை தான் தட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், உங்களை யாரும் நீதிமன்றத்தில் இருப்பவர்கள் தட்டவில்லை.
அதனால், நீதிமன்றத்திற்கு, நீதிபதிகளுக்கு ஆலோசனை சொல்ல, எந்த அரசியல் கட்சிகளுக்கும் அருகதை கிடையாது. நீங்கள் அரசியல் செய்வது மக்களிடம் வைத்துக் கொள்ள வேண்டும். அதை நீதிமன்றத்தில் அரசியல் செய்ய ,உங்களை அங்கே அழைக்க மாட்டார்கள் .மேலும், நீதிமன்றம் ஒரு பொதுவான இடம். அங்கே ஜாதியை அடிப்படையாக வைத்துப் பேசுகின்ற ஒரு ஜாதி கட்சி தலைவராக நீங்கள் கொண்டாடும் போது, மற்ற ஜாதிகள் அவரை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? அந்த அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லை. அம்பேத்கர் சட்டம் வகுத்தவர் அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவரை அனைத்து சமூகத்திற்கும் ஒரு பொதுவான தலைவராக மக்கள் ஏற்றுக் கொண்டார்களா என்பது கேள்விக்குறி?.
மேலும், அவருடைய சிலையை பாதுகாக்க கிராமம் தோறும், நகரம் தோறும் ஒரு இரும்பு வேலி அமைத்து பாதுகாக்கப்பட வேண்டிய நிலைமைக்கு இருக்கிறது. அவரை வைத்து அரசியல் செய்ய பயன்படுத்துகிறார்களே தவிர, அவருடைய கொள்கை ,கோட்பாடுகளை எவரும் கடைப்பிடிப்பதில்லை. அம்பேத்கரை வைத்து மற்ற சமூகங்களை பயமுறுத்திக் கொண்டு, செய்யும் அரசியல் தேவையற்ற ஒன்று .அந்த அரசியல் எல்லா சமூகமும் ஏற்றுக் கொள்ளாது. சண்டையும் ,வக்கிர பேச்சுக்களும், உதவாத கருத்துக்களும் அரசியல் ஆக்கிக் கொண்டிருந்தால், மனித சமுதாயத்தின் அறிவு ,ஆற்றலை அது பலவீன படுத்திக் கொண்டிருக்கும்.
மேலும் ,சுயநலத்தின் அடிப்படையில் ஜாதியை பாகுபடுத்திக் கொண்டிருக்கும் அரசியல் தேவையற்றது. அதே போல் தான் பத்திரிகையில் அரசியல் முழுமையாக அதற்குள் அதிகாரமாக இருந்து கொண்டு, பத்திரிகையின் சுதந்திரம் என்பது கேள்விக்குறியாகவும், கேலிக்குறியாகவும் இருந்து வருகிறது. மேலும் கார்ப்பரேட் பத்திரிகைகளில் கூலிக்கு வேலை செய்பவர்களுக்கு கொடுக்கின்ற சலுகை, மதிப்பு மரியாதை கூட சமூக நன்மைக்காக போராடுகின்ற பத்திரிகைகளுக்கு, இந்த அரசாங்கம் கொடுப்பதில்லை. இது எவ்வளவு பெரிய கேவலமான ஒரு செயல்.
அதிலும் செய்தித்துறை அதிகாரிகளுக்கு ,இந்த உண்மைகளை பலமுறை மக்கள் அதிகாரம் எடுத்துச் சொல்லி இருக்கிறது. நேற்று கூட தலைமைச் செயலகத்தில் ஒரு இணை இயக்குனரை பார்த்து கேட்டேன். நீங்கள் பத்திரிகையை யாருக்காக நடத்த வேண்டும்? உங்களுடைய கொள்கை முடிவு என்ன? இதையெல்லாம் கொஞ்சம் வெளிப்படையாக சொல்லுங்கள் என்று கேட்டேன். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலகட்டத்தில் செய்தித் துறை வந்துவிட்டது. எத்தனை நாளைக்கு அரசியலின் கொள்கை முடிவு என்று பத்திரிகையின் சுதந்திரத்தையும், பத்திரிகையும் ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்?
மேலும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வு செய்வது தகுதியின் அடிப்படையில் இருக்க வேண்டுமே ஒழிய, ஜாதியின் அடிப்படையில் தேர்வு செய்தால், அங்கே நீதிமன்றத்தின் சுதந்திரம் அடிபட்டு விடும். அது மட்டுமல்ல, அங்கே ஜாதியின் அடிப்படையில் நீதிபதிகளை தேர்வு செய்தால், நீதி பேசு பொருளாகிவிடும். இதற்கெல்லாம் இடம் தராமல் நீதிபதிகளும், நீதிமன்றமும் இருந்தால்தான் மக்களுக்கு சமூக நீதி கிடைக்கும்.
ஆனால், அரசியல் தலையிட்டால் மீண்டும் அம்பேத்கர் படத்தை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி வைக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியானது.