நாட்டில் போலிகள், போலி கலாச்சாரம் அதிகரித்தால், உண்மை ,உழைப்பு, நேர்மை இவைகளுக்கு மதிப்பும், மரியாதையும், அங்கீகாரமும் மக்களிடம் இருக்குமா ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

ஜூலை 30, 2024 • Makkal Adhikaram

நாட்டில் நடக்கின்ற உண்மை சம்பவத்தை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் சினிமா படமாக எடுத்துள்ளார். இதைப் பார்த்தாவது மக்கள் திருந்துவார்களா?

இந்த சினிமா காட்சிகளில் வருகின்ற செய்திகள்! 90 சதவீதத்திற்கும் மேல் மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் . இதில் நான் பொய் சொல்ல முடியாது. இணையதளத்தை வேண்டுமானால் ஆய்வு செய்து கொள்ளலாம்.

 மேலும்,நாட்டில் போலிகள் போலி கலாச்சாரம் அதிகரித்தால், உண்மை ,உழைப்பு, நேர்மை இவைகளுக்கு மதிப்பும், மரியாதையும், அங்கீகாரமும் மக்களிடம் இருக்குமா ?எங்க தொட்டாலும், போலிகள் அதிகரித்துவிட்டது . இறைவனிடமே மக்களை ஏமாற்றக்கூடிய போலி சாமியார்கள் உருவாகுகிறார்கள் . மேலும், மக்களுக்காக உழைக்கக்கூடிய, நல்லது செய்யக்கூடிய அரசியல் வாதிகளில், அரசியல் கட்சிகளில் போலிகள் அதிகரித்து விட்டார்கள். அவர்களால் மக்களுக்கு எப்படி நல்லது நடக்கும்? ரவுடிகள் ,கொலை செய்பவர்கள், திருடர்கள். கொள்ளை அடிப்பவர்கள் இவர்களெல்லாம் அரசியல் கட்சி என்றால்! அந்த அரசியல் கட்சிக்கு அர்த்தம் என்ன?

இப்படி தான் கள்ள சாராயம் காய்ச்சி குடித்து மக்கள் செத்தாலும், அரசியல் கட்சிகள் அவர்களை வைத்து தான் அரசியல் நடத்துகிறார்கள். அதேபோல் பத்திரிக்கை துறையில் நாட்டில் யார் வேண்டுமானாலும் ஐடி கார்டு கொடுக்கப்பட்டால், அவர்கள் செய்தியாளராக ஆகிவிட முடியுமா? அதனால் தான், தற்போது பிரஸ்மீட் என்றால் 100 போலி செய்தியாளர்கள் வருகிறார்கள் .  அவர்கள் கவர் மட்டுமே நோக்கமாக வருகிறார்கள் . அங்கே செய்தி போடும் பத்திரிகைகள் இரண்டோ, மூன்றோ தான் தேறும்.இதை நான் சொல்லவில்லை. சில அதிகாரிகளும் ,அரசியல் கட்சியினரும் சொல்கிறார்கள்.பத்திரிக்கை என்றால், 

 கணக்கு காட்டுவதற்கு, பந்தா காட்டுவதற்கு தான் வருகிறார்கள். இனியாவது மத்திய, மாநில அரசின் செய்தித் துறை பற்றி ஒவ்வொரு மாவட்டத்திலும் புகார்கள் மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்புகிறார்கள். அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. செய்தி துறைக்கே அனுப்பினாலும் செய்தித் துறை உயர் அதிகாரிகள் கவலைப்பட போவதில்லை .மேலும்,

மக்களுக்கு உண்மை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .அதனால் தான் அரசியல் என்பது மக்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. போலிகளின் பின்னால் சென்று எதை பின்பற்றினாலும், யாராக இருந்தாலும் அதில் ஏமாற்றம் தான் மிஞ்சும். இன்று அரசியல் முதல் பத்திரிக்கைகள் வரை போலிகள் அதிகரித்து விட்டது. அதனால், மக்கள் உண்மையை ஆய்வு செய்து தேர்வு செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது .அப்போதுதான் மக்களுக்கு ஒரு விடியல் ஏற்படுத்த முடியும். அதுவரை எதிலும் மக்கள் தோல்வி தான் காண முடியும் . 

இன்று அரசியல் மட்டுமல்ல, தொழில், நாம் உபயோகப்படுத்தக்கூடிய பொருட்கள், மருத்துவம். பத்திரிக்கை. சினிமா, மனித வாழ்க்கையில் போலிகள் அனைத்திலும் ஊடுருவி விட்டது. அது இன்று புற்றுநோயாக சமூகத்தில் உருவெடுத்துள்ளது. மக்களுக்கு தான் எப்படியும் ஜெயிக்க வேண்டும். தான் எப்படியும் வாழ்ந்து விட வேண்டும். இந்த எண்ணத்தைப் போலவே போலிகளும், தானும் ஒரிஜினல் போல சமூகத்தில் வளம் பெற வேண்டும் .அவர்களுக்கு கிடைக்கின்ற அதே மதிப்பு, மரியாதை நமக்கும் கிடைக்க வேண்டும்.

இது எல்லாம் எப்படி வரும்? உழைப்பு ,உண்மை எதுவுமே இல்லாமல் தானும் பதவி ,அதிகாரம் தனக்கும் ஒரு அங்கீகாரம் வேண்டுமென்றால், இன்று வாயிலே பேசிவிட்டு, உதவாத கருத்துக்களை மற்றும் செய்திகளை போட்டுக்கொண்டு, நானும் பத்திரிக்கையாளர், நானும் பத்திரிக்கை இதுவெல்லாம் எப்படி முடியும் ? 

காசுக்காக பத்திரிகை அடையாள அட்டைகளை விற்றுக் கொண்டு, அதை வாங்கி கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டு ,அவர்களும் ஒரு சங்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருந்தால், உண்மைக்கு விலை என்ன ?உழைப்புக்கு விலை என்ன? இது எல்லாம் மத்திய மாநில அரசின் செய்தித்துறை கவனிக்கிறதா ? இல்லை ,இதையும் அங்கீகரிக்கிறதா? அரசியல் எப்படியோ, அப்படித்தான் பத்திரிகைதுறையும் இருக்குமா? அரசியல் சுயநலமாகிவிட்டதால், பத்திரிகையும் சுயநலமாகிவிட்டதா? 

இது காசு கொடுத்து கழுத்தில் வாங்கி மாட்டிக் கொள்ளும் பொருள் அல்ல, உழைப்பு, திறமை ,தகுதி இதை பணம் கொடுத்து அல்லது எத்தனை கோடி கொடுத்து வாங்க முடியாத ஒரு நிலை. இந்த நிலையைப் பற்றி இப்பவாவது மத்திய மாநில அரசின் செய்தித்துறை தெரிந்து கொள்ளுமா? மேலும், அரசியல் என்ற பொது வாழ்க்கை கொள்ளை அடித்து, கோடிகளை சேர்த்துக் கொள்வதற்கு அல்ல,அரசியல் கட்சிகள் தகுதியற்றவர்களை கொண்டு வந்து, கொடி பிடித்து கோஷம் போட்டு, வேஷம் காட்டுவதற்கு அல்ல,

காசு கொடுத்து மக்களை ஏமாற்றி அவர்களுடைய உரிமையை விலைக்கு வாங்கி, பதவி அதிகாரத்தை பறித்து தானும் மந்திரி, எம்எல்ஏ, எம்பி என்றால், உண்மையான அரசியல்வாதி உழைப்பு ,நேர்மை ,தகுதி அதற்கு விலை என்ன? இது எல்லாவற்றையும் சிந்திக்கும் மக்கள் ,இந்த போலி கலாச்சாரத்தில் இருந்து ஏமாறாமல் தங்களை பாதுகாத்துக் கொள்வது மட்டுமல்ல, இளைய தலைமுறைகள் ஏமாறாமல், உங்கள் லட்சியங்கள் ,கனவுகள் இந்த போலி கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டால் தான் முடியும் .

மேலும், சினிமா துறை என்பது ஒரு சமூகத்திற்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஆனால், அதுவே சமூகத்திற்கு கேடு விளைவிக்கின்ற ஒரு துறையாக தற்போது வந்து விட்டது. அதிலும் போலிகள் உள்ளே நுழைந்து வேட்டு, குத்து, கொலை சம்பவங்கள் அதிலே வைத்து ,இளைஞர்களுக்கு தவறான பாதையை வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து அப்படிப்பட்ட சினிமா படங்களை பார்ப்பது இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் மனதில் அது ஆழமாக பதிந்து, உங்களை அது ஒரு கருவியாக தூண்டும். அப்படிப்பட்ட படங்கள் அரசாங்கமே தடை செய்ய வேண்டும் .

அரசாங்கத்திற்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. நாம் எத்தனை கோடி சம்பாதிக்கலாம்? என்ற கவலை இருந்தால், எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். அதனால், சமூகம் ஒழுக்கத்திலிருந்து விடுபட்டு, போதைக்கு அடிமையாகி, எப்படியும் வாழலாம், எப்படியும் பேசலாம் என்ற நிலைக்கு வந்து விட்டால், இங்கே ஒருத்தரை ஒருவர் ஏமாற்றிக் கொள்ள வேண்டியதுதான். அதுதான் இப்பொழுது எதிலும், எங்கும் நடந்து கொண்டிருக்கிறது. அது புத்திசாலித்தனமாக நினைக்கிறார்கள். நீண்ட நாளைக்கு அது செல்லாது. அந்த நேரத்திற்கு வேண்டுமானால், இவர்களுடைய திறமை செல்லுபடி ஆகும். அதனால், உழைப்பு, உண்மை மட்டும்தான் நீண்ட நாள் நீடிக்க முடியும். அதனால், மக்கள் போலிகளை நம்பி உழைப்பவர்கள் ஏமாறாதீர்கள். ஏமாற்றுபவர்கள் இறுதியில் ஏமாந்து விடுவார்கள்.

மேலும் நாட்டில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் வேலைதான் பத்திரிக்கை துறை. இன்று பத்திரிகை துறையே பல குப்பைகளை சமூகத்திற்கு சேர்த்துக் கொண்டிருக்கிறது .இதை நம்ப முடிகிறதா? உண்மை. அதாவது சாமானிய நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவர் ஒரு பத்திரிகை நடத்துவது மிகவும் கடினமான வேலை. 

ஆனால், ஆறு ,ஏழு பத்திரிகை ஒரு சிலர் நடத்துகிறார்கள் என்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பத்திரிக்கை நடத்தவே தகுதி இருக்காது. இவரால் எப்படி ஆறு, ஏழு பத்திரிக்கை நடத்த முடியும்? அப்படிப்பட்டவர்கள் ஐடி கார்டு விற்பனையாளர்களாக இருப்பார்களே ஒழிய, பத்திரிகை நடத்த முடியாது. அதுவே அவர்கள் வருடத்திற்கு குறைந்தபட்சம் 10 லட்சத்திற்கு மேல் சம்பாதித்து விடுவார்கள். அங்கே உழைப்பு தேவையில்லை. செய்திகளை கொடுக்க ஆட்கள் தேவையில்லை. கணக்குக்கு எதையாவது பார்த்து, எந்த பத்திரிக்கையிலாவது நாலு செய்தி காப்பி அடித்து, அதை ஒரு பத்திரிக்கையில் போட்டு, இதுதான் பத்திரிகை என்று சமூகத்தை ஏமாற்றிக்கொண்டு, அரசாங்கத்தை ஏமாற்றிக் கொண்டு, போலி பத்திரிக்கை மற்றும் செய்தியாளர்கள் உருவாக்கி ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.

இந்த போலிகள் எல்லாம் சேர்ந்து, அரசியல் கட்சிகளைப் போல் சங்கங்களை உருவாக்கி, அதில் நிர்வாகிகள் என்று சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் .இது பத்திரிக்கை துறைக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அழிவு. இதை நெறிப்படுத்த வேண்டும். நெறிப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசாங்கத்தின் செய்தித் துறை மற்றும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா இவர்களால் தான் முடியும். இல்லையென்றால், நாட்டில் நான்காவது தூணிற்கு நிச்சயம் ஆபத்து. சமூகத்திற்கு ஆபத்து. இதை ஆரம்பத்திலே தடுப்பது நல்லது. ஒருவேளை மத்திய மாநில அரசின் செய்தித் துறை ,பிரஸ்கவுன்சில் ஆப் இந்தியாவும் இதை கண்டு கொள்ளவில்லை என்றால், நீதித்துறை தான் இந்த பத்திரிகை துறையை சரி செய்து ஒழுங்குபடுத்த முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *