கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் ஒரு செய்தி வெளி வந்தால் அது மக்களிடம் போய் சேருகிறது என்ற ஒரு நம்பிக்கையா? கௌரவமா? அல்லது அரசியல் வித்தையா? ஆனால், அந்த செய்தி மக்களுக்கு உண்மையாக அது தேவைதானா? அது அரசியல் கட்சிகளின் சுயநலத்திற்கு ஆனதா ?மக்களின் பொதுநலத்திற்கானதா? என்பதை பாகுபடுத்தி மக்களிடம் கொடுக்கும், சிறந்த மருத்துவராக, மருத்துவ முறையில் தான் சமூக நன்மைக்காக போராடி, வெளிவரும் பத்திரிகைகளின் நோக்கம் .
ஆனால், கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகள், வியாபார அரசியல் நோக்கம் கொண்டது .தவிர, தாங்கள் சார்ந்துள்ள அல்லது சொந்த அரசியல் கட்சிகளுக்கும் ,சுயநலத்துடன் கூடிய செய்திகளை வெளியிட்டு வருகிறது. மேலும் ,நாட்டின் நான்காவது தூண் என்று பெருமையாக பேசிக் கொள்ளும் இதில் பணத்திற்கு முக்கியத்துவமா? அல்லது சமூக மக்களின் முக்கியத்துவமா? எதற்கு, மத்திய மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுக்கிறது?
அடுத்தது, இந்த ஆர் என் ஐ எதற்காக கொடுக்கப்படுகிறது ?அதனுடைய நோக்கம் என்ன? மேலும், எந்த நோக்கத்திற்காக பத்திரிகை, தொலைக்காட்சிகள் இருக்க வேண்டும்? இதைப் பற்றி மத்திய மாநில செய்தி துறை அதிகாரிகள், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? இதையெல்லாம் நீதிமன்றம் எப்போது? இதை ஆய்வுக்கு உட்படுத்தப் போகிறதோ, அப்போதுதான் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவர்களால் ஊழல்வாதிகள் பெருகி வருகிறார்கள். வன்முறை கலாச்சாரம் பெருகி வருகிறது. தேசவிரோத சக்திகள் தலை தூக்குகிறது.
உழைப்பவர்கள், படித்தவர்கள் முன்னுக்கு வர முடியவில்லை .அவர்கள் பின்தங்கிய நிலையிலே தடுக்கப்படுகிறார்கள். அரசியலின் பயன்கள் சாமானிய மக்களுக்கு ஒரு ஏமாற்று வேலையாக இருந்து வருகிறது. அதற்கு ஒத்து ஓதுவது இந்த கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள் தான் இதை எப்போது பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள்? எப்போது சமூக ஆர்வலர்கள் புரிந்து கொள்வார்கள்?
எப்போது படித்த இளைஞர்கள் புரிந்து கொள்வார்கள்? இதை எப்போது மத்திய மாநில அரசுகளின் செய்தி துறை அதிகாரிகள் புரிந்து கொள்வார்கள்? மத்திய மாநில அரசு எப்போது புரிந்து கொள்ளும்? என்பதுதான் சமூக நன்மைக்காக போராடும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் மிகப்பெரிய வேதனை. மேலும்,
இந்த செய்தி துறையில் நடக்கின்ற மிகப்பெரிய மறைமுக ஊழலா? அல்லது அரசின் சுயநலக் கொள்கை முடிவா? எது என்பது இதுவரையில் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறது. இது எப்போது வெளி வருகிறதோ, அப்போதுதான் சமூக நீதிக்காக போராடும் பத்திரிகைகளுக்கு சமூக நீதி கிடைக்கும். இதற்கு நீதிமன்றம் தான் சரியான தீர்வா?