நாட்டில் மருத்துவத்துறை, மருத்துவக் கல்வி ,வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளதால்,  வியாதிகளால் மக்களின் வாழ்க்கை இன்று போராட்டமானது ஏன் ?

அரசியல் இந்தியா உணவு செய்தி சமூகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மருத்துவ கல்வியும், மருத்துவத் துறையும், நாட்டில் வியாபாரமாக்கப்பட்டுள்ளது. அதனால், இன்று 10 வயது குழந்தை முதல் 70,80,வரை நோயினால் பாதிக்கப்பட்டு, ஒரு போராட்டமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு என்னென்ன காரணங்கள்?  ஒரு பக்கம் உணவு பழக்க வழக்கங்கள், அடுத்தது விவசாயிகள் கெமிக்கல் உரங்களைப் பயன்படுத்தி, பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி, வேளாண் பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள்.

மற்றொரு பக்கம் கலப்பட எண்ணெய்கள், தரமற்ற பருப்பு வகைகள், ரோட்டோர கடை பஜ்ஜி, போண்டா விற்பனையாளர்கள், ஃபாஸ்ட் ஃபுட் விற்பனையாளர்கள், இவையெல்லாம் தரமானதாக இருக்கிறதா? மேலும் ஹோட்டல்களில் உணவுகள் தரமானதாக இருக்கிறதா?  சுகாதாரம் இல்லாமல் ஹோட்டல் உணவகங்கள் நடத்தப்படுகிறது. ஹோட்டல் நடத்துபவர்களுக்கு பணம் தான் முக்கியம். பொருளின் தரம், மக்களின் ஆரோக்கியமும் முக்கியமல்ல .

இது தவிர, உடலுக்கு தேவையற்ற அஜினோமோட்டோ என்ற வேதிப்பொருளை சுவைக்காக சேர்க்கின்றனர். இதனால் ஆண்மை குறைவு கூட ஏற்படுகிறது என்கிறார்கள். இப்படி பட்ட உணவுகள், மனிதன் பிறந்தது முதல் அவன் இறக்கும் வரை சாப்பிட்டால், நிச்சயம் நோய் அவர்களை கூப்பிட்டு அழைத்துக் கொள்ளும் .ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாகிறது. இது தவிர ,இன்றைய மருத்துவமனைகள் மக்களிடம் எப்படி எல்லாம் பணத்தை பிடுங்கலாம்? என்பதில் தான் முக்கிய குறிக்கோள். இல்லாத வியாதிக்கும் அவர்கள் டெஸ்ட் செய்வார்கள். நோய்க்காக ஒரு மனிதன் மருத்துவமனைக்கு சென்றால், அங்கே முறையான மருத்துவம் பார்ப்பதில்லை.

 குறிப்பிட்ட இந்த மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு கண் வலியால் அவதிப்பட்ட என் மனைவி திருவள்ளூர் அகர்வால் மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கே உங்களுக்கு கண் புரை வளர்ந்திருக்கிறது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று ரூபாய் 50,000 செலவாகும் என்று கேட்டார்கள். அப்போது நான் உடன் செல்லவில்லை. என் மகன் மட்டும்தான் சென்றார். எனக்கு போன் செய்கிறார்கள் டாக்டர்கள் சொன்ன விஷயத்தை பற்றி, எனக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. பரவாயில்லை இருக்கட்டும், வீட்டிற்கு வாருங்கள் பார்த்துக் கொள்ளலாம். அதற்குள் அங்கே ரூபாய் 3000 செலவாகி விட்டது. பிறகு என்னுடைய நண்பர் ஒருவர் ஆப்டிக்கல் கடை வைத்திருக்கிறார். அவரிடம் சென்று காண்பித்தேன். அவர் பரிசோதனை செய்து ,புரை எதுவும் வளரவில்லை. கண்ணாடி போட்டால் சரியாகிவிடும் என்று கண்ணாடியை கொடுத்தார். அப்படி என்றால் ,இந்த மருத்துவ மனைகள் எந்த நோக்கத்திற்கு என்பதை மக்கள் புரிந்து கொண்டால் சரி.

அதிலும், அரசு மருத்துவ மனைகள் கடமைக்கு மருத்துவமனை. கடமைக்கு மருத்துவர்கள் ஆக தான் இருக்கிறார்கள் .அவர்கள் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக தான் இன்றைய மருத்துவர்கள் இருக்கிறார்கள். அந்த காலத்தில் மருத்துவர்கள் ஊருக்கு அல்லது பத்து ஊருக்கு ஒரு நாட்டு வைத்தியர் இருப்பார். அப்போது இவ்வளவு நோய்கள் கிடையாது. இப்போதுதான் புதுப்புது நோய்கள் உருவாகி வருகிறது.

அந்த மருத்துவர்கள் கொடுக்கின்ற சித்த வைத்தியத்தில் பல நோய்கள் குணமாகிறது. இவர்கள் கொடுக்கின்ற மருந்து மாத்திரைகளால் ,தொடர்ந்து அதையே உண்ணும் போது வேறு சில வியாதிகளும், மக்களுக்கு தொடர்கிறது. இந்த அறிவியல் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கைக்கும் ,எவ்வளவு முரண்பாடுகள்?

 படிப்பறிவு இல்லாத மக்கள் எவ்வளவு ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள்? இன்று பட்டங்களை படித்து, வாழ்கின்ற மக்கள் எவ்வளவு டென்ஷன், மன அழுத்தம், போராட்டமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? இதற்கு காரணம் மக்களின் வாழ்க்கை முறை, உணவு முறை, பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், எல்லாமே ஒரு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது முக்கிய காரணம் .அதன் விளைவு மக்கள் இன்று போராட்ட வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது தவிர, நகரங்கள் முதல் கிராமங்கள் வரை மக்கள் 200 வகையான போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் எப்படி விடுபட முடியும்?

மேலும், ஒரு குழந்தை ஒன்றரை வயதில் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். அந்த வயதில் அதற்கு எதுவும் தெரியாது, அதிலிருந்து அது 25 வயது வரை படிப்பில் போராட்டம், தொழிலில் போராட்டம், வேலைக்காக போராட்டம், அதன் பிறகு கல்யாணம், குடும்ப வாழ்க்கையில் போராட்டம். இப்படி ஒரு போராட்டமான வாழ்க்கைக்கு, மனித வாழ்க்கை தள்ளப்பட்டுள்ளது. இதில் தற்போது வியாதி இல்லாமல், நோயில்லாமல் வாழும் மக்கள் மிகவும் குறைவு. ஆரோக்கியம் என்பது மக்களிடம் கேள்விக்குறியாகி உள்ளது.

 தவிர ,தற்போது பிபி, சுகர், கொலஸ்ட்ரால் இது மூன்றும் இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. இதற்கு முக்கிய காரணம் ஒரு பக்கம் டென்ஷன், மறுபக்கம் மன அழுத்தம், வாழ்க்கையின் நெருக்கடிகள், வாழ்க்கையின் போராட்டத்தில் இந்த விஞ்ஞான வாழ்க்கை, மக்களின் நிம்மதியை கெடுத்து விட்டது. அப்போது மக்கள் உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்தார்கள்.

இப்போது உடல் உழைப்பு என்பது குறைந்து விட்டதால், மனித வாழ்க்கை போராட்டத்தின் உச்சகட்டம் ஆகிவிட்டது. அது மட்டுமல்ல தற்போது மக்கள் எப்படி உழைக்காமல் சம்பாதிப்பது எப்படி? உழைக்காமல் கோடிகளை பார்ப்பது எப்படி? அரசியலில் சட்டப்படி எப்படி ஏமாற்றலாம்? அதில் சட்டத்தின் ஓட்டையை வைத்து அதிகாரிகளுடன் எப்படி கூட்டுக் கொள்ளையடிக்கலாம்?என்ற மனநிலைக்கு மாறிவிட்டார்கள்.

 மற்றொரு பக்கம் ஆடம்பரம், போலியான சொகுசு வாழ்க்கை, இவை எல்லாம் இன்றைய மனித வாழ்க்கையின் கௌரவ கலாச்சாரம் ஆகி, நிம்மதியும், சந்தோஷத்தையும் கெடுத்து விட்டது . இன்று பணக்காரனும், நடுத்தர வர்க்கமும், ஏழையும் எல்லோரும் இந்த நிம்மதி, சந்தோஷத்திற்கு ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 அதாவது மனித வாழ்க்கை ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு துறையிலும் போட்டி, போட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் அரசியல், அதிகாரம் மக்களின் எதிர்பார்ப்புக்கு இல்லை.

அவர்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து கொள்ள இன்றைய அரசியல் கட்சியினரும், ஆட்சியாளர்களும் இருக்கிறார்கள் என்பதை புரிந்த மக்கள் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே.

 இது தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டம், ஆயிரம், இரண்டாயிரம் என்று இவர்களுடைய  வாக்குகளை ஏலத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஏலத்தில் ஜெயித்த ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் தலைவர்கள், கவுன்சிலர்கள், நகர முதல் கிராமங்கள் வரை, பொது சொத்துக்களை கொள்ளை அடிப்பதில், அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து கூட்டுக் களவாணிகளாக இருக்கிறார்கள். இது ஒரு புறம் மக்களின் வாழ்க்கையை போராட வைத்துக் கொண்டிருக்கிறது.

மேலும், அலோபதி மருத்துவம் முழுக்க ,முழுக்க வியாபார நோக்கம் கொண்டு, மருத்துவ கம்பெனி கார்ப்பரேட் நிறுவனங்கள், உலக அளவில் கோளாச்சி வருகிறது. அரசாங்கமும் இதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதைவிட சிறப்பானது சித்தா ,ஆயுர்வேதம் இதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அலோபதி தேவை, அது எப்போது என்றால் ,ஒரு ஆபரேஷன், விபத்து இந்த நேரங்களில் தான் அலோபதி. ஆனால், நோயின்றி வாழ ,சித்தா ஆயுர்வேதம் முக்கியமானது.

 அலோபதி மருத்துவம் நோயை குறைக்குமே ஒழிய ,நோயை முற்றிலுமாக குணப்படுத்துவதில்லை. ஆனால், ஆயுர்வேதம், சித்தா நோயிலிருந்து மனிதனை விடுவிக்கிறது. இவ்வளவு விஷயங்கள் மனித வாழ்க்கையோடு மருத்துவம் போராடிக் கொண்டிருக்கும்போது ,அரசாங்கம் மக்களை தேடி மருத்துவம் என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்து, கோடிக்கணக்கான ரூபாய் வீணடிக்கிறது. மற்றொரு பக்கம் அரசு மருத்துவமனைகள், கடமைக்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதில்,

மக்களின் பயன் என்ன? எவ்வளவு பேர் குணமடைகிறார்கள்? அல்லது குணமடைந்தார்கள்? இந்த ரிசல்ட் மருத்துவர்களால் காண்பிக்க முடியாது. அதனால் டோட்டலாக இந்த மருத்துவத்துறையை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கடமைக்கு அரசு மருத்துவமனை நடத்துவது வீண்.

அதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்வதும் வீண். தவிர, அரசு மருத்துவமனையில் வேலை செய்யக்கூடிய டாக்டர்கள், தனியாக கிளினிக் நடத்தக்கூடாது .இது ரொம்பவும் முக்கியமானது.மேலும்,  

தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு மருத்துவமனை ஏன்? மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாது? கோடிக்கணக்கில் வீணடிக்கும் மக்களின் வரிப்பணத்தை முறையாக செலவு செய்தால், கொண்டு வர முடியும்..மேலும், விவசாயிகள் தங்கள் வேளாண் பொருட்களை ஆர்கானிக் முறையில், அதாவது இயற்கை உரங்களை பயன்படுத்தி விற்பனை செய்ய வேண்டும். அது மட்டுமல்ல, ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள், தடை  செய்து, ஆர்கானிக் உரங்கள் ,ஆர்கானிக் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்ய வேண்டும். அதை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.

அப்போதுதான் மக்கள் நோயிலிருந்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதனால், மத்திய, மாநில அரசுகள் ,மருத்துவத்துறையை வியாபாரமாக்கப்பட்டதால், இன்று மக்கள் எவ்வளவு நோயோட ,வியாதியோட போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் கொண்டு வந்து என்ன பயன்? மேலும், மக்களுக்கு நோயை ஏற்படுத்துவதை தடுக்க என்ன நடவடிக்கை? எடுக்க வேண்டுமோ அதை எடுக்க வேண்டும்.

 அதை செய்யாமல்  காப்பீட்டு திட்டங்கள் கொண்டு வந்து, தனியார் மருத்துவமனைகளுக்கு மருத்துவ வியாபாரம் செய்ய ,மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ளது. இதனால் மட்டும் மக்கள் நோயிலிருந்து விடுபட முடியுமா? மேலும், இன்றைய மருத்துவக் கல்வி வியாபாரமாக்குவதை ஒருகாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நீட் தேவையா? தேவையில்லையா? என்பதை அரசியல்வாதிகள் பேசக்கூடிய விஷயம் அல்ல. அது மருத்துவ விஞ்ஞானிகள் பேசக்கூடிய விஷயம். இதில் அவர்களுக்கு என்ன தெரியும்? வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகின்ற அரசியல் வியாபாரிகள், மக்களின் எதிர்காலத்தையும், அவர்களின் ஆரோக்கியத்தையும், மாணவர்களின் எதிர்காலத்தையும், சிந்திக்கவில்லை. அவர்கள் சிந்திப்பது பணத்தை மட்டும் தான் சிந்திக்கிறார்கள்.

 தொடர்ந்து படித்த முட்டாள்களாக இந்த அரசியல் வாதிகளிடம் தங்களுடைய வாக்குரிமையை கொடுத்து, ஏமாந்து வாழ்ந்து கொண்டிருப்பது வீணான வாழ்க்கை .சிந்திக்காமல் வாழ்ந்து பயனில்லை. அவர்கள் எல்லாம் தெரிந்த மேதைகள் போல் பேசுவார்கள். ஆனால், மறுபடியும் எங்கே வருவார்கள் தெரியுமா? அறிவாளிகள் கிட்ட தான் ஆலோசனை கேட்பார்கள். அதனால், மக்கள் விழித்துக் கொண்டால், பிழைத்துக் கொள்ளலாம் .

அரசியல் என்பது இவர்கள் கொள்ளையடிக்க ,மக்களை அடிமையாக்க, நடத்திக் கொண்டிருக்கும் வேலையல்ல. வியாபாரமும் அல்ல என்பதை சிந்தியுங்கள். விழிப்புணர்வு மிகவும் அவசியம். மக்கள் அதிகாரம் மக்கள் நலனில் என்றும், மக்களுக்காக. . !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *