தமிழ்நாட்டில் ஏழு லட்சம் கோடி கடன் வைத்திருக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகால அதிமுக ,திமுக ஆட்சியின் ஆட்சியாளர்கள். இதில் ஜெயலலிதா மற்றும் சசிகலா குடும்பத்தினர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்தவர்கள். கருணாநிதி நீண்ட நாள் வழக்கு விசாரணையில் இருந்தவர்.
மேலும், மு க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களும் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளவர்கள். ஒரு நாட்டின் முதலமைச்சர்களே சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி வழக்கு பிரச்சனையை சந்திக்கிறார்கள் என்றால், மற்ற அமைச்சர்கள் எப்படி இருப்பார்கள்? அமைச்சர்கள் கீழ் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் எப்படி இருப்பார்கள்?
இது தவிர்த்து, தொழிலதிபர்கள், வியாபாரிகள், சினிமாக்காரர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரிகள், இவர்கள் அனைவரும் வருமான வரித்துறை ரெய்டு நடத்த வேண்டும். இதில் சிலர் நேர்மையாகவும் இருக்கலாம். அது பற்றி கவலை இல்லை .ஆனால், தொடர்ந்து தமிழ்நாட்டில் இவர்கள் எல்லாம் கண்காணிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட வேண்டிய முக்கிய நபர்களாக வருமானவரித்துறை எடுத்துக் கொள்ள வேண்டும். இதைவிட முக்கியமான ஒரு துறை இருக்கிறது, பொது பணித்துறை ,தற்போது நீர்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை இந்த துறைகளில் உள்ள மாநில, மாவட்ட உயர் அதிகாரிகளை நிச்சயம் வருமான வரித்துறை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
மேலும், மக்களின் வரிப்பணத்தில் தான் சலுகை இலவசம் கொடுக்கப்படுகிறது. அதிலும் ஊழல்கள் நடைபெறுகிறது. அந்த ஊழல் பத்திரிகை துறையில் மிகப்பெரிய ஊழலாக இருந்து வருகிறது .இதுவரையில் தமிழ்நாட்டில் முப்பது சதவீதம் கொடுக்கின்ற பத்திரிகைகள் மட்டுமே பத்திரிகை என்று செய்தி துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பத்திரிகை பற்றிய அனுபவம் மிக மிக குறைவு. இப்படிப்பட்ட பத்திரிகைகள் சலுகை விளம்பரங்களை அனுபவிப்பதற்கு கூட தகுதியற்றவர்கள் காரணம், இவர்கள் ஊழல்வாதிகளை மறைமுகமாக பாராட்டி கௌரவிக்கிறார்கள்.
தவிர, அரசியல் மற்றும் நிர்வாகத்தில் நடக்கின்ற ஊழல் ,மோசடிகள் இதுவரை இந்த சலுகை விளம்பரங்களை அனுபவிக்கும் பத்திரிகைகள், எத்தனை வெளிக்கொண்டு வந்துள்ளது? அது பற்றி எத்தனை செய்திகள் வெளியிட்டு இருக்கிறார்கள்? இதை எல்லாம் மத்திய மாநில உளவுத்துறை கண்காணிக்கட்டும். உண்மை அவர்களுக்கே தெரியும்.
மேலும், வெளிக்கொண்டு வந்திருந்தால் நாட்டில் வரியேப்பு, ஊழல் ,மோசடிகள் குறைந்திருக்க வேண்டும். ஆனால், கடந்த 50 ஆண்டுகால ஆட்சியில் அதிகரித்துள்ளது .தவிர ,கோடிக்கணக்கில் இந்த பத்திரிகைகளுக்கு சலுகை விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது வருமான வரித்துறைக்கு தெரிந்து ஒன்று தான்.
மேலும், மத்திய மாநில அரசுகள் சர்குலேஷன் என்ற ஒரு தவறான விதிமுறையை வைத்து இந்த பத்திரிகைகளுக்கு சலுகை விளம்பரங்கள் கொடுத்து வருகிறது .இதுதான் மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து பத்திரிகைகளை வரைமுறைப்படுத்தி, இந்த சலுகை விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று செய்திகளை வெளியிட்டு போராடி வருகிறது. ஆனால், செய்தி துறை இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒருபுறம் நாட்டின் ஊழல் மற்றும் ஊழல்வாதிகள் அதிகரித்துக் கொண்டிருக்க மறைமுகமான ஆதரவு அளித்து வருகிறது. அதனால், தான் இன்று சமூகத்தில் சொத்து குவிப்பு அரசியல் மற்றும் நிர்வாகத்தில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. இதையெல்லாம் வருமான வரித்துறை கண்காணிக்க வேண்டும். மத்திய மாநில உளவுத்துறை கண்காணிக்க வேண்டும்.
மேலும் தமிழ்நாட்டின் கடன் கூடிக் கொண்டே போகிறது. ஆனால், அரசியலில் உள்ளவர்கள் சொத்துக்கள் அதிகரிக்கிறது. வருமானம் பெருகுகிறது. ஆனால், மக்களுடைய வருமானம் ,வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது. விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. சாமானிய மக்கள், நடுத்தர வர்க்கம் ஒரு வீடு கட்டுவதற்குள் அவர்கள் படும் துயரம் மிகவும் வேதனையானது. அந்த அளவுக்கு கட்டுமான பொருட்களின் விளைவு உயர்வு இரு மடங்கு அதிகரித்துள்ளது.
தவிர, தங்கத்தின் விலை ஏழை எளிய நடுத்தர மக்கள் வாங்கி உபயோகப்படுத்த முடியாத நிலைமைக்கு வந்துவிட்டது. இதனால் எத்தனையோ குடும்பங்களின் பெண்களுக்கு கல்யாணம் என்பது கேள்விக்குறியாகி நிற்கிறது?
அதனால், தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்கின்ற அல்லது வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ,அவர்களுடைய சொத்து கணக்கு அவசியம் வருமான வரித்துறை, மத்திய மாநில உளவுத்துறை ஆய்வு செய்து வருமான வரித்துறைக்கு இவர்களுடைய சொத்து கணக்கை சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான், தமிழ்நாட்டின் கடன் சுமை குறையும். விலைவாசி குறையும். ஏழை எளிய நடுத்தர மக்கள் மற்றும் உழைப்பவர்கள் முன்னுக்கு வர முடியும்.
இல்லையென்றால், தமிழ்நாட்டில் கொள்ளை அடிப்பதும் ,ஊழல் செய்வதும், திறமையாகி, புத்திசாலி ஆகி சட்டப்படி இதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதை முக்கிய செய்தியாக, இந்த செய்தியை வருமான வரித்துறை ,மத்திய உளவுத்துறை ,மாநில உளவுத்துறை, வருமான வரித்துறை மத்திய அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் முக்கிய கோரிக்கை.