நாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி நிவாரணம் கேட்டு விவசாயிகள் உடல்களுடன் போராட்டம் .

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஈரோடு மாவட்டம்.
காங்கேயம்: காங்கேயம் நகராட்சி மூன்றாவது வார்டு தொட்டியபட்டி, அம-ராங்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி மோகன்குமார், 62; தனது தோட்டத்தில், 40 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பட்டியில் ஆடுகளை அடைத்து சென்றார். நேற்று காலை பட்டிக்கு சென்று பார்த்த-போது, 15 ஆடுகள், 15 குட்டிகள் இறந்து கிடந்தன.காங்கேயம் நகராட்சி வருவாய் ஆய்வாளர், கால்நடை மருத்து-வர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர் இறந்த ஆடுகளை பரிசோதித்தார். உயிருக்கு போரா-டிய இரண்டு ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இறந்த ஆடுகளின் மதிப்பு, 3 லட்சம் ரூபாய் இருக்கும்.வெறிநாய்கள் கடித்து ஆடுகள் பலியானதை கண்டித்து, பி.ஏ.பி., காங்கேயம் வெள்ளகோவில் கிளை நீர்பாதுகாப்பு சங்க விவசா-யிகள், 200க்கும்மேற்பட்டோர், காங்கேயம் பஸ் நிலையம் எதிரில், இறந்த ஆடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். நக-ராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும். உணவக இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும். தெரு-நாய்களால் பலியாகும் கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.காங்கேயம் தாசில்தார் மயில்சாமி, நகராட்சி கமிஷனர் கனிராஜ், டி.எஸ்.பி., மாயவன் ஆகியோர், பேச்சுவார்த்தை நடத்தினர். தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதிய-ளிக்கவே கலைந்து சென்றனர்.மேலும், நேற்று காங்கேயம் அருகே பொத்திபாளையம் கிரா-மத்தை சேர்ந்த விவசாயி மூர்த்திபட்டியில் புகுந்த தெருநாய்கள் கடித்ததில் நான்கு ஆடுகள் பலியாகின. காங்கேயம் தாலுகா பகுதியில் தினமும், தெருநாய்களால் ஆடுகள் பலியாவது தொடர்-வதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *