நீதித்துறையிலும் பத்திரிக்கை துறையிலும் அரசியல் தலையீடு அரசியல் தலையீடு அதிகரித்திருப்பது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் .

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நீதித்துறையில் அரசியல் தலையீடு, அதிகரித்திருப்பதால் நீதித்துறையின் நேர்மைக்கு களங்கம் – மூத்த வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் .

நாட்டில் பத்திரிகை சுதந்திரம் பறிபோய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதுபோல நீதித்துறையின் சுதந்திரமும் அரசியல் தலையீட்டால் பறிபோய்விடும் என மூத்த வழக்கறிஞர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் என்னிடம் கூட எனது பத்திரிகையின் மூத்த வழக்கறிஞர் முத்துசாமி பேசும் போது நீதிமன்றத்தில் அதிக அரசியல் தலையீடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் உச்ச நீதிமன்றத்தில் நடக்கின்ற அரசியல், வழக்கறிஞர்களில் ஒரு பிரிவு பாஜக மீது குற்றம் சுமத்துகிறார்கள் .மற்றொரு பிரிவு காங்கிரஸ் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஆகக் கூடி நீதித்துறை மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.  மேலும் ,இதை காப்பாற்ற வேண்டிய கடமை தலைமை நீதிபதி சந்திர சூட்டுக்கு முக்கியமாக உள்ளது.நாட்டில், 

நீதித்துறை, பத்திரிக்கை துறை இரண்டுமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. இதற்கு காரணம் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடிய ஆட்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் என்கிறார்கள். அதேபோல் பத்திரிக்கைக்கு தகுதியற்றவர்களும் தங்களை பெரிய பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இது இரண்டுமே ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு செய்தியை அனுப்பக்கூட தெரியாதவர்கள் எல்லாம் செய்தியாளர்கள் என்கிறார்கள்.மேலும்,

சமூக அக்கறை இல்லாத வழக்கறிஞர்கள் பணத்தை மட்டும் தான் நினைப்பார்கள். அவர்களுக்கு எந்த வழியில் பணம் வருகிறது என்பது தேவையில்லை. அதில் ஊழல் பணமாக இருந்தால் என்ன? கொள்ளை அடித்தவன் பணமாக இருந்தால் என்ன? அவர்களுக்கு தேவை பணம் . திருடனாக இருந்தாலும், கொள்ளையடிப்பவனாக இருந்தாலும், அவர்களுக்காக பேசுவது தான் அவர்களுடைய வேலை. இது சமூகத்தில் இருக்கின்ற ஒரு பிரச்சனை. ஆனால், அரசியலில் ஊழல்வாதி என்று நிரூபிக்கப்பட்டாலும். அவர்களுக்கு சலுகை காட்ட நீதிபதிகளை சமரசம் செய்வதுதான் இந்த வழக்கறிஞர்கள் வேலை. இந்த வேலைக்கு சென்றால் கொள்ளை அடிப்பவர்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும், கொடுத்து தங்களை நிரபராதி என்று தீர்ப்பை வழங்க கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல்தான் ஒரு வழக்கை போடுவதற்கு, அது எந்தெந்த சட்ட உட்பிரிவுகளில் வருகிறது? அந்த சட்டத்தின் வரைமுறை என்ன? எதுவும் தெரியாது .கோட்டு போட்டுக்கொண்டு நானும் வக்கீல் என்று பந்தா காட்டிக் கொண்டிருப்பவர்கள், சீனியர் வழக்கறிஞர்களுக்கு எடுப்பு வேலை பார்த்துக்கொண்டு, கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு, புரோக்கர் வேலை பார்த்துக் கொண்டு, வண்டிகளில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.அதே நிலைமை தான் பத்திரிக்கையிலும் இருந்து வருகிறது.

அரசியல் கட்சியினருக்கும் ,இரண்டாம் கட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கும்,லெட்டர் பேடு கட்சிகளுக்கும்,பலர் புரோக்கர் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்கள் என்கிறார்கள். அவர்கள் தான் சமூக நீதிக்காக உயிரை கொடுப்பவர்களாகவும், நாட்டில் நடக்கின்ற அநியாயங்களுக்கும் ,ஊழலுக்கு எதிராக போராடுபவர்கள் ஆகவும் பேசிக்கொண்டு, பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள். அதிலும் படிப்பறிவு இல்லாத சமூகங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயம், வன்னியர் சமுதாயம், பழங்குடியின மக்கள் இவர்களுக்கு எல்லாம் அட்வைஸர்கள் போல், ஆளுக்கு தகுந்தார் போல் அட்வைஸ் கொடுத்து, தங்களை அட்வைசர் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இப்படி எல்லாம் பத்திரிக்கைத்துறை கேவலப்பட்டு கொண்டிருக்கிறது. 

மேலும், தற்போது நடைபெற்ற டிஸ்ட்ரிக்ட் மேஜிஸ்ட்ரேட் தேர்வில் குளறுபடி ஏற்பட்டு, அதையும் மறுபரிசலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் அரசியல் தலையீடு தான். இந்த அரசியல் தலையீடு எதனால் நீதிமன்றத்திற்குள் தற்போது நீதித்துறைக்கு அச்சுறுத்தலாக வர காரணம் என்ன ?ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்தின் அமைச்சர்கள், முதலமைச்சர்கள் உடைய ஊழல்களில் சிக்க தவிக்கும் போது, அவர்களை காப்பாற்ற வழக்கறிஞர்கள், தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி நீதிமன்றத்தில் மறைமுக நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர் .

அது எந்தெந்த வகையில் யாரையெல்லாம் எந்த அளவிற்கு இவர்களால் நெருங்க முடியுமோ! அந்த அளவிற்கு நெருங்கி சட்டத்தின் ஓட்டைகள் மூலம் ஊழல் அமைச்சர்களை, எம்எல்ஏக்களை, அரசியல் கட்சியினரை வெளியில் கொண்டுவர, சட்டத்தை வளைக்கும் வேலையை தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.பாவம் அதிகாரிகள் 100 ரூபாய், 200 ரூபாய் லஞ்சம் வாங்கினால் கூட அவர்களை சட்டம் கடுமையாக தண்டிக்கிறது.

 ஆனால், ஆயிரம், 500 கோடி என்று கோடிகளில் கொள்ளை அடித்தால் கூட நீதிமன்றம் அவர்களுக்கு சலுகை காட்டுகிறது. இது ஒரு மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு ஆபத்து. இதனால், நாட்டு மக்களுக்கு என்ன பின் விளைவு ஏற்படுத்துகிறது? என்பதை பற்றி யாரும் சிந்திப்பதில்லை.

 தவிர, அரசியலில் ஊழல்வாதி என்று நிரூபிக்கப்பட்டாலும், அவர்களுக்கு சலுகை காட்ட நீதிபதிகளை சமரசம் செய்வதுதான், இந்த வழக்கறிஞர்கள் வேலை .மேலும்,தமிழ்நாட்டில் அமைச்சர் பொன்முடி வழக்கு, செந்தில் பாலாஜி வழக்கு , டெல்லியில் முதலமைச்சர் கெஜரிவால் கைது, இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழல் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ,நீதித்துறையில் தங்களுக்கு வேண்டிய ஆதாயத்தை தேடுவதற்கு தான் இப்படிப்பட்ட நெருக்கடிகள் வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்திற்கு ஏற்பட்டுள்ளது.

 இவர்கள் நீதிக்காக போராடுபவர்கள் அல்ல, பணத்திற்காக சட்டத்தையே விலை பேசுபவர்கள் தான், இப்படிப்பட்ட வழக்கறிஞர்கள். இவர்கள் மாநிலத்துக்கு, மாநிலம் இப்படிப்பட்ட கூட்டங்கள் அரசியல் செல்வாக்குடன் பண பலத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் .இது நீதித்துறைக்கு கலங்கத்தை, அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மேலும் மக்களின் வாழ்க்கை போராட்டமாகவும், இவர்களுடைய அராஜகங்களை தட்டி கேட்க முடியாமல் இன்று சமூக ஆர்வலர்கள் நீதிக்காக பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தேவையற்ற வேலை.எனவே 

நீதித்துறை அரசியல் கட்சியினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் சட்டத்தை வளைக்கும் வேலையில் ஈடுபட்டால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அரசியல் தலையீடு இல்லாமல், நீதிமன்றத்தின் மாண்பை காத்து, மக்களுக்கு சட்ட பாதுகாப்பும், ஊழல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், தமிழ்நாடு சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், எங்களது பணிவான கோரிக்கை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *