நீதித்துறையில்!சட்ட போராட்டம் நடத்துவதற்கு பதிலாக, அரசியல் போராட்டமா?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நீதித்துறையில் அரசியல் தலையீடு எந்த அளவுக்கு நீதித்துறையின் மாண்பு சீர்குலைத்துள்ளது ? என்பது திமுக வழக்கறிஞர்களின் போராட்டம் அரசியல் கட்சி போராட்டம் போல் ஆக்கிவிட்டார்கள்.

நீதித்துறையில் சட்டப் போராட்டம் தான் இருக்க வேண்டுமே ஒழிய, இங்கே அரசியல் கட்சி போராட்டம் நடத்துவதற்கு இடமில்லை. ஆனால் இவர்கள் நீதித்துறையில் இந்த வழக்கறிஞர்கள் அரசியல் கட்சி போராட்டம் போல, கருப்பு கோட்டுகளை போட்டுக் கொண்டு, கத்துவது, இவர்களுடைய தகுதியிண்மை .

ஒரு தகுதியான வழக்கறிஞர்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து ,சட்டத்தின் மூலம் போராடி அதை ஜெயிக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இது போல் ரோட்டில் அரசியல் கட்சியினர் போல் கத்துவதை விரும்ப மாட்டார்கள். மேலும்,

நீதித்துறையில் சட்ட வல்லுநர்கள் தகுதி வேறு. பட்டம் வாங்கிவிட்டு, சட்டம் சரிவர படிக்காமல் நானும் வழக்கறிஞர் தான் , அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால்,இவர்களுடைய தகுதி பட்டம் வாங்கி விட்டு ,கத்துகின்ற தகுதி. மேலும்,சட்டம் படித்த வல்லுனர்கள் சட்டத்தின் மூலமே நீதியை நிலை நாட்டுபவர்கள். அவர்கள் வீதிக்கு வர மாட்டார்கள். அப்படியே வந்தாலும், அது எங்கு போய் எதை சேர்க்க வேண்டுமோ, அதை சேர்ப்பார்கள்.மேலும்,

நீதித்துறையில், எப்போது அரசியல் கட்சி வழக்கறிஞர்களை நீதிபதியாக நியமித்து அவர்களோ, அப்போதே நீதி துறையின் மாண்பு அடிபட்டு போய்விட்டது. ஆனால் மெரிட்டில் பல வழக்குகளை வெற்றி பெற்று வந்த நீதியரசர்கள் சட்டம் படித்த வல்லுநர்கள் . இப்போது அரசியல் கட்சி பின்புலத்தில் நீதிபதியானவர்கள் அரசியல்வாதிகளுக்கு சாதகமான தீர்ப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்படும் பரவலான கருத்து.மேலும்,

தமிழ்நாட்டில் நீதித்துறையில் நடந்து கொண்டிருக்கும் போராட்டமே அது தான். நீதிபதி ஜி .ஆர் .சாமிநாதன் பற்றி விசாரித்த போது அவர் மெரிட்டியில் தான் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் சித்தாந்தமும், வேதாந்தமும் எப்படி வேண்டுமானாலும், இருக்கட்டும்.

ஆனால், நீதித்துறையில் சட்டப்படியும், மனசாட்சி படியும் ,நீதி வழங்கி இருக்கிறாரா ?என்று தான் ஒரு நீதிபதியின் முக்கிய தீர்ப்பு இருக்க வேண்டும். மக்களுக்குத் தெரிந்த ஊழல்வாதிகளை காப்பாற்றும் விதமாக தீர்ப்பு இருக்கக் கூடாது. அந்த தவறை ஜி .ஆர் .சுவாமிநாதன் செய்யவில்லை. அதனால் ,தான் அவர் மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறதா? என்று பொதுமக்கள் மத்தியிலும் , நீதித்துறை வட்டாரத்திலும்,பேசப்படும் தகவல்.

மேலும்,இங்கே வாஞ்சிநாதன் வழக்கறிஞர், நீதிபதி ஜி .ஆர் .சாமிநாதனைப் பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகார் .இவர் சோசியல் மீடியாவில் போட்டதால் தான் தெரிந்தது. தவிர, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் இதை சட்ட போராட்டமாக நடத்திருக்க வேண்டும். ஆனால், அரசியல் போராட்டமாக ஆக்குகிறார்கள்.மேலும்,

இதை ஏன் ?இங்கே சொல்ல வேண்டிய அவசியம்? சட்டம் படித்தவர்கள் நீதித்துறையில் எந்த இடத்தில் யார்? தவறு செய்துள்ளது ?என்பதை சட்டத்தின் வாயிலாக அதை வெளிக்கொணர முற்படுவார்கள். ஆனால், வாஞ்சிநாதன் சட்டம் படித்தாரே ஒழிய ,சட்டத்தின் மூலம் அதை வெளிக்கொணர இவருடைய தகுதி! முடியாத ஒரு தகுதி.

மேலும்,நீ யாராக இருந்தால் என்ன? திமுக, ஆர். எஸ். எஸ், பிஜேபி இவர்கள் அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் . அரசியல் கட்சியை இங்கே எதற்கு உள்ளே கொண்டு வருகீறிர்கள்? இது சட்ட போராட்டம். அரசியல் போராட்டம் அல்ல.மேலும், இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம்,

திமுக வழக்கறிஞர் வில்சன் தன்னுடைய திறமையால், இந்தப் பிரச்சினையை உச்ச நீதிமன்றத்தில் சாதித்ததை ,இங்கே ஜி .ஆர் .சாமிநாதன் முறியடித்து விட்டார் . இந்த மோட்டிவேஷன் அடிப்படையில் ஜி. ஆர். சுவாமிநாதனினை பழிவாங்க கிளம்பி இருக்கும் இது ஒரு ஆயுதமோ, என்று நீதித்துறை வட்டாரம் பேசி வருகிறது.மேலும்,

இப்படிப்பட்ட அரசியலுக்கு நீதித்துறையில் சட்டத்தின் மூலம் இதற்கு சரியான தீர்ப்பு வழங்கினால், இப்படிப்பட்ட அரசியல் தலையீடு, இனி நீதிமன்றத்திற்குள் வராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *