நேர்மையான காவல்துறை அதிகாரி சுந்தரேசன் சஸ்பெண்ட் ,திமுக ஆட்சியில்! சட்டம், ஒழுங்குக்கு மிகப் பெரிய சவால்களா?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மயிலாடுதுறை மாவட்ட டி .எஸ்.பி சுந்தரேசன் தமிழக முழுதும் மக்களுக்கு ஒரே நாளில் அறிமுகம் ஆகிவிட்டார்.

ஒரு அதிகாரி தான் நிரபராதியாக இருந்தால் தான் ,அவ்வாறு வெளிப்படையாக பேச முடியும். அதிலும் காவல்துறையில் இவ்வளவு வெளிப்படையாக பேசிய ஒரு அதிகாரியை இப்போதுதான் பார்க்கிறேன்.

இவரை சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்ப சொன்ன காரணம் கூட சட்டப்படி அது செல்லுமா ?என்பது கூட தெரியவில்லை. ஏனென்றால் அவர் காவல்துறையில் குழப்பத்தை ஏற்படுத்த பேசுவதாக சொல்லி மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி இவரை பணி நீக்கம் செய்து விட்டார்.

இருப்பினும், நேர்மையாக பணியாற்றிய, அதிகாரிகளுக்கு உண்மையிலேயே அந்த மன உளைச்சல், மன வேதனை, புலம்பல் எல்லாமே இருக்கத்தான் செய்கிறது ..அது மனித இயல்பு .

ஏனென்றால் தான் நேர்மையாகவும் ,மனசாட்சி படியும் ,வேலை செய்து நமக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கவில்லையே, நமக்கு கொடுக்க வேண்டிய மரியாதை, மதிப்பு இதையெல்லாம் காவல்துறையில் தரவில்லையே என்பது அவர் மட்டுமல்ல ,அவரைப் போன்ற எத்தனை பேர் இருந்தாலும் ,அப்படித்தான் எதிர் பார்ப்பார்கள். இது காவல்துறை மட்டுமல்ல, மற்ற எல்லா துறைகளிலும், இப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த வேதனை இருக்கத்தான் செய்யும்.

ஏன்? எங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்களுக்கும் ,அதே நிலைமை தான். அந்த மன வேதனை, மனக்குமுறல் ,இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் காலம் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அது சட்டத்திற்கு கட்டுப்படாது அது என்ன நினைக்கிறதோ ,அது கண்டிப்பாக நிறைவேற்றும். அதற்கு தடை யாருமே கிடையாது. காலத்தை வென்றவர் ஒருவரும் இல்லை. அப்படி வெல்பவர்கள் ஞானியாகவோ அல்லது மகான்களாகவோ மட்டும் தான் இருக்க முடியும்.

சாமானிய மனிதர்களால் ,காலத்தை வெல்ல முடியாது. சுந்தரேசன் டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஒருவேளை இந்த காவல்துறையை விட்டு ,விட்டு அரசியலுக்கு வந்தால் ,நிச்சயம் அவர் ஒரு பதவிக்கே வந்து விடுவார். அதுவும் நடக்கலாம். ஏனென்றால் இன்றைய அரசியலுக்கு நேர்மையான காவல்துறை அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள்.

பல அயோக்கியர்கள், அடாவடி பேர்வழிகள், கொள்ளைக்காரர்கள் ,மத்தியில் நேர்மையான காவல்துறை அதிகாரிகள் ,அரசியலுக்கு வந்தால், நிச்சயம் இந்த சமூகம் வரவேற்கும்.

என்னடா இது? இந்த செய்தி சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது .என்று படிப்பவர்கள் நினைக்கலாம் .ஆனால், மக்கள் அதிகாரம் பத்திரிகை ,இந்த சமூகத்திற்காக ,சமூகத்தின் குரலாக ஒலிக்க் கூடியது.

இன்றைய காலகட்டத்திற்கு அரசியல் அடித்தட்டு மக்களிடம் ஏமாற்றமாக இருக்கிறது. அரசியல் என்றால் ,புரியாத மக்களிடம் அலட்சியப்படுத்துவதும் ,ஏமாற்றப்படுவதும், வேதனையில் புலம்பும் நடுத்தர மக்கள் எவ்வளவு பேர்? ஆனால், யார் வந்தாலும் பரவாயில்லை, என்று நினைக்கின்ற மக்கள் செய்யும் தவறு ஒரு புறம் இருந்தாலும் ,இதனால், நடுத்தர வர்க்கம் இந்த அரசியலால் ,அதிகம் பாதிக்கப்படுகிறது.மேலும்,

அரசியல் கட்சி ஒவ்வொன்றும் ,போலி வெத்து விளம்பரங்களை தான் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது. எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களை இது போன்ற ஆயிரம் கார்ப்பரேட் கம்பெனி பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் நடத்தினாலும் ,கவலைப்படுபவன் நான் அல்ல.

உண்மை எங்கே இருக்கிறது ?என்று தேடுபவன் நான். அதனால் உண்மையைத் தேடி போகின்ற மக்களில் நானும் ஒருவன். அதனால், பொய்யை தூக்கி எரிந்து கொண்டே இருப்போம். மக்களின் சுயநலம் மக்களை தான் பாதிக்கிறது.

மேலும் ,டிஎஸ்பி சுந்தரேசன் திமுக ஆட்சி இருக்கும் வரை அவரால் உள்ளே வர முடியாது. காரணம் ஒரு பக்கம் அது அரசியல் ஆகிவிட்டது. காவல்துறை அதிகாரிக்கே திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா? என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமை, அரசுக்கு வந்து விட்டதால் !அவரை நிச்சயம் இந்த ஆட்சி இருக்கும் வரை அவர் உள்ளே வர முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *