திருவள்ளூர் மாவட்டம், அதிக அளவில் அரசியல் கட்சி பிராடுகள், மோசடி பேர்வழிகள், கிரிமினல்கள், தீவிரவாத கும்பல்கள், ஓட்டு மொத்த புகலிடமாக உள்ளது. மேலும், வருவாய்த்துறை அதிகாரிகள் பணம் கொடுத்தால் பட்டாவை மாற்றி போடுவார்கள். வாரிசு இருந்தும் இல்லாமல் செய்து விடுவார்கள். ஏனென்றால், இவர்களுக்கு பக்க பலமாக சங்கம் ஒன்று அமைத்துக் கொண்டு போராடிக் கொண்டிருப்பார்கள். அந்தப் போராட்டத்திற்கு பயந்து, மாவட்ட ஆட்சியர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவார்கள்.
இது என்ன அரசியல் கட்சியா? இவர்கள் போராடுவதற்கு? அப்படிதான் ஜெயலலிதா ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அது ரொம்ப உச்சகட்டமாக இருந்தது. எல்லோரையும் சஸ்பெண்ட் செய்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் பொலிட்டிக்கல் பவர் தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சித் தலைவரும் இதுவரை இருந்ததில்லை. அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள், மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து உள்ளே வந்தார்கள். இந்த திறமை முதல்வர் மு க ஸ்டாலினிடம் இருக்குமா? என்பது சந்தேகம்.இது தெரியாமல்,வருவாய் துறை அதிகாரிகள் அதிக ஆட்டம் போடுகிறார்கள்.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் நாயுடு சமூகத்தை சேர்ந்த ஒரு சங்க நிர்வாகி, இது போன்ற வேலைகளுக்கெல்லாம் உறுதுணையாக இருப்பதால் ஆட்டம் போடுகிறார்களா ? என்கின்றனர் பொதுமக்கள். தவிர,புறம்போக்கு நிலங்களை சர்ச்சுக்காக, தர்காவுக்காக, கோயில்களுக்காக, சட்டத்திற்கு புறம்பாக மடக்கி வைத்துக் கொண்டு, விற்பனை செய்கிறார்கள் .அதற்கும் வருவாய்த்துறை திருவள்ளூர் மாவட்டத்தில் உடந்தையாக உள்ளது.
இது தவிர, வாரிசு சான்றிதழ் கொடுக்கும்போது, சிலர் அந்த ஊரில் இல்லை என்றால், அவர்கள் வாரிசு இல்லையா? மேலும், எதிர் தரப்பு பணம் கொடுத்தால், அவர்கள் பெயரை விட்டு விடுவார்களா? அப்படி கொடுக்கப்பட்ட வாரிசு சான்றிதழ் மீது நடவடிக்கை எடுக்க ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் மீது குமார் வருவாய் கோட்ட ஆட்சியரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளித்துள்ளார்.
இவர் பூண்டி ஒன்றியம் போந்தவாக்கம் கிராமத்தில் சேர்ந்த குமார் வயது 43 அவருடைய தகப்பனார் முனுசாமி கடந்த ஆண்டு 13/4/2022 அன்று இறந்ததாக தெரிவிக்கின்றனர். மேலும், வறுமையின் காரணமாக ஆந்திர மாநிலம் தடாவிற்கு குமார் மற்றும் அவரது தம்பி சிவா இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர் .அவர்கள் அங்கே பிழைப்பு தேடி வேலை செய்து வருகிறார்கள். இது அந்த ஊர் கிராம மக்களுக்கு தெரியும்.
இருப்பினும் ,இதை பயன்படுத்தி குமாரின் அண்ணன் யுவராஜ் ,தங்கை பூர்ணிமா, குமாரின் தாயார் பச்சம்மாள் இவர்கள் மூவரும் கூட்டாக இணைந்து 2022 ஆம் ஆண்டு வட்டாட்சியராக இருந்த ரமேஷ் இவர்களுக்கு 15. 7 .2022 ல் வாரிசு சான்றிதழ் கொடுத்துள்ளார் என முனுசாமியின் மகன்கள் ஆன குமாரும், சிவாவும் தெரிவிக்கும் குற்றச்சாட்டு.
மேலும், இப் பிரச்சினையை குமார் மற்றும் அவரது தம்பி சிவா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் கோட்டாட்சியர் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
அதாவது எங்களுக்கு தெரியாமல் வாரிசு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது,உரிய விசாரணை நடத்தி , போலியான வாரிசு சான்றிதழ்கள் வழங்கிய வட்டாட்சியர், அதற்கு உடனையான விஏஓ ,ஆர் ஐ, தலையாரி,மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும்,வாரிசு இருந்தும் இல்லை என்று சொத்துக்களை அபகரிப்பதற்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது, வாரிசுதாரர்கள் எவ்வளவு கோபப்படுவார்கள்? அவர்களுக்கு தற்போது அந்த வாரிசு சான்றிதழ் கேன்சல் செய்துவிட்டு, வேறு தருகிறோம் என்கிறார்களாம். இருப்பினும், பணத்திற்காக ஒருவர் பிள்ளை இல்லை என்று சொன்னால், அவருக்கு எவ்வளவு கோபமும், ஆத்திரமும் இருக்கும்? அது குமாருக்கும், சிவாவுக்கும் உள்ளது.
அதனால் துறை ரீதியாக இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர் . இதனால், பொதுமக்களின் மன உளைச்சல், பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது? என்பதை உயர் அதிகாரிகள் இனியாவது தெரிந்து நடவடிக்கை எடுப்பார்களா? பாதிக்கப்பட்ட குமார் மற்றும் சிவா .