பத்திரிகைகளின் சுயநலம், அரசியல் கட்சிகளின் சுயநலம், மக்களின் சுயநலம், நீதிமன்றத்தின் சுயநலம், அதிகாரிகளின் சுயநலம் நாடு விளங்குமா ?

அரசியல் சமூகம் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய அரசு செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

இன்றைய கார்ப்பரேட் பெரிய பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் மக்கள் நலனுக்காக செய்திகளை கொடுக்கிறார்களா?  அல்லது இவர்களுடைய தொலைக்காட்சியிலும், பத்திரிகை இணையதளத்திலும் பார்வையாளர்கள் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக எந்த கேள்வி கேட்க வேண்டும்?  எந்த கேள்வி கேட்கக் கூடாது?  என்ற சமூக அக்கறையே இல்லாத இவர்கள் எப்படி பத்திரிகையாளர்கள் என்கிறார்கள்? மேலும்,

அண்ணாமலை பிஜேபியின் மாநில தலைவர் என்ற முறையில் நீங்கள் எல்லாம் பேட்டி எடுக்க செல்கிறீர்கள். அவரை நீங்கள் மாநில தலைவராக  இல்லாவிட்டால் அல்லது உங்களை எடுத்து விட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? இது எல்லாம் உங்களுக்கு தேவைதானா? அண்ணாமலை எடுத்தால் என்ன? தலைமை எடுக்க விட்டால் என்ன? அதனால், பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு? எதுவும் இல்லை .

அப்படி இருக்கும் போது அந்த கேள்வி கேட்க வேண்டிய அவசியம் என்ன? இவையெல்லாம் பெரிய பத்திரிக்கை என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை? எந்த கேள்வி கேட்க வேண்டும்? எந்த கேள்வி கேட்கக் கூடாது? என்ற தகுதி கூட இல்லை. அந்த கேள்வியை கேட்பதற்கு பதிலாக அரசியல் கட்சியினராக சென்று கேட்கலாம் .அல்லது நீங்கள் கட்சி பத்திரிக்கை அல்லது கட்சி தொலைக்காட்சி சார்பில் சென்று கேட்கலாம். அல்லது எதிர்க்கட்சி பிரதிநிதியாக போய் கேட்கலாம். இது எல்லாம் தகுதியான பத்திரிகையாளர்கள் கேட்கின்ற கேள்வி அல்ல.

பத்திரிகையாளர்கள் கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள் நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது .மக்கள் எவ்வளவோ பாதிக்கப்படுகிறார்கள். எத்தனையோ அநீதிகள் நடக்கிறது. அதைப்பற்றி எல்லாம் கேள்வி கேட்கவில்லை. அண்ணாமலை என்ற ஒரு அரசியல் கட்சி தலைவர் மீது ஏன் இப்படிப்பட்ட ஊடகங்களின் சுயநலம்?  இந்த சுயநலம் பத்திரிக்கை துறைக்கு அவமானம். எதிரானது. இது நடுநிலை என்று சொல்லிக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றும் வேலை .

மேலும், இப்படிப்பட்ட கேள்விகளை கேட்பதால், அதற்கும் ஒருவர் பொறுமையாக இருந்து பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் உள்ளதா?  தவிர ,அண்ணாமலை இடம் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது டென்ஷன் ஆகிறார். அது அவருடைய மைனஸ். அதை வைத்து தேவையில்லாத கேள்விகளை கேட்பது புத்திசாலி ,அறிவாளி பத்திரிக்கையாளர்களின் ஏமாற்று வேலை . நாட்டில் அரசியல் ரவுடிகள் , பொரிக்கிகள், கிரிமினல்கள், அரசியல் கட்சிகளுக்கு பொறுப்பாளர்களாக வருகிறார்கள். அதனால், தமிழ்நாட்டின் கேவலமான அரசியல் நடந்து கொண்டு வருகிறது.

ஆனால், எப்படியோ பிஜேபி ஒரு ஐபிஎஸ் படித்த ஒருவரை அரசியலுக்கு அழைத்து வந்துள்ளது .அதற்கு பத்திரிகையாளர்கள் வரவேற்க வேண்டும். அதேபோல் படித்தவர்கள், பண்பாளர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள், சமூக அக்கறை உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள், எல்லோரும் அரசியலுக்கு வர வேண்டும். அவர்களுக்கு பத்திரிகைகள் ஆதரவு தந்து, அவர்களை ஊக்குவித்து மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை அரசியலை எப்படி கொண்டு செல்ல வேண்டும்? என்பதை பத்திரிகைகள்தான் தெரிவிக்க வேண்டும். பத்திரிகைகளே சுயநலமாக, அரசியல் எதிர்க்கட்சியாக அல்லது ஒரு செய்தியாளர் எதிர்க்கட்சியினராக கேள்வி கேட்கக் கூடாது.

 மேலும், பத்திரிகையாளர் என்றால் ஒருவரை எந்த கேள்வியும் கேட்பது பத்திரிக்கை துறைக்கு கேவலம். இதேபோல்தான், ஒரு சில பத்திரிகைகளில் அல்லது சமூக ஊடகங்களில் சீமான் , விஜயலட்சுமி உறவு முறையில் எத்தனை முறை கரு கலைத்தார்? இப்படி எல்லாம் செய்திகள் போட்டுக் கொண்டு, மக்கள் அதை அதிக அளவில் பார்ப்பார்கள். இதற்காக செய்தி, பத்திரிக்கை என்று சொல்லிக் கொள்வது வெட்கக்கேடு.

 இதற்கெல்லாம் அரசு அடையாள அட்டை, இதற்கெல்லாம் சலுகை, விளம்பரங்கள் என்பது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது ஒரு காலம் விவரம் அறிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்க்கிறார்கள். ஏற்றுக் கொள்வதில்லை என்பதை புரிந்து கொண்டால் சரி.மேலும்,அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியத்தை தவிர்த்து அண்ணாமலையின் அரசியல் நாகரீகத்தை பின்பற்றுவது நல்லது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *