பத்திரிகைகளின் விதிமுறைகளை மாற்றாமல் சமூக மாற்றத்தை உருவாக்க முடியாது.

அரசியல் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மத்திய அரசின் பட்ஜெட் எல்லா தரப்பும் வரவேற்கும் பட்ஜெட் என்றாலும், சமூக நன்மைக்காக போராடும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எந்த சலுகையும் இல்லை. தவிர,

மத்திய மாநில அரசுகள், சாமானிய பத்திரிகைகளின் வளர்ச்சி தான், சமூக நன்மைக்கான வளர்ச்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும்,கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகளுக்கு இல்லையென்றாலும், இந்த சாமானிய, நடுத்தர, சிறிய பத்திரிகைகளுக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்திருக்கலாம். ஆனால் அறிவிக்காதது உண்மையிலே அது வேதனை தருகிறது.

 மேலும், பத்திரிகை என்றால் ,அது கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் தான் என்று அரசியல் கட்சிகள் நினைக்கிறார்கள் .அது மிகப் பெரிய தவறு .சர்குலேஷன் என்பது சலுகை, விளம்பரத்தால் இவர்களுக்கு பெரியளவில் பத்திரிகையின் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள அரசாங்கம் ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது.

 அதே வாய்ப்பு இந்த சிறிய மற்றும் நடுத்தர பத்திரிகைகளுக்கு மறுக்கப்படுகிறது. இது பற்றி இன்னும் மத்திய மாநில அரசுகள் ஒரு தெளிவான கருத்தும், புரிதலும் இல்லாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு தேவை யார் அதிக அளவில் நம்முடைய செய்திகளை மக்களிடம் விளம்பரப்படுத்துகிறார்கள்? இதை மட்டும் தான் மத்திய மாநில அரசுகள் பார்க்கிறதே ஒழிய, அதனால் மக்களுக்கு என்ன பயன்? என்பதை யாருமே சிந்திக்கவில்லை. அந்தப் பயன்களின் உண்மையான நிலை என்ன தெரியுமா? நாட்டில் ஊழல்கள், தீவிரவாதம், ரவுடிசம் ,அரசியலில் ரவுடிகள், மோசடிகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, இவையெல்லாம் ஒழிக்கப்பட்டு இருக்க வேண்டும். அல்லது குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏன் இல்லை? இதற்கு மத்திய மாநில அரசுகள் பதில் சொல்ல முடியுமா?

மேலும், மத்திய அரசால் பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகளின் இணையதளங்களை அங்கீகரிக்க வேண்டும் அது காலமாற்றத்தின் பத்திரிகை துறையின் முக்கிய வளர்ச்சி. மேலும், இன்று பத்திரிகை என்பது ஒரு போட்டி உலகம். அதில் போட்டியாளர்களாகத்தான் இன்றைய பெரிய, சிறிய சொல்லிக் கொள்ளும் பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும் இன்றைய பெரிய பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் தினத்தந்தி தினமலர், தினமணி ,தினகரன் இவையெல்லாம் அக்காலத்தில் இதற்கு அவ்வளவு போட்டிகள் இல்லை .அந்த போட்டி என்பது பத்திரிகைகள் மிக மிகக் குறைவு. இன்று பத்திரிகைகள் அதிகம். இதில் இவர்களாலே இன்று ஜெயிக்க முடியவில்லை.

 காரணம்  என்னவென்றால், யாரும் ஓடாத போது ஓரிருவர் ஓடி ஜெயித்து விட்டால், அது எப்படி வெற்றியாகும்? அதுதான் இவர்களின் வெற்றி .மேலும் தினத்தந்தி ஒரு காலத்தில் தலை மீது சுமந்து விற்ற பத்திரிகை. தினமலர் டீக்கடைகளில் இலவசமாக போட்ட பத்திரிகை. அப்படிப்பட்ட பத்திரிகைகள் இன்று எப்படி இவ்வளவு வளர்ச்சி பெற்றது? அந்த கேள்வி பத்திரிக்கை உலகில் உள்ள அனைவருக்கும் ஏழும் அல்லவா?

அதுதான் மத்திய மாநில அரசின் சலுகை, விளம்பரங்கள், இப்போதாவது ஓட்டப்பந்தயத்தில் எப்படி ஜெயித்தார்கள்? என்பது இந்த பத்திரிகை உலகம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், சாமானிய பத்திரிகைகளார்களின் பத்திரிகைகளை பற்றி பேசுவதற்கு, குறை சொல்வதற்கு இவர்களுக்கு தகுதி இல்லை. மேலும், இவர்களுடைய மறைமுக அரசியல் தான், இன்று இந்த பத்திரிகைகளுக்கு சலுகை விளம்பரங்கள் அரசியல் பின் புலத்தில் தடுக்கப்படுகிறது. இது தான் கார்ப்பரேட் பத்திரிகை அரசியலா? இதன் காரணமாக இன்று பல பத்திரிகைகள் காணாமல் போய்விட்டது.

நூற்றுக்கணக்கான பத்திரிகைகள் போராடிக் கொண்டிருக்கின்றது. இவையெல்லாம் ஒழித்து விட்டால், நம்முடைய அரசியல் வியாபாரமும், பத்திரிகை வியாபாரமும் நன்றாக இருக்கும் .இதுதான் இவர்களின் முக்கிய போட்டி. இதில் எல்லோரும் ஒரே நிலையில் தான் இருக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

 ஆனால் அரசாங்கம் இதற்கு எப்படி பக்கபலமாக இருக்கிறது? இதுதான் எங்களின் முக்கிய கேள்வி? அரசாங்கம் எதை வைத்து இதை தீர்மானிக்கிறது? அதன் அடிப்படையே தவறான ஒன்று. அந்த தவறான அடிப்படையை வைத்து தீர்மானிப்பது தான் மிகப் பெரிய தவறு. பத்திரிகை என்பது அறிவு சார்ந்த தளம். அது சர்குலேஷன் தளமாக மாற்றி இருப்பது மிகப்பெரிய தவறு. அதை மாற்றுவது மத்திய மாநில அரசுகளின் முக்கிய கடமை.

 சமூகத்தில் சர்குலேஷன் அதிகமாக இருந்தால், ஒரு பத்திரிகையை 10 லட்சம் பேர் பார்க்கிறார்கள் என்றால், அந்த 10 லட்சம் பேருக்கு என்ன சமூக விழிப்புணர்வு, இந்த பத்திரிகைகளால் ஏற்பட்டுள்ளது? அதைப்பற்றி மத்திய மாநில அரசுகள் விளக்கம் தர முடியுமா? அரசு செய்தியை போடுவது சமூக விழிப்புணர்வு அல்ல. இது சமூகத்தின் விழிப்புணர்வு கருத்துக்கு எதிரானது.

மேலும், சட்டம் என்பது சமூக மாற்றத்திற்கான அடையாளமாக இருக்க வேண்டும். அது சமூகத்தை முட்டாளாக்கும் வேலைக்கு சர்குலேஷன் சட்டம் இருக்கிறது. இதை மாற்றுவது தான் சமூக முன்னேற்றத்திற்கான அடித்தளமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும் கருத்தியல், கருத்து சுதந்திரம், சமூக நன்மை, தீமை இவையெல்லாம் உள்ளடக்கிய கருத்தை சமூக ஆய்வாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், மற்றும் பத்திரிகை பற்றிய ஆராய்ச்சியாளர்கள்,கருத்து பற்றி ஆய்வு செய்து முடிவு எடுப்பது தான் சமூக மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் அடிப்படை .

அது உண்மையான செய்திக்கும், கருத்துக்கும், கட்டுரைக்கும், மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொரு பத்திரிகையும், ஆய்வுக்கு உட்படுத்தி அதன் மூலம் தேர்வு செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இன்றைய பத்திரிக்கை துறை உள்ளது, என்பதை புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *