பத்திரிகையாளர்களுக்காக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையை சமூக நலன் பத்திரிகையாளர்கள் வரவேற்றுள்ளனர் .

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் பத்திரிக்கை துறை மற்றும் பத்திரிக்கையாளர்கள் கடும் போட்டியிலும், போராட்டத்திலும் இருந்து வருகின்ற ஒரு துறை. இந்த துறையில் தமிழ்நாட்டில் பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அறிவிக்கப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், எந்த நோக்கத்திற்காக நலவாரியம் ஆரம்பிக்கப்பட்டஆரம்பிக்கப்பட்டதோ, அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

 மேலும், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கான மிகச் சிறிய உதவிகள் கூட இன்னும் வழங்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் பணிக் காலத்தில் உயிரிழக்கும் பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 5 லட்சம் குடும்ப நல நிதி, ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ரூபாய் 12000 மாத ஓய்வூதியம் உள்ளிட்ட பல உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன.மேலும்,

 இவை தவிர்த்து, பத்திரிக்கையாளர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி உதவி உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பயனாக தமிழ்நாட்டில் பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் கடந்த 2021 ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த ஆட்சியில் நலவாரியம் அமைக்கப்பட்டு, அதன் அலுவலகம் கலைவாணர் அரங்கில் திறக்கப்பட்டது அவ்வளவுதான். மேலும்,

நல வாரியத்தின் மூலம் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு கல்வி, திருமணம், மகப்பேறு உள்ளிட்ட ஆறு வகையான உதவித்தொகைகள் ரூபாய் 500 முதல் 6000 வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியானதோடு சரி. இரண்டு ஆண்டுகளாகியும், இதுவரை எதுவும் பத்திரிகையாளர்களுக்கு கிடைக்கவில்லை .மேலும், இந்த உறுப்பினர் அட்டை கூட கார்ப்பரேட் நிறுவன பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இது பற்றி அன்புமணி ராமதாஸ் தெரிவிக்கவில்லை .

மேலும், சமூக நலன் சார்ந்த பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இன்னும் இதுவரை எந்த சலுகையும் ,அடையாள அட்டையும் கூட வழங்கவில்லை. பத்திரிகையாளர்கள் என்றால், அதற்கு அர்த்தம் தெரியாமல் தான் இன்று வரை இந்த துறை இருந்து வருகிறது. அதாவது ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றிய கூடியவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்கள். ஆனால், சிறிய நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்கள் இல்லை என்பதுதான் இந்த அரசாங்கம் மறைமுகமாக இத்தகைய சமூக நீதி இங்குதான் நடைபெற்று வருகிறது. மேலும் கார்ப்பரேட் பத்திரிகைகள் ஆட்சியாளர்களின் ஊதுகுழளாக இருந்து வருகிறது. உண்மைகள் மக்களிடம் மறைக்கப்படுகிறது அதனால் ஆட்சியாளர்களுக்கு அரசியல் லாபம் .மக்களுக்கு அரசியல் என்பது ஏமாற்றம்.

இதற்கு மறைமுகமான ஆதரவுதான் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் .மக்களுக்கு இன்னும் பத்திரிக்கை என்றால் என்ன ? என்று தெரியாது. அரசியலும் தெரியாது. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பேதம் இல்லாமல் 50 சதவீதம் இருக்கிறார்கள். அவர்கள் பக்கங்கள் பெரிதாகவும், அதிக பக்கங்களும் இருந்தால் பெரிய பத்திரிக்கை என்று நினைத்துக் கொள்கிறார்கள். பல அதிகாரிகளே அப்படித்தான் நினைக்கிறார்கள். இந்த உண்மை பத்திரிக்கையில் பணியாற்றக் கூடிய எழுவது சதவீத பத்திரிகையாளர்களுக்கு கூட தெரியாது. பலர் பத்திரிகையின் அடையாள அட்டை தான் பத்திரிக்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைவிட ஒரு கொடுமை செய்தி துறை அதிகாரிகள் கடந்த ஆட்சியில் ஒரு அரசாணை வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த அரசாணை பருவ இதழ்களுக்கு சென்னையில் RNI வாங்கி சென்னையில் பத்திரிக்கையை வெளியீடு செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு தமிழக அரசின் அடையாள அட்டை, அந்த பத்திரிகைகளுக்கு கொடுக்க முடியும் என்று அந்த அரசாணையில் தெரிவித்துள்ளது. இது பற்றி ஒரு பத்திரிக்கை கூட எழுதவில்லை. ஒரு பத்திரிகையாளர்கள் கூட கேள்வி கேட்கவில்லை .என்னைக் கூட சிலர், நீங்கள் ஆர் என் ஐ  சென்னைக்கு மாற்றுங்கள் என்று சில பத்திரிகையாளர்கள் தெரிவித்தார்கள் .

இதைப் பற்றி நானே பலமுறை கேள்வி கேட்டு ஆய்வு செய்தேன். அப்போது தான் எனக்கு புரிந்தது, இது ஒரு தவறான அரசாணை .இவர்கள் சென்னையில் RNI கொடுக்கவில்லை .அப்படி இருக்கும்போது எதற்காக சென்னையில் RNI  வாங்க வேண்டும்? இது பற்றி சாஸ்திரி பவனில் உள்ள ஒரு அதிகாரியிடம் விசாரித்த போது, இது தவறுதான் .டெல்லியில் கொடுக்கும் RNI க்கு இவர்கள் எப்படி அதற்கு அரசாணை போட முடியும்? ஒரு தவறான அரசாணை. அது பற்றி விரைவில் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம்.

 மேலும், பத்திரிக்கை துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்றவாறு பத்திரிகைகளின் தரம், செய்தியின் தரம் பிரிக்காமல் இந்த சலுகை விளம்பரங்கள் கொடுப்பது பொதுமக்களின் கோடிக்கணக்கான வரிபணத்தை தமிழக அரசு வீணடிக்கும் வேலை, என்று தொடர்ந்து மக்கள் அதிகாரம் சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது .

ஆனால், அதிகாரிகள் பத்திரிக்கை துறையில் அரசியல் இருப்பதால் அவர்களால் செயல்படுத்த முடியவில்லையா? இல்லை அலட்சியம் காட்டுகிறார்களா? என்பதும் தெரியவில்லை. மேலும், இந்த பத்திரிக்கை துறையில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு சமூக நீதி கிடைத்திட அன்புமணி ராமதாஸ் முன்வர வேண்டும்  என்பதுதான் சமூக நலன் சார்ந்த பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் முக்கிய கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *