செய்தித் துறையில் காலத்திற்கு ஏற்றவாறு விதிமுறைகளை மாற்ற வேண்டிய அவசியம் ,காலத்தின் கட்டாயம்.
நாட்டில் நடக்கின்ற பிரச்சனைகள், மக்களின் பிரச்சினைகள் ,நிர்வாக பிரச்சனைகள், எத்தனையோ பிரச்சனைகளை, பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால், பத்திரிகைகளுக்கே பிரச்சனை என்பதுதான் இன்றைய காலகட்டத்தில் பத்திரிகை துறையின் சமூக அவலங்கள் .
இந்த பத்திரிகை துறையில் இருக்கின்ற போட்டி வேற, எந்த துறையிலும் இல்லை .அப்படிப்பட்ட ஒரு துறை தான் பத்திரிகை துறை .இந்த துறையில் நடுத்தர மக்கள் நடத்துகின்ற பத்திரிகை, இதில் சமூக நன்மைக்காக, சமூக ஆர்வலர்கள் நடத்துகின்ற குறிப்பிட்ட சில பத்திரிகைகள். சிலர் நானும் பத்திரிகை நடத்துகிறேன் என்று கணக்குக்கு பத்திரிக்கை நடத்துபவர்களும் உண்டு.
இதிலும், ஒரு போட்டி. இந்தத் துறையை பற்றி செய்தியாளர் தகுதி இருக்கும்போதே, பலர் பத்திரிகை நடத்துகிறார்கள். அதனால் தான், இந்த பத்திரிகைகளில் குறிப்பிட்ட சதவீதம் தான், மக்கள் வாங்கிய படிக்கின்ற அளவுக்கு இருக்குமே ஒழிய, மீதியெல்லாம் பார்த்துவிட்டு கீழே போடுகின்ற பத்திரிகைகளாக தான் இருக்கிறது.
ஏன்? பெரிய பத்திரிகை என்று சொல்லிக் கொள்ளக்கூடிய இன்றைய தினசரி நாளேடுகள் கூட ,இதே லட்சணம் தான். சமீபத்தில் சில தினங்களுக்கு முன் எங்கள் பகுதி எம்எல்ஏ ஒருவரை டீக்கடையில் டீ சாப்பிடும் போது சந்தித்தேன். அவர் ஒரு நல்ல மனிதர், என்னை விசாரிக்கிறார். பத்திரிகை எப்படி போகிறது? இப்பொழுது யார் வாங்கி படிக்கிறார்கள்? அவையெல்லாம் ஒரு காலம், இப்போது செல்போனிலே பார்க்கிறார்கள் என்றார் உண்மை அது தான்.
இது தவிர, இந்த பெரிய பத்திரிகைகளில் போடுகின்ற செய்திக்காக வாங்குபவர்கள் மட்டும்தான், தற்போது பத்திரிகைகளை வாங்கிப் பார்ப்பார்கள், படிப்பார்கள் .அதாவது அந்த ஏரியா செய்திகளில் சிலவற்றை என்ன நடந்ததோ, அதை எடுத்து போட்டு வியாபாரம் நடக்கிறது. இப்படிப்பட்ட நிலைமை பத்திரிகை துறைக்கு வந்துள்ளது . ஆனால், பத்திரிகை துறையில் திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு, சாமானிய நடுத்தர மக்கள் நடத்துகின்ற இந்த பத்திரிகைக்கு ஏகப்பட்ட விதிமுறைகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
அந்த விதிமுறை ஒரு அரசு அடையாள அட்டை கொடுப்பதற்கு, இவ்வளவு விதிமுறைகளை செய்தி துறை அதிகாரிகள் தமிழ்நாட்டில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்திருக்கிறார்கள். அதாவது பத்தாயிரம் விற்பனை பிரிதிகளை அந்த பத்திரிகை விற்பனை செய்ததற்கான ஆதாரம், செய்தியாளர்களுக்கான சம்பளம் வங்கி கணக்கில் கொடுக்கப்பட்ட விவரம், இந்த பிரதிகள் அச்சடிக்கப்பட்ட விவரம் பற்றி பிரிண்டர் கொடுக்க வேண்டிய விவரம், இவையெல்லாம் சரியாக இருக்கிறது என்று ஆடிட்டர் கொடுக்க வேண்டிய விவரம், இது எல்லாவற்றையும் கொடுத்தால்தான், இந்த பத்திரிகையின் அரசு அடையாள அட்டை கொடுப்போம் என்ற விதிமுறையை மாற்றி இருக்கிறது திமுக அரசு.
இந்த விதிமுறை எல்லாம் யார் சொல்லி, இந்த விதிமுறையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்? என்பது எங்களைப் போன்ற 35 ஆண்டு காலம் பத்திரிகை அனுபவம் உள்ளவர்களுக்கு தெரியும். பத்திரிகை என்றால், தொலைக்காட்சி என்றால், படிக்காதவர்களிடம் இந்த விதிமுறை எல்லாம் செய்தித் துறை சொல்ல வேண்டும். எதைப் பார்க்க வேண்டுமோ, எதைக் கேட்க வேண்டுமோ, அதை எல்லாம் பத்திரிகை துறையின் விதிமுறைகளில் இல்லை .எந்த நோக்கத்திற்காக பத்திரிகை ?எதற்காக பத்திரிகை? ஏன் பத்திரிகை ?இந்த கேள்விகளுக்கு மட்டும் சரியான பதிலை இவர்கள் சொன்னால், நீங்கள் கொண்டு வந்த விதிமுறையை ஏற்றுக் கொள்கிறோம்.
அதாவது பத்திரிகை என்பது உண்மையை வெளிப்படுத்துவதற்கு ,அது பொய்யை சொல்லி பத்திரிகை அச்சு அடிப்பதற்கு அல்ல ,அந்த பத்திரிகையின் தரம், தகுதி உண்மையான செய்திகளை வெளியிடுகிறதா? மக்களுக்கான செய்திகளை வெளியிடுகிறதா? சமூக நன்மைக்கான செய்திகளை வெளியிடுகிறதா? இது தான் பத்திரிகையின் முதல் முக்கியத்துவமான ஒரு சப்ஜெக்ட்.
அடுத்தது வருவோம், இவர்கள் சொல்வது போல் சர்குலேஷன் என்ற ஒரு பொய்யை சொல்லி, சலுகை, விளம்பரங்களை அதுவும் தினசரி பத்திரிகைகளுக்கு தான் அந்த விதிமுறைகள் மற்ற பத்திரிகைகளுக்கு எல்லாம் இல்லை. இப்படி ஒரு விதிமுறையை கொண்டு வந்து, மத்திய மாநில அரசுகள் இந்த பத்திரிகை துறையை சீரழித்துக் கொண்டிருக்கிறது. அதாவது தினசரி பத்திரிகையை எடுத்துக் கொள்வோம்.
இந்த தினசரி பத்திரிகையில் ஒவ்வொரு பத்திரிகையிலும், ஒரு நாளைக்கு எத்தனை செய்திகள் மக்களுக்காக வருகிறது? மக்கள் நலன் சார்ந்த பத்திரிகையின் செய்திகள் எத்தனை? அரசு செய்திகள் எத்தனை? அதனால் மக்களுக்கு என்ன லாபம்? என்ன பயன்? அரசுக்கும், மக்களுக்கும் சொன்ன செய்திகள் எத்தனை ?இதையெல்லாம் பட்டியலிட்டு பாருங்கள். அதில் எத்தனை உண்மை? எத்தனை பொய்? இதையெல்லாம் ஆய்வு செய்வதற்கு பாமர மக்களுக்கோ அல்லது படித்தவர்களுக்கும் கூட இந்த விவரம் புரியாது.
இதே துறையில் அனுபவம் மிக்கவர்கள், விவரம் அறிந்தவர்கள் ,குறிப்பிட்ட சதவீதம் இருப்பார்கள். அவர்களுக்குத்தான் இந்த உண்மை புரியும். அடுத்தது இந்த பத்திரிகைகளின்தரம் பகுதி உண்மை நடுநிலை இதைப்பற்றி ஆய்வு செய்யக்கூடிய நடுநிலையான ஒரு கூட்டமைப்பு அரசியல் அதில் ஒரு துளி கூட இல்லாமல் ,ஏற்படுத்துங்கள். அவர்கள் இந்த துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் ஆய்வு செய்யட்டும் ஒவ்வொரு பத்திரிகைக்கும் அதன் தரம், தகுதி என்னவென்று அப்போது கொடுங்கள்.
எந்தெந்த பத்திரிகைக்கு என்னென்ன சலுகை? விளம்பரம் அதனுடைய தரம், தகுதிக்கு ஏற்றவாறு கொடுங்கள். தவறில்லை .மேலும், தற்போதுள்ள மத்திய மாநில அரசின் விதிமுறை வியாபார நோக்கத்திற்கான விதிமுறைகளாகத்தான் உள்ளது. அது சமூக நன்மைக்கான விதிமுறைகள் அதில் இல்லை .இந்த விதிமுறைகளை வைத்து, சாமானிய நடுத்தர மக்களால் கொண்டு வரும் பத்திரிகைகள், இவர்கள் கேட்கும் விற்பனை பிரிதிகள் கொண்டு வருவது மிக மிக கடினம்.
தவிர, சர்குலேஷன் என்பது சலுகை ,விளம்பரத்தால் அதாவது மக்களின் வரிப்பணத்தில் இந்த தினசரி பத்திரிகைகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் எந்த பயனும் மக்களுக்கு இல்லை. மக்களின் வரிப்பணம் தான் கோடி கணக்கில் வீணடிக்கப்படுகிறது. மேலும், இப்படி எல்லாம் பத்திரிகை நடத்த வேண்டும் என்றால், ஒருவர் பிளாக் மணி வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால், மணல் கொள்ளையில் சம்பாதித்த பணத்தை வைத்து பத்திரிகை நடத்த வேண்டும். இல்லை என்றால், சாராய பணத்தில் பத்திரிகை நடத்த வேண்டும். அதுவும் தவிர்த்து, அரசியலில் கொள்ளை அடித்து பத்திரிகை நடத்த வேண்டும்.
இது தவிர, இவர்கள் சொல்லும் விதிமுறைகளை வைத்து பத்திரிக்கை நடத்த வேண்டும் என்றால், அது மக்களுக்காக நடத்துகின்ற பத்திரிகையாக இருக்காது. ஆட்சியாளர்களின் பொய்யை சொல்லிக் கொண்டிருக்கும் பத்திரிகைகள் அல்லது அரசியல் கட்சிகள் சொல்லுகின்ற பொய்யை சொல்லும் பத்திரிகைகள், மேலும், ஆட்சியாளர்கள் போடுகின்ற டிராமாவும், அரசியல் கட்சியினர் போடுகின்ற நல்லவர்கள் வேஷமும், இதைதான் அந்த பத்திரிகைகள் சொல்லிக் கொண்டிருக்கும். இதுதான் பெரிய பத்திரிகை. இதற்கு மேல் பத்திரிக்கை இல்லை என்று ஒரு பொய்யை சொல்லிக் கொண்டு பத்திரிக்கை துறையில் உள்ள ஒரு சமூக நீதி ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு சமூக நீதி .
அதனால், பத்திரிகை எதற்காக? எந்த நோக்கத்திற்காக? என்பதை புரிந்து விதிமுறைகளை பத்திரிகை துறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அப்போதுதான் உண்மையான செய்திகள் மக்களுக்கு போய் சேரும். நேர்மையானவர்கள், தகுதியானவர்கள் ,மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்கள் ,யார் என்பது தெரிந்து, மக்கள் அவர்களை தேர்வு செய்வார்கள் .அதுதான் நல்லாட்சிக்கு, அதாவது மக்களின் ஆட்சிக்கு முக்கியத்துவம் மக்கள் கொடுப்பார்கள் .அதற்கு தகுதியான பத்திரிகைகள் தேவை.
இங்கே தகுதியற்ற பத்திரிகைகள் எல்லாம் பொய்யை சொல்லிக் கொண்டு பெரிய பத்திரிக்கை என்று வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த உண்மைகள் 90 சதவீதத்திற்கு மேல் பத்திரிகை துறையில் இருப்பவர்களுக்கும், செய்தித் துறை அதிகாரிகளுக்கும், தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் இன்று மந்திரிகள் செய்தி வந்துள்ளதா? அவருடைய போட்டோ வந்துள்ளதா? அந்த பத்திரிகைகளின் மூலம் கமிஷன் வந்துள்ளதா? இதுதான் அவர்களுக்கு தெரியும். தவிர,
தமிழக அரசு கொண்டுவந்துள்ள ஒரு அரசு அடையாள அட்டைக்காக RNI சென்னையில் பதிவு பெற்றிருக்க வேண்டும். சென்னையில் பப்ளிஷிங் இருக்க வேண்டும். இது என்ன நியாயம் என்பது தெரியவில்லை. அதாவது ஒருவர் சென்னையில் அந்த பத்திரிகையை பதிவு செய்தால் தான், அது பத்திரிகை. மற்ற இடங்களில் பதிவு செய்தால் அது பத்திரிகை இல்லை. அதை யாரும் வாங்கி படிக்க மாட்டார்கள், அப்படி என்று எடுத்துக் கொள்ளலாமா ?அல்லது அங்கு வெளியிட்டால்தான் அது பத்திரிகை மற்ற இடங்களில் வெளிவந்தால் அது பத்திரிகை இல்லை என்று மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? எவ்வளவு முட்டாள்தனமான காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு அறிவு சார்ந்த பத்திரிகை துறையில் எவ்வளவு கீழ்த்தரமான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது? இப்படிப்பட்ட பல பிரச்சனைகளால் இன்றைய பத்திரிகை துறை இருந்து வருகிறது. இதையெல்லாம் விட ஒரு கொடுமை மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகளுக்கும், வியாபார நோக்கம் கொண்ட பத்திரிகைகளுக்கும் கொடுத்து வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எப்படி மத்திய மாநில அரசின் செய்தித்துறை ஏற்றுக்கொள்கிறது?
மேலும் ,கடந்த ஆட்சியில் செய்து துறையில் 16 கேள்விகள் ஆர்டிஐ மூலம் கேட்டேன். அதற்கு பதில் இல்லை. தற்போது 42 கேள்விகள் கேட்டேன் அதற்கு ஒரே வரியில், தங்களது கேள்வி அதிகமாக உள்ளதால், பதில் அளிக்க முடியாது என்று பதில் வந்துள்ளது .இருப்பினும், மேல்முறையீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது .அங்கிருந்து என்ன பதில் வருகிறது? என்பதை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும். இதற்கு நீதிமன்றம் தான் முக்கிய தீர்வாக இருக்கும். அதுவும்,
ஒரு நீதிபதிகளல்ல, ஐந்து நீதிபதிகள் அமர்வது தான் இதை சரி செய்ய முடியும். அப்படி சரி செய்தால், நாட்டில் நல்லாட்சி, மக்களுக்கான ஆட்சி, மக்களுக்கான சமூக நீதி, பத்திரிகைகளுக்கான சமூக நீதி கிடைக்கும் என்பது சமூக ஆர்வலர்கள், எங்களைப் போன்ற சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகளின் நம்பிக்கை.