பத்திரிகை துறையின் தவறான விதிமுறைகளை நீதிமன்றம் தான் சரி செய்ய முடியுமா?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் மத்திய மாநில செய்திகள் ரிசன்ட் போஸ்ட்

பத்திரிகை துறையில் உள்ள தவறான விதிமுறைகள் ,தகுதியான பத்திரிகையாளர்களுக்கும் ,பத்திரிகைகளுக்கும் ஒரு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. அதாவது, இந்தத் துறையில் தகுதி இல்லாதவர்களும், போலிகளும் போட்டி போடும் இடமாக இன்றைய பத்திரிகை துறை இருந்து வருகிறது. இதை சரி செய்ய முடியாமல், செய்தித் துறையை அதிகாரிகள் திணறுகிறார்கள்.

 இதற்கு ஒரு புறம் இதனுள் அரசியல், ஊழல், அதிகாரம், கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள், இப்படி பல விதமான பிரச்சனைக்குரிய இடமாக இன்றைய பத்திரிகை துறை இருந்து வருகிறது. இதை சரி செய்ய முடியாமல் அரசியல் தலையீடு அதிகமாக இருந்தால், அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியாது. இதனால், போலி பத்திரிகையாளர்கள், ரவுடிகள், மோசடி பேர்வழிகள், பிளாக்மெயில்கள், இந்த பத்திரிகையை மதிக்க தெரியாதவர்கள், பணம் மட்டுமே குறிக்கோளாக உள்ளவர்கள், அத்தனை பெரும் சேர்ந்து இந்தத் துறையை கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை எப்படி இந்த அரசாங்கம் சரி செய்யப் போகிறது?

 முதலில் அதிகாரிகளுக்கு பத்திரிகை துறை பொதுநலமா? அல்லது சுயநலமா? என்பதை அவர்கள் விளக்கவில்லை .அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அரசு செய்திகள், அமைச்சர் செய்திகள் இதுதான் தெரிகிறது. இதிலே போலிகளும் உள்ளே நுழைந்து கொண்டு அவர்கள் கொடுக்கின்ற சவுண்டு, அவர்களுக்கு ஒரு பெரும் தலைவலி தான் .இதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று இவர்களுக்கு தெரியவில்லை .இதற்கு முக்கிய காரணம், இந்த பத்திரிகை துறையில் இதுவரை இருந்து வரும் தவறான விதிமுறைகள். இந்த விதிமுறைகளை பின்பற்றி இதுதான், பொதுமக்களிடம் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

பத்திரிகை இப்படி தான் கொண்டு வர வேண்டும் என்று செய்தித்துறை இருக்குமானால், இன்னும் 50 ஆண்டுகள் சென்றாலும், இதை சரி செய்ய முடியாது. மேலும், காலுக்காக தான் செருப்பு வேண்டுமே தவிர ,செருப்புக்காக காலை தேட முடியாது. அதனால், போலிகள் எது ?சமூக நலன் சார்ந்தது எது? அரசியல் கட்சி சார்ந்தது எது? வியாபார நோக்கம் சார்ந்தது எது? அனைத்தையும் தரம் பிரியுங்கள். இது தவிர, காப்பீ டு பேஸ்ட் (COPY TO PASTE) பத்திரிகைகள் எத்தனை? ஜெராக்ஸ் போட்டு சர்குலேஷன் காட்டும் தினசரி பத்திரிகைகள் எத்தனை? ஜோதிட பேப்பர் சைஸ் போட்டு, அதற்கும் பஸ் பாஸ் கேட்கும் பத்திரிகைகள் எத்தனை?

மேலும், தற்போது கூட கோவையில் RTI தகவல் கேட்ட பத்திரிகை ஆசிரியர் ஒருவர் அரசு ஊழியரிடம் 10 லட்சம் கேட்டு மிரட்டிதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த போலி பத்திரிகையாளர்கள் எல்லாம் சேர்ந்து சங்கங்களை அமைத்துக் கொண்டு, டிரஸ்ட்களை அமைத்துக் கொண்டு, சட்டத்தை ஏமாற்றுவது எப்படி? அதிகாரிகளை மிரட்டுவது எப்படி? இவையெல்லாம் எப்படி பத்திரிகை துறையில் பொதுநலனுக்காக பாடுபடும்? இவையெல்லாம் எப்படி ஊழலுக்கு எதிராக சமூக குற்றங்களுக்கு எதிராக போராடும்?இதையெல்லாம் சரி செய்தால்தான், பத்திரிகை துறையை சீர் செய்ய முடியும்.

மேலும், அரசியல் சுயநலமும் ,அதிகார சுயநலமும், ஆட்சியாளர்களின் சுயநலமும், பத்திரிகை துறைக்கு தேவையற்றது. இதை நீதிமன்றம் சரி செய்தால்தான் முடியும். சமீபத்தில் ஒரு சில செய்தி துறை அதிகாரிகளை சந்தித்து, இது பற்றி விவாதித்தேன். அவர்கள் சொல்வது ஒரு மாவட்டத்தில் சுமார் 500 பேர் வருகிறார்கள். இதில் எவ்வளவு பேர் செய்தி போடுவார்கள்? இது காசுக்காக கூலிக்கு மாரடைக்கும் கூட்டம் போல் உள்ளது என்கிறார்கள்.

 அடுத்தது நாங்கள் மாவட்டத்திற்கு RNI பதிவு பெற்ற பத்திரிகைகளுக்கு அரசு அடையாள அட்டை கொடுத்தால், ஒரே ஆள் கூட 5 பத்திரிக்கைக்கு வெளியிட்டார்களாக  இருக்கிறார்கள். அந்த ஐந்து பத்திரிகைக்கும் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. அது எப்படி வரும்? என்பதுதான், எங்கள் கேள்வி? ஒரு பத்திரிகை நடத்துவதற்கே தகுதியானவர்கள் போராடிக் கொண்டிருக்கும்போது ,தகுதியற்ற கூட்டம் எப்படி ஐந்து பத்திரிகையை நடத்த முடியும்? அல்லது இரண்டு பத்திரிகை நடத்த முடியும்? நானும் நடத்துகிறேன் என்று பத்திரிகையை காட்ட முடியுமே தவிர, அதை ஒழுங்காக செய்ய முடியாது. தற்போதைய

 இந்த போட்டி போலிகளுக்கும், தகுதியானவர்களுக்கும் நடக்கின்ற பத்திரிகை போட்டியாக பத்திரிகை துறையில் உருவெடுத்துள்ளது. அரசியல் தனக்கு வேண்டிய பத்திரிகைகள் என்று இதிலே உள்ளே வராமல் இருந்தால், நிச்சயம்

இந்த பத்திரிகை துறையை பொதுநல துறையாக மாற்றியமைக்க முடியும்.இந்த போலிகளை அதிகாரிகளால் தூக்கி எறிய முடியும். அடுத்தது, அரசு அதிகாரிகள் சுயலாபங்களுக்காக ஊரப்பாக்கத்தில் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தால் ,ரவுடிகளுக்கு அரசு அடையாள அட்டை கொடுக்கப்பட்டது, காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. அது எப்படி கொடுத்தார்கள் ?என்ற வழக்கு இன்றும் நீதிமன்றத்தில் சென்று கொண்டிருக்கிறது. ரவுடிகளுக்கு கொடுத்த அரசு அடையாள அட்டை, 20, 30 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றியவர்களுக்கு கொடுக்கக் கூடாதா? அதற்கு சென்னையில் RNI வாங்கணும், சென்னையில் வெளியீடு செய்ய வேண்டுமா?

இங்கே தவறு எல்லாம் பணத்திற்காகவும், தனக்கு வேண்டியவர்களுக்காகவும் செய்துவிட்டு, தகுதியானவர்கள் கேட்கும் போது, இல்லாத சட்டங்களை சொல்கிறார்கள். உருவாக்குகிறார்கள். இது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும்,

இதில் பாதிக்கப்படுபவர்கள் தகுதியான பத்திரிகையாளர்களும், பத்திரிகைகளும் மட்டுமே, அரசுக்கும் அதைப் பற்றி கவலை .இல்லை. ஏன்? தகுதியான பத்திரிகைகள், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள், மக்களிடம் உண்மையை வெளிப்படுத்துகிறது .அது கவலையாக உள்ளது. அதுமட்டுமல்ல,

கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அதன் செய்தியாளர்கள், இந்த பத்திரிகைகள் வளர்ச்சி பெறக்கூடாது என்பதில் அவருடைய நோக்கமாக இருக்கிறது. இதற்கு காரணம், கோடிக்கணக்கில் சலுகை, விளம்பரங்களை அரசு அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுத்து விட்டு, அனுபவித்து கொள்வார்கள். இது எவ்வளவு பெரிய சுயநலம்?

அதனால் ,இதற்கு ஒரே வழி, நீதிமன்றம் நடுநிலையான தீர்ப்பு வழங்கினால், பத்திரிகை துறையை சீர் செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *